முருகன் App
திருமுருகன்
அலோர் ஸ்டார் ரெ. இராமசாமி
தண்ணீர் மலைத் தண்டாயுதன்6 / 6
திருமுருகன் · அலோர் ஸ்டார் ரெ. இராமசாமி

தண்ணீர் மலைத் தண்டாயுதன்

✓
தண்ணீர்மலைத் தண்டாயுதன் பாதம்
தண்டனிட்டே ஓதிடுவோம் கீதம்
எண்ணத்தில் அவனுருவைக் கண்டு
இயற்றிடுவோம் எந்நாளும் தொண்டு தண்ணீர்
✓
பாலமுரு கன்மீதில் பக்தி
பண்ணுவோம் அவனணியும் சக்தி
வேலின் பெரும்புகழைப் பாடி
வேண்டுவோம் அவனருளை நாடி தண்ணீர்
✓
சீர்மல்கும் பினாங்குநகர் தன்னில்
சிங்காரப் பூமலையின் அருகில்
பார்புகழும் தண்ணீர்மலை யதனில்
பாங்காக வீற்றிருக்கும் வேலன் தண்ணீர்
✓
ஆனைமுகனுக் கிளைய தம்பி
அழகே உருக்கொண்ட நம்பி
ஞானம் நமக்கருள வேண்டி
நயந்து கேட்டிடுவோம் ஈண்டி தண்ணீர்