முருகன் App
கதிரைமலைப்பள்ளு
அருவி வெட்டுதல்51 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3மூத்தபள்ளி இளையபள்ளி குடும்பன்4மூத்தபள்ளி வருதல்5இளையபள்ளி வருதல்6பள்ளன் வருதல்7பள்ளியர் தத்தம் நாட்டுவளம் கூறல்8இளையபள்ளி தன் ஆண்டையின் பெருமை கூறல்9மூத்த பள்ளித் தன் ஆண்டையின் பெருமை கூறல்10குயிற் கூக் கேட்டல்11மழை பெய்ய வரங் கேட்டல்12மழை பெய்ய வரங் கொடுத்தல்13மழை பெய்தல்14ஆற்றில் வெள்ளம் வருதல்15குறிஞ்சி16பாலை17முல்லை18மருதம்19நெய்தல்20வெள்ளத்தில் ஓடும் மீன்வகை21பண்ணைத் தலைவன் வரவு22பள்ளியர் பண்ணைத் தலைவனை வணங்க வருதல்23பண்ணைக்காரனாரை வணங்குதல்24மூத்தபள்ளி பண்ணைத் தலைவனிடம் முறையிடுதல்25இளையாள் எதிர்மாற்றம் கூறுதல்26மூத்தபள்ளி கூற்று27இளையபள்ளி மாற்றம்28மூத்தபள்ளி கூற்று29இளையபள்ளி மாற்றம்30மூத்தபள்ளி கூற்று31இளையபள்ளி மாற்றம்32மூத்தபள்ளி கூற்று33இளையாளைப் பண்ணைத் தலைவன் உரப்பல்34பள்ளன் மூத்தபள்ளியை நேரஞ்சென்றதற்குக் காரணம் கேட்டல்35அவள் ஆண்டைக்குக் கூறுதல்36பள்ளனை விளித்துப் பண்ணைத்தலைவன் பண்ணைச்செயல் வினவல்37பள்ளன் அவைகூறல்38மூத்தபள்ளி முறையீடு39பள்ளன் தொழுவில் மாட்டுண்டு கிடக்க மூத்தபள்ளி வந்து கண்டு கூறுதல்.40அவன் அவளை மன்னித்தல் கேட்க வேண்டுதல்41அவள் அவனை மீட்கவேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல்42தொழுவிலிருந்து விடுபட்ட பள்ளன் விதை முதலிய வளம் கூறல்43நெல்லு வகை44நெல் விதைக்கும்படி கூறுதல்45வயலுழும்போது பள்ளனைக் காளைமுட்டப் பள்ளன் விழுந்து மூர்ச்சித்த செய்தி பண்ணைத்தலைவர்க் கறிவித்தல்46பள்ளிகள் புலம்பல்47பள்ளனெழுந்திருத்தல்48பண்ணைச்செயல் காணவருமாறு பண்ணைத்தலைவனை வேண்டுதல்49நாற்று நடுதல்50நெல் விளைதல்51அருவி வெட்டுதல்52பொலிகுவித்துப் பொலிகாணப் பண்ணைத்தலைவனை அழைத்தல்53பள்ளன் மூத்த பள்ளியைக்குறித்து முறையிடுதல்54மூத்தபள்ளி முறையீடு55பள்ளிகள் ஒருவரையொருவர் ஏசல்56பண்ணைக்காரன் சண்டையை விலக்குதல்57வாழ்த்து
கதிரைமலைப்பள்ளு

அருவி வெட்டுதல்

104✓
தேனவிழ் பூந்தொடை மார்பன் குகன்
தென்கதி ரைப்பதிக் கிறைவன்
வானவர் போற்றிடு முருகன் மகிழ்
மாவிலி கங்கை வயலில்
கூனரி வாள்கை யெடுத்தே செந்நெல்
கூட்டமிட்டே கொய்யத் தொடுத்தே
தானருவி விரைந்து வெட்டு மந்தத்
தன்மை பாரும் பள்ளிரே.
105✓
தொண்டர்களுக் கருள் கொடுப்போன்—அன்பர்
தொல்வினை பற்றறக் கெடுப்போன்
மண்டலம் புகழ் முருகன்—குகன்
மாவிலி கங்கை வயலிலே
கண்டவர் களெட்டிப் பார்க்கப்—பண்ணைக்
காரனார் கண்ணுக்கு மேற்கத்
திண்டிற மாய்வெட்டித் திரும்பிப்—போகுஞ்
சித்திரம் பாரும் பள்ளிரே.
106✓
கந்தமி குந்ததார் மார்பன்—கறைக்
கண்டனு கந்தகு மாரன்—வைவேற்
கையன்—அன்பர்—மெய்யன்—மிகு
துய்யன்—செய்ய—மெய்யன்
சிந்தைநி னைந்தவர்க் கன்பன்—உற்றுத்
தேடாத வர்க்கொரு வம்பன்—செங்கை
வேலன்—உமை—பாலன்—அசுரர்ச்
செற்றிடு காலன் நல் வயலில்
இந்தெனு மென்னநுதல் மானார்—மத
லீலைக்கி சைந்தசெந் தேனார்—கயல்
விழியார்—குழல்—மொழியார்—கூந்தல்
நெளியார்—பசுங்—கிளியார்
தெந்தன தெந்தன வென்றே—வெட்டிச்
சின்ன நெடுங்குர லொசியச்
சிந்தை மகிழ்ந்து கொண்டாடி—வயற்
செந்நெ லருவிகொய் தாரே.