முருகன் App
வீரவேல் வணக்கம்
அ. சுப்பிரமணிய பாரதி
குன்றுதோறாடல் (திருத்தணி)5 / 6
வீரவேல் வணக்கம் · அ. சுப்பிரமணிய பாரதி

குன்றுதோறாடல் (திருத்தணி)

5✓
கொன்றைசேர் சடைகள் ஆடக் கொடியிடை உமையாள் காண
மன்றிலே ஆடல் கொண்ட மகதேவன் வியந்து வாழ்த்தக்
குன்றுதோ றாடல் காட்டும், குமரவேள் மலர்க் கரத்து
வென்றிசேர் சக்தி வேலை வேண்டுவ(து) எமக்கு வேலை.