முருகன் App
கதிரைமலைப்பள்ளு
குயிற் கூக் கேட்டல்10 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3மூத்தபள்ளி இளையபள்ளி குடும்பன்4மூத்தபள்ளி வருதல்5இளையபள்ளி வருதல்6பள்ளன் வருதல்7பள்ளியர் தத்தம் நாட்டுவளம் கூறல்8இளையபள்ளி தன் ஆண்டையின் பெருமை கூறல்9மூத்த பள்ளித் தன் ஆண்டையின் பெருமை கூறல்10குயிற் கூக் கேட்டல்11மழை பெய்ய வரங் கேட்டல்12மழை பெய்ய வரங் கொடுத்தல்13மழை பெய்தல்14ஆற்றில் வெள்ளம் வருதல்15குறிஞ்சி16பாலை17முல்லை18மருதம்19நெய்தல்20வெள்ளத்தில் ஓடும் மீன்வகை21பண்ணைத் தலைவன் வரவு22பள்ளியர் பண்ணைத் தலைவனை வணங்க வருதல்23பண்ணைக்காரனாரை வணங்குதல்24மூத்தபள்ளி பண்ணைத் தலைவனிடம் முறையிடுதல்25இளையாள் எதிர்மாற்றம் கூறுதல்26மூத்தபள்ளி கூற்று27இளையபள்ளி மாற்றம்28மூத்தபள்ளி கூற்று29இளையபள்ளி மாற்றம்30மூத்தபள்ளி கூற்று31இளையபள்ளி மாற்றம்32மூத்தபள்ளி கூற்று33இளையாளைப் பண்ணைத் தலைவன் உரப்பல்34பள்ளன் மூத்தபள்ளியை நேரஞ்சென்றதற்குக் காரணம் கேட்டல்35அவள் ஆண்டைக்குக் கூறுதல்36பள்ளனை விளித்துப் பண்ணைத்தலைவன் பண்ணைச்செயல் வினவல்37பள்ளன் அவைகூறல்38மூத்தபள்ளி முறையீடு39பள்ளன் தொழுவில் மாட்டுண்டு கிடக்க மூத்தபள்ளி வந்து கண்டு கூறுதல்.40அவன் அவளை மன்னித்தல் கேட்க வேண்டுதல்41அவள் அவனை மீட்கவேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல்42தொழுவிலிருந்து விடுபட்ட பள்ளன் விதை முதலிய வளம் கூறல்43நெல்லு வகை44நெல் விதைக்கும்படி கூறுதல்45வயலுழும்போது பள்ளனைக் காளைமுட்டப் பள்ளன் விழுந்து மூர்ச்சித்த செய்தி பண்ணைத்தலைவர்க் கறிவித்தல்46பள்ளிகள் புலம்பல்47பள்ளனெழுந்திருத்தல்48பண்ணைச்செயல் காணவருமாறு பண்ணைத்தலைவனை வேண்டுதல்49நாற்று நடுதல்50நெல் விளைதல்51அருவி வெட்டுதல்52பொலிகுவித்துப் பொலிகாணப் பண்ணைத்தலைவனை அழைத்தல்53பள்ளன் மூத்த பள்ளியைக்குறித்து முறையிடுதல்54மூத்தபள்ளி முறையீடு55பள்ளிகள் ஒருவரையொருவர் ஏசல்56பண்ணைக்காரன் சண்டையை விலக்குதல்57வாழ்த்து
கதிரைமலைப்பள்ளு

குயிற் கூக் கேட்டல்

28✓
மாதவரும் ஞானிகளும் மாமுனிவ ரானவரும்
வானுலகும் வாழவே கூவாய் குயிலே
நீதியுட னேபுவியை யாளுமன்ன ரானவர்கள்
நீடூழி வாழவே கூவாய் குயிலே.
29✓
தீதகல வேசகல பேர்க்குநிறை வாயநன்மை
சேரமகிழ் வாகவே கூவாய் குயிலே
காதமெழு கீதமொடு காசிகதி ராபுரியெக்
காலமும் வாழவே கூவாய் குயிலே.
30✓
பொங்கரவ ணிந்தவன் நடம்புரியு மன்றுமிகு
புகழ்பெற விளங்கவே கூவாய் குயிலே
சங்கரிதரும் புதல்வ னங்கைதிக ழயில்வேலன்
சந்நிதி தழைக்கவே கூவாய் குயிலே.
31✓
திங்கள்தொறு மெங்குமழை மும்முறைகள் பெய்யவும்
திண்புவி தழைக்கவும் கூவாய் குயிலே
வெங்கலி யுகந்தனிற் சகலசன முந்தவம்
மிகுந்துதின முஞ்செயக் கூவாய் குயிலே.
32✓
வஞ்சவெஞ் சூரன்கிளை துஞ்சவமர் செய்கந்தன்
வைவேல் தழைக்கவென்று கூவாய் குயிலே
கஞ்சனஞ் சிடவினவி யேசிறையில் வைத்திட்ட
கருணையுள முருகனென்று கூவாய் குயிலே.
33✓
மஞ்சுமென் குழற்பூவை கொஞ்சுமென் சொல்லினிய
வள்ளிநா யகனென்று கூவாய் குயிலே
சஞ்சலந் தவிரக்கொ டுஞ்சிறையி னீக்கியருள்
தந்திடுந் தீரனென்று கூவாய் குயிலே.
34✓
வாரிறுகு முலையாளா மம்மைகா தலனுடைய
மாணடிகள் வாழவென்று கூவாய் குயிலே
நேருடன் புவிமீதில் நன்னீதி நாதனருள்
நீடூழி வாழவென்று கூவாய் குயிலே.