முருகன் App
திருமுருகன்
அலோர் ஸ்டார் ரெ. இராமசாமி
ஈப்போ தண்டாயுதபாணி4 / 6
திருமுருகன் · அலோர் ஸ்டார் ரெ. இராமசாமி

ஈப்போ தண்டாயுதபாணி

1✓
தெய்வத் தன்மை திகழழகு
சீரார் இளமை மகிழ்ச்சியுடன்
பெய்யும் இனிமை மணமென்னும்
பெருமை கூர்ந்த முருகோனே!
ஐயை இணைத்து மகிழ்ந்ததனால்
ஆறு முகமாய் ஆனவனே!
உய்யும் வழிகள் உதவிடுவாய்!
உள்ளத் திருந்தே அருள்புரிவாய்!
2✓
அகரம் படைப்பை ஆக்கிடுமாம்
ஆன்ற உகரம் காத்திடுமாம்
மகரம் ஒடுக்கம் செய்திடுமாம்
மகிமை கொண்ட எழுத்தினைந்த
சிகரம் மறையாம் ஓங்காரம்
செம்மை வடிவுச் செவ்வேளே!
நுகரும் நல்வாழ் வருள்வாயே!
நுந்தாள் பணிந்தேன் காப்பாயே!
3✓
தனக்காய் எதையும் கருதாமல்
தன்னை நாடும் அடியார்க்குக்
கனஞ்சேர் இன்பம் செல்வங்களைக்
கதித்துத் தரவே ஈப்போவில்
வனப்பாய் வலக்கை தண்டேற்ற
வடிவேல் தண்டா யுதபாணி!
தினமும் உன்னைச் சேவித்தேன்
சிறந்த வாழ்வைத் தந்தருளே!