முருகன் App
திருமுருகன்
அலோர் ஸ்டார் ரெ. இராமசாமி
ஆடும் மயிலேறும் ஆண்டவன்5 / 6
திருமுருகன் · அலோர் ஸ்டார் ரெ. இராமசாமி

ஆடும் மயிலேறும் ஆண்டவன்

✓
வானவர் போற்றிடும் வேலனாம் — குற
வள்ளிதெய் வானைமண வாளனாம்
தானவர் தடிந்ததண் டாயுதன் — வீரத்
தடந்தோ ளிலங்கும்வே லாயுதன் வானவர்
✓
கானச் சுவையுடன் பாடுவோம் — நாம்
கந்தன் கருணையை நாடுவோம்
ஆனனம் ஆறினைக் கொண்டவன் — அவன்
ஆடும் மயிலேறும் ஆண்டவன் வானவர்
✓
பழத்தால் ஆண்டியாய்ப் போனவன் — அந்தப்
படிவமாய் மலையகம் வாழ்பவன்
செழிப்பான செல்வங்கள் தருபவன் — என்றும்
சிறப்பான இறையன்பை ஏற்பவன் வானவர்
✓
தண்ணீர் மலையென்னும் தலத்தினில் — அருள்
தண்டா யுதனென்னும் பெயரினில்
வண்ணத் திருக்கோயில் கொண்டான் — தாள்
வணங்குவோம் அவனருள் உண்டாம் வானவர்