முருகன் App
சஷ்டி காவடிச்சிந்து
சிதம்பரம் ஏ.எம். நடராச முதலியார்
வடிவாம்பிகை துதி4 / 7
சஷ்டி காவடிச்சிந்து · சிதம்பரம் ஏ.எம். நடராச முதலியார்

வடிவாம்பிகை துதி

ஆசிரியம்✓
கணிகொண்ட பஞ்சலட் சணவிதியெலாந் தேர்ந்து
கவிபாடும் வழிய றிகிலாக்
கசடனே யாயினும் ஆசைவெள் ளத்தினால்
கழறும்என் சொன்மாலை யேற்(று)
அணிகொண்ட எண்டிருவின் வாழ்வும் தீர்க்காயுளுடன்
அண்டினோர்க் குதவி வரவும்
அரியபே ரானந்த அடியர்பணி செய்யவும்
ஆசையீ தன்றிப் பொல்லாப்
பிணிகொண்டி டாதபடி வாழவும் நின்பாத
பிரசமலர் ஏத்தித் தொழவும்
பிரியமிதென் விண்ணப்பம் சக்திசிவ சாமுண்டி
பெரியமனம் செய்தடி மைபால்
மணிமந்திர ரூபியே திருவருள்செய் இதுதருணம்
மகிழ்சென்னை யொற்றி நகர்வாழ்
மதானந்த கர்க்குரிய நிதியாய் அமைந்தொளிரும்
வடிவாம்பிகைத் தெய்வமே.