முருகன் App
திருமுருகன்
அலோர் ஸ்டார் ரெ. இராமசாமி
காப்பு1 / 6
திருமுருகன் · அலோர் ஸ்டார் ரெ. இராமசாமி

காப்பு

1✓
நெண்டாரும் பண்ணை நிறையலோர் ஸ்டார்மேவு
தண்டா யுதபாணி தாளிணையைக் — கண்டுநிதம்
சிந்தித்து வந்தித்தால் சிந்தித்த தத்தனையும்
சந்தித்துத் தந்திடுமே தான்.
2✓
யுவராச னாக உமையாளோர் பாக
சிவராசன் தந்த திருச்சேயன் — பவநாசன்
மெய்ஞ்ஞான பண்டிதனாம் வேல்முருக னைப்பணிந்தால்
எஞ்ஞான்றும் வாழ்வருளு வான்.
3✓
கந்தனே! பன்னிருகை காவலனே! கான்குறத்தி
சிந்தை தனிலுறையும் தெய்வமே! — எந்தன்
இடரகற்றி ஏற்றமுற இன்னருளை ஈயத்
தடைஎன்ன சாற்றிடுவாய் சற்று.
4✓
ஆவினத்தைக் காக்குமொரு ஆட்டிடையர் சேயைப்போல்
தாவிமரத் தேஇருந்து சண்முகன் — பூவிலுயர்
செவ்வியோர் போற்றுகின்ற தீந்தமிழின் தேன்பருக
ஔவைகண் முன்னிருந்தான் ஆங்கு.
5✓
ஔவையரை அன்றொருநாள் ஆறுமுகன் கானகத்தில்
நவ்வக் கனியதனை நல்குமுனம் — ஒவ்வுவையோ
செவ்வையாய்ச் சுட்டதோசு டாப்பழமோ சிந்தித்து
மௌனமில் லாதே வழுத்து.
6✓
மின்னிலங்கு வேல்முருகன் வேணுமா சுட்டபழம்?
தின்னச் சுடாப்பழந்தான் தேவையா? — என்னவென
நௌவிவிழி யாள்சுட்ட நற்பழத்தா வென்றாளவ்
ஔவைகனிக் காசையால் ஆங்கு.