முருகன் App
கதிரைமலைப்பள்ளு
மூத்தபள்ளி முறையீடு38 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3மூத்தபள்ளி இளையபள்ளி குடும்பன்4மூத்தபள்ளி வருதல்5இளையபள்ளி வருதல்6பள்ளன் வருதல்7பள்ளியர் தத்தம் நாட்டுவளம் கூறல்8இளையபள்ளி தன் ஆண்டையின் பெருமை கூறல்9மூத்த பள்ளித் தன் ஆண்டையின் பெருமை கூறல்10குயிற் கூக் கேட்டல்11மழை பெய்ய வரங் கேட்டல்12மழை பெய்ய வரங் கொடுத்தல்13மழை பெய்தல்14ஆற்றில் வெள்ளம் வருதல்15குறிஞ்சி16பாலை17முல்லை18மருதம்19நெய்தல்20வெள்ளத்தில் ஓடும் மீன்வகை21பண்ணைத் தலைவன் வரவு22பள்ளியர் பண்ணைத் தலைவனை வணங்க வருதல்23பண்ணைக்காரனாரை வணங்குதல்24மூத்தபள்ளி பண்ணைத் தலைவனிடம் முறையிடுதல்25இளையாள் எதிர்மாற்றம் கூறுதல்26மூத்தபள்ளி கூற்று27இளையபள்ளி மாற்றம்28மூத்தபள்ளி கூற்று29இளையபள்ளி மாற்றம்30மூத்தபள்ளி கூற்று31இளையபள்ளி மாற்றம்32மூத்தபள்ளி கூற்று33இளையாளைப் பண்ணைத் தலைவன் உரப்பல்34பள்ளன் மூத்தபள்ளியை நேரஞ்சென்றதற்குக் காரணம் கேட்டல்35அவள் ஆண்டைக்குக் கூறுதல்36பள்ளனை விளித்துப் பண்ணைத்தலைவன் பண்ணைச்செயல் வினவல்37பள்ளன் அவைகூறல்38மூத்தபள்ளி முறையீடு39பள்ளன் தொழுவில் மாட்டுண்டு கிடக்க மூத்தபள்ளி வந்து கண்டு கூறுதல்.40அவன் அவளை மன்னித்தல் கேட்க வேண்டுதல்41அவள் அவனை மீட்கவேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல்42தொழுவிலிருந்து விடுபட்ட பள்ளன் விதை முதலிய வளம் கூறல்43நெல்லு வகை44நெல் விதைக்கும்படி கூறுதல்45வயலுழும்போது பள்ளனைக் காளைமுட்டப் பள்ளன் விழுந்து மூர்ச்சித்த செய்தி பண்ணைத்தலைவர்க் கறிவித்தல்46பள்ளிகள் புலம்பல்47பள்ளனெழுந்திருத்தல்48பண்ணைச்செயல் காணவருமாறு பண்ணைத்தலைவனை வேண்டுதல்49நாற்று நடுதல்50நெல் விளைதல்51அருவி வெட்டுதல்52பொலிகுவித்துப் பொலிகாணப் பண்ணைத்தலைவனை அழைத்தல்53பள்ளன் மூத்த பள்ளியைக்குறித்து முறையிடுதல்54மூத்தபள்ளி முறையீடு55பள்ளிகள் ஒருவரையொருவர் ஏசல்56பண்ணைக்காரன் சண்டையை விலக்குதல்57வாழ்த்து
கதிரைமலைப்பள்ளு

மூத்தபள்ளி முறையீடு

73✓
அருமறை நூலன்-எழில் பெறும்
அசுரர்கள் காலன்-எழில் மிகும்
ஆனவை வேலன்-சங்கரி
அருளிய பாலன்
கருமுகி லொருவன்-மனமிக
மகிழ்வுறு மருகன்-பன்னிரு
கையுடை முருகன்-மாவிலி
கங்கைநல் வயலில்
அருவிகள் கொய்யான்-அதுதொழில்
அடுத்ததும் செய்யான்-அல்லும் பகலும்
அடியளை வைவான்-அவனுரை
அடங்கலும் பொய்தான்
ஒருமொழி சொல்லான்-என்னுடை
அருகிலும் நில்லான்-ஒரகுடி
கெடுக்கவும் வல்லான்-அதிக
ஊதாரி காணாண்டே.
74✓
குறமகள் பாகன்-எழில்தரு
கோலமெய் வாகன்-அரனருள்
குரிசில் குமாரன்-வெகுபுகழ்
கொண்ட வுதாரன்
மறைதனக் கரியான்-வடிவுள
மஞ்ஞையிற் பிரியான்-மனமிகு
மாவிலிகங்கை-வயல்தனில்
மருவியங் கங்கே
நிறை புனல் தெளியான்-வளர்பண்ணை
நிறைகளை கழியான்-என்னை
நெருப்பெனப் படுவான்-அவள் தன்னை
விருப்புடன் தொடுவான்
உறைபதி யங்கே-ஆண்டைக்
கொரு பொழுதிங்கே-சொன்னால்
உருட்டியே யடர்த்துங்-கென்னை
வெருட்டுவா னாண்டே.
75✓
உம்பரை மீட்டோன்-வேதனை
ஒருமொழி கேட்டோன்-அடியவர்க்
குறுதுயர் தீர்ப்போன்-வன்ன
ஒயில்திகழ் மயிலோன்
கம்பநல் யானை—முகமுள
ஐங்கர முடையோன்—துணையெனக்
களிகொளும் வேலன்—மாவிலி
கங்கைநல் வயலில்
வம்புகள் பண்ணு—வன்அவள் தன்னை
மனத்தினி லெண்ணு—வன்விளை செந்நெல்
வயலையும் பாரான்—என்னுடை
வளவிலும் வாரான்
அம்பெனும் விழியாள்—கிளியினும்
அதிவித மொழியாள்—என்னுடை
ஆருயிர்க் கினியாள்—என்றாங்
கறைகுவ னாண்டே.
76✓
வாரணக் கொடியோன்—பங்கய
மலரெனும் விழியான்—சூரனை
வன்சிர மரிந்தோன்—வஞ்சகர்
நெஞ்சிடம் பிரிந்தோன்
காரணக் கந்தன்—வரமருள்
கௌரிதன் மைந்தன்—பன்னிரு
கையுடை முருகன்—மாவிலி
கங்கைநல் வயலில்
ஏர்தனைப் பிடியான்—மனதினில்
எனக்கறக் கொடியான்—இல்லத்தை
எட்டியும் பாரான்—வயல்பண்ணை
பட்டியும் பேரான்
சூர நெட்டூரப்—பள்ளன்
துடிப்புடன் நெளிப்பும்—போகத்
துச்சன னிவனைத்—தொழுவில்
தொடுத்திடு மாண்டே.