முருகன் App
சஷ்டி காவடிச்சிந்து
சிதம்பரம் ஏ.எம். நடராச முதலியார்
வேண்டுதல்2 / 7
சஷ்டி காவடிச்சிந்து · சிதம்பரம் ஏ.எம். நடராச முதலியார்

வேண்டுதல்

ஆசிரியம்✓
கந்தமா தனகிரி யெனுமுயர் பஞ்சாக்ஷரக்
காவடியைத் தோளி லேந்தி
கலையோதும் திருநாவில் ஆறுபடை வேல்கொண்டு
கவினிடைகயி லிரதம் பூட்டி
வந்தடியர் பலர்சூழ வாத்திய மொலித்திட
வளர்சஷ்டி காவ டியுடன்
வரமிகும் ஏகாம்ப ரேசர்சந் நிதிவிட்டு
மகிழ்ஒற்றி யாலயஞ் சேர்ந்(து)
எந்தஉல கும் புகழ திருமூலட் டானத்தில்
இலகு முருகா உனக்கு
இணையிலாக் காவடிச மர்ப்பித்து ஆண்டுதொறும்
இஷ்டமாய்ப் பூசை யாற்றி
சந்ததமும் பத்திசெயும் வேல்சாமி மாணவன்
சாதுசிவ லிங்க வேளின்
தன்மரபெலாம் ஓங்கிப் பொன்பொருள்வை
போகமுடன்
சார்ந்துய்ய அருள்புரி வையே.