முருகன் App
வீரவேல் வணக்கம்
அ. சுப்பிரமணிய பாரதி
திருப்பரங்குன்றம்1 / 6
வீரவேல் வணக்கம் · அ. சுப்பிரமணிய பாரதி

திருப்பரங்குன்றம்

1✓
சீர்த்தியாய்த் துதிகள் பாடித் திருவடிக்(கு) மலர்கள் தூவி
ஆர்த்தியாய் வழிபாடாற்றும் அன்பரின் இதயக் கோயில்
மூர்த்தியாய் விளங்கும் எங்கள் முதிர்பரங் குன்றின் வாழ்வாம்
கார்த்திகே யன்கைவேலைக் காண்பதே யெமக்கு வேலை.