முருகன் App
திருமுருகன்
அலோர் ஸ்டார் ரெ. இராமசாமி
ஆறுபடை வீடுகள்2 / 6
திருமுருகன் · அலோர் ஸ்டார் ரெ. இராமசாமி

ஆறுபடை வீடுகள்

1திருப்பரங்குன்றம்✓
பூதத்தால் நக்கீரன் பொன்றுங்கால் தன்னுயிரை
ஆதரவாய்க் காத்தே அருள்புரிய — போதமுள்ள
ஆற்றுப் படைநூலை ஆக்கிப் பரங்குன்றில்
போற்றினான் வேலனடிப் போது.
2திருச்சீரலைவாய்✓
சூரனை வென்றதோர் சோபனத்தைக் கொண்டாட
வீர முருகனுக்கு வெற்றிவிழா — ஆரணங்கள்
ஆர்ப்பொலிக்கச் செந்தூரில் ஆற்றியவான் தேவரைக்
கார்த்திகையன் காத்தான் கனிந்து.
3திருஆவினன்குடி✓
மாங்கனியைத் தந்தைபால் வாங்க இயலாமல்
ஏங்கிப் பழநிமலை ஏற்றுறையும் — காங்கேயன்
பத்மபதம் சிந்தித்தால் பாவமெலாம் நீங்கிப்பின்
இத்தரையில் உய்வோம் இனிது.
4திருவேரகம்✓
ஓங்காரத் துட்பொருளை ஓராசான் போலிருந்து
பாங்காய்ச் சிவன்பால் பகர்ந்ததால் — ஓங்கும்
திருவே ரகத்துவாழ் சேய்சாமி நாதன்
திருப்பெயர் பூண்டான் சிறந்து.
5பழமுதிர்சோலை✓
சுவையார் பழமுதிர் சோலைமலை வாழும்
சிவனார் அருளொளிகூர் சேய்நம் — நவையனைத்தும்
நீக்கித் திருவருளால் நீடூழி வாழவைப்பான்
ஊக்கமுடன் போற்றிவரின் ஓர்ந்து.
6குன்றுதோறாடல்✓
குன்றுதோ றாடலெனும் குன்றெல்லாம் கோயிலாய்
என்றுமே கொண்டான் எழில்முருகன் — என்றாலும்
செவ்வேள் துதிப்பார்க்குச் சீரருளைப் பெய்துநலம்
ஓவ்வும் தணிகை உயர்வு.