முருகன் App
கதிரைமலைப்பள்ளு
பள்ளிகள் புலம்பல்46 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3மூத்தபள்ளி இளையபள்ளி குடும்பன்4மூத்தபள்ளி வருதல்5இளையபள்ளி வருதல்6பள்ளன் வருதல்7பள்ளியர் தத்தம் நாட்டுவளம் கூறல்8இளையபள்ளி தன் ஆண்டையின் பெருமை கூறல்9மூத்த பள்ளித் தன் ஆண்டையின் பெருமை கூறல்10குயிற் கூக் கேட்டல்11மழை பெய்ய வரங் கேட்டல்12மழை பெய்ய வரங் கொடுத்தல்13மழை பெய்தல்14ஆற்றில் வெள்ளம் வருதல்15குறிஞ்சி16பாலை17முல்லை18மருதம்19நெய்தல்20வெள்ளத்தில் ஓடும் மீன்வகை21பண்ணைத் தலைவன் வரவு22பள்ளியர் பண்ணைத் தலைவனை வணங்க வருதல்23பண்ணைக்காரனாரை வணங்குதல்24மூத்தபள்ளி பண்ணைத் தலைவனிடம் முறையிடுதல்25இளையாள் எதிர்மாற்றம் கூறுதல்26மூத்தபள்ளி கூற்று27இளையபள்ளி மாற்றம்28மூத்தபள்ளி கூற்று29இளையபள்ளி மாற்றம்30மூத்தபள்ளி கூற்று31இளையபள்ளி மாற்றம்32மூத்தபள்ளி கூற்று33இளையாளைப் பண்ணைத் தலைவன் உரப்பல்34பள்ளன் மூத்தபள்ளியை நேரஞ்சென்றதற்குக் காரணம் கேட்டல்35அவள் ஆண்டைக்குக் கூறுதல்36பள்ளனை விளித்துப் பண்ணைத்தலைவன் பண்ணைச்செயல் வினவல்37பள்ளன் அவைகூறல்38மூத்தபள்ளி முறையீடு39பள்ளன் தொழுவில் மாட்டுண்டு கிடக்க மூத்தபள்ளி வந்து கண்டு கூறுதல்.40அவன் அவளை மன்னித்தல் கேட்க வேண்டுதல்41அவள் அவனை மீட்கவேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல்42தொழுவிலிருந்து விடுபட்ட பள்ளன் விதை முதலிய வளம் கூறல்43நெல்லு வகை44நெல் விதைக்கும்படி கூறுதல்45வயலுழும்போது பள்ளனைக் காளைமுட்டப் பள்ளன் விழுந்து மூர்ச்சித்த செய்தி பண்ணைத்தலைவர்க் கறிவித்தல்46பள்ளிகள் புலம்பல்47பள்ளனெழுந்திருத்தல்48பண்ணைச்செயல் காணவருமாறு பண்ணைத்தலைவனை வேண்டுதல்49நாற்று நடுதல்50நெல் விளைதல்51அருவி வெட்டுதல்52பொலிகுவித்துப் பொலிகாணப் பண்ணைத்தலைவனை அழைத்தல்53பள்ளன் மூத்த பள்ளியைக்குறித்து முறையிடுதல்54மூத்தபள்ளி முறையீடு55பள்ளிகள் ஒருவரையொருவர் ஏசல்56பண்ணைக்காரன் சண்டையை விலக்குதல்57வாழ்த்து
கதிரைமலைப்பள்ளு

பள்ளிகள் புலம்பல்

88✓
மாலைப் பொழுதிலே—மருதடி வயலில்
மாணிக்கச் சிலம்பனை—வலக்கையிற் பிடித்து
கோலக்குதிரைக் குடலன்—கூரிய கொம்பால்
குத்தி யெடுத்துக்—கோட்டிலே வைத்து
ஏலக்குழலாள்—எழுவியுன் புருஷனை
எருதுபாய்ந்த சேதி—இன்னு மறிந்திலையோ
பாயுமெரு தென்றுசொன்—னாருமிலையையோ
பாவிப்பண்ணைக் காரனாரும் பள்ளனுக்கு முன்னே.
89✓
மாவிலி கங்கை வயலுழையிலே—உனைச்சீறி
மதக்காளை யுறப்பாயவே
பாவியேன் செய்த வினையோ—எங்கை
பள்ளிகண்ணூறு பட்டதோ வறியேன்
சேவின் கழுத்தில் நுகம்முதல் வைத்திட்ட—அந்தச்
சீரில்லாதபொல்லா முகூர்த்தமோ
ஆவிமயங்கியிங் கேகிடக்கின்றாய்நீ—எழுந்திராய்
அலங்கார வீரப்பள்ளனே.
90✓
கஞ்சமுகப்பள்ளி யிளையாள் கள்ளில்—இட்ட
கற்ற வித்தை சித்தி பெற்றதோ
கொஞ்சி யவள்தனைச் சேராமலிருந்த—வெங்
குறையாலே மையல் கொண்டதோ
…………
…………
வஞ்ச நெஞ்சி செய்திட்ட சூதோ—நீ எழுந்திராய்
வடிவின் மிகுத்த பள்ளனே.
91✓
துஷ்ட நிஷ்டூரப் புலைச்சி—அவள் சண்டி
துரோகி யிளை யாளவ ளென்பால்
பட்டி மாட்டைக் கொள்ளையாய் விற்று—உனக்கும்
பரிவினா லூட்டிய கள்ளில்
இட்டமருந் தாலுனக்கு வந்தபொல் லாப்போ—ஐயோ
இரண்டு கண்ணும்மேற் சொருகி
மட்டில்லாத மூர்ச்சை பொருந்தி—மெத்த
வருந்துகின்றாயென் பள்ளனே.
92✓
மார்பின்முலை யரும்பு முனம்—என்னை
மற்றொருவர் விரும்பு முன்னம்
தூரி யெழுதற்கரிய—எந்தன்
துய்ய விடை சோருமுன்னம்
சீரியதோர் புயந்தழுவி—என்னைச்
சேர்ந்து மதன்ரதி யெனவே
ஓர் பொழுதும் பிரியாமல்—இருந்தாய்
உகந்தென்னைப் பாராயோ.
93✓
பன்னுதுமி ழோரெவரும்—நின்று
பரவுகதி ரையில் வேலன்
மன்னியமா விலிகங்கை—வயல்
வளமகளைப் பார்ப்பவரார்
கொன்னுலவு மென்மார்பின்—வாசக்
குரும்பை முலை பார்க்கிலையோ
பன்னியவென் சோகமெலாம்—இங்குப்
பார்ப்பவரார் தீர்ப்பவரார்.