முருகன் App
வீரவேல் வணக்கம்
அ. சுப்பிரமணிய பாரதி
திருஆவினன்குடி (பழனி)3 / 6
வீரவேல் வணக்கம் · அ. சுப்பிரமணிய பாரதி

திருஆவினன்குடி (பழனி)

3✓
மாதவன் மகிழ்ந்(து) அளித்த மடந்தையர் இருபால் மேவ
மேதகு மயிலின் மேல்ஓர் வெற்பினில் உதயமான
ஆதவன் எனவே போற்ற ஆவினன் குடியில் வாழும்
நாதன்செவ் வேளின் வேலை நாடுவ(து) எமக்கு வேலை.
திண்ணனார் சுவைத்(து) அளித்த தீஞ்சுவைக் கறிசுவைத்த
அண்ணனார் அணைத்துக் கண்ணே! அப்பனே! நீயே நேய
வண்ணமாம் பழம்என்று ஓத மகிழ்ந்துதென் பழனி வந்த
விண்ணவன் கரத்து வேலை விளம்புவ(து) எமக்கு வேலை.