முருகன் App
கதிரைமலைப்பள்ளு
நாற்று நடுதல்49 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3மூத்தபள்ளி இளையபள்ளி குடும்பன்4மூத்தபள்ளி வருதல்5இளையபள்ளி வருதல்6பள்ளன் வருதல்7பள்ளியர் தத்தம் நாட்டுவளம் கூறல்8இளையபள்ளி தன் ஆண்டையின் பெருமை கூறல்9மூத்த பள்ளித் தன் ஆண்டையின் பெருமை கூறல்10குயிற் கூக் கேட்டல்11மழை பெய்ய வரங் கேட்டல்12மழை பெய்ய வரங் கொடுத்தல்13மழை பெய்தல்14ஆற்றில் வெள்ளம் வருதல்15குறிஞ்சி16பாலை17முல்லை18மருதம்19நெய்தல்20வெள்ளத்தில் ஓடும் மீன்வகை21பண்ணைத் தலைவன் வரவு22பள்ளியர் பண்ணைத் தலைவனை வணங்க வருதல்23பண்ணைக்காரனாரை வணங்குதல்24மூத்தபள்ளி பண்ணைத் தலைவனிடம் முறையிடுதல்25இளையாள் எதிர்மாற்றம் கூறுதல்26மூத்தபள்ளி கூற்று27இளையபள்ளி மாற்றம்28மூத்தபள்ளி கூற்று29இளையபள்ளி மாற்றம்30மூத்தபள்ளி கூற்று31இளையபள்ளி மாற்றம்32மூத்தபள்ளி கூற்று33இளையாளைப் பண்ணைத் தலைவன் உரப்பல்34பள்ளன் மூத்தபள்ளியை நேரஞ்சென்றதற்குக் காரணம் கேட்டல்35அவள் ஆண்டைக்குக் கூறுதல்36பள்ளனை விளித்துப் பண்ணைத்தலைவன் பண்ணைச்செயல் வினவல்37பள்ளன் அவைகூறல்38மூத்தபள்ளி முறையீடு39பள்ளன் தொழுவில் மாட்டுண்டு கிடக்க மூத்தபள்ளி வந்து கண்டு கூறுதல்.40அவன் அவளை மன்னித்தல் கேட்க வேண்டுதல்41அவள் அவனை மீட்கவேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல்42தொழுவிலிருந்து விடுபட்ட பள்ளன் விதை முதலிய வளம் கூறல்43நெல்லு வகை44நெல் விதைக்கும்படி கூறுதல்45வயலுழும்போது பள்ளனைக் காளைமுட்டப் பள்ளன் விழுந்து மூர்ச்சித்த செய்தி பண்ணைத்தலைவர்க் கறிவித்தல்46பள்ளிகள் புலம்பல்47பள்ளனெழுந்திருத்தல்48பண்ணைச்செயல் காணவருமாறு பண்ணைத்தலைவனை வேண்டுதல்49நாற்று நடுதல்50நெல் விளைதல்51அருவி வெட்டுதல்52பொலிகுவித்துப் பொலிகாணப் பண்ணைத்தலைவனை அழைத்தல்53பள்ளன் மூத்த பள்ளியைக்குறித்து முறையிடுதல்54மூத்தபள்ளி முறையீடு55பள்ளிகள் ஒருவரையொருவர் ஏசல்56பண்ணைக்காரன் சண்டையை விலக்குதல்57வாழ்த்து
கதிரைமலைப்பள்ளு

நாற்று நடுதல்

96(தரு)✓
அண்டர் பணியத் தவமும் பயனும்
அருளி வினைக ளறுப்பவன்
அருள் விளங்கிய கரிமு கற்கிளைய
அறுமுகன் குகன் குருபரன்
எண்டலம் புகழ் கதிரைக் கிறைவன்
என்றும் நினைப்பார்க் குரியவன்
இருட்டு வஞ்சகத் திருடருக் கொளித்
திருப்பவ னெமைப் புரப்பவன்
கொண்டல் வண்ணனுக் குரிய மருகன்
குமர னமர குஞ்சரி
கொழுநன் மாவிலி கங்கை வயலில்
கூடி யாடிப் பாடியே
தண்டை புலம்ப விடைகள் நோவத்
தரள வடங்க ளசையவே
தாவித் திரிந்து தூவி நாற்றுத்
தன்னை நடவாரும் பள்ளிரே.
97✓
மயிலி லேறி வருமு தாரன்
மார னுக்குநல் மைத்துனன்
வாசக் கதிரை மலையில் வேலன்
மாவிலி கங்கை வயலிலே
கயிலி மயிலி குயிலி தையலி
கருவி திருவி யொருவியும்
காரி வாரி வீரி சூரி
கறுப்பி காத்தி கட்டைச்சி
அயிலை நிகரும் விழிகள் புரள
அழகு பொன்முடி யசையவே
அவர வர்க்கொரு பிடிவகுத் துவைத்
ததிதீவி ரத்துடன் நடுகையில்
செயலின் மருவிக் கயல்கள் வெருண்டு
சேற்றிற் குதித்துப் பாயவும்
சிறைப்புள் ளெடுத்துத் திரும்பிப் போகும்
சித்திரம் பாரும் பள்ளிரே.
98✓
மாலுக் கிளைய வல்லி முலையை
வருந்தி யருந்தி வளர்ந்தவன்
மாசி லாத கதிரை வேலன்
மாவிலி கங்கை வயலிலே
காலுக் கிசைந்த சிலம்பு புலம்ப
கனத்த தனங்க ளசையவே
கனகப் பணிக ளிலங்கக் கிரணக்
காது வடங்க ளாடவே
பாலுக் கிசைந்த தேனுக் குவமை
பகரு மிரண்டு பாங்கியர்
பணிந்து குனிந்து நெளிந்து வளைந்து
பாடி யாடி நடுகையில்
வேலிக் கருகில் வேழத் திரளில்
விளைந்து பரந்த முத்தெலாம்
வெள்ளை யெகினம் கருவென் றயிர்க்கும்
விரகு பாரும் பள்ளிரே.
99✓
மனத்திற் றவமுற் றிருந்த தொண்டரை
வளர்த்துப் பொருள்கள் கொடுப்பவன்
வான்றென் கதிரை மலையில் வேலன்
மாவிலி கங்கை வயலிலே
கனத்த தனத்தி னனத்தின் நடைச்சி
கந்தி சந்தி சுந்திசீர்
கன்னி பொன்னி யன்ன மென்னி
கமலி யுலகி கமலத்தி
அனத்தி னினங்கள் என்னக் கூடி
அருகிப் பெருகிப் புருவத்தை
அசைத்து நெளித்து நகைத்துக் களித்து
ஆடிப் பாடி நடுகையில்
சினத்து மலங்கு கலங்கு புனலிற்
சிறுத்த கெண்டைகள் சிதறியே
தேரை பாய நாரை பறக்கும்
சித்திரம் பாரும் பள்ளிரே.
100✓
காரைப் பொருந்துங் குவடு புடைசூழ்
கதிரைப் பதியிற் கந்தவேள்
கானக் குறத்தி கணவன் கலக்கக்
கலங்கு மவுணர் குலங்களின்
மார்பைப் பிளந்த மாலின் மருகன்
மஞ்ஞைப் பரியில் வருகுகன்
மதுரைக் கவிஞர் புகழும் வேலன்
மாவிலி கங்கை வயலிலே
சேரத் திரண்டு நிரைத்துப் பரந்து
சிரித்துப் புருவம் நெரித்துக்காற்
சிலம்பு புலம்ப வோடிக்கூடிச்
செவ்வை யாக நடுகையில்
தாரைப் பொருந்து மார்பிலே யிரு
தனத்தி லேகுழைக் கனத்திலே
தகைப்பி லேசின்னச் சிரிப்பிலே பள்ளன்
தயங்கி றானடி பள்ளிரே.
101✓
பொற்பு மிகுத்திடு நற்றவ முற்றிடு
புற்றுமு னிக்கருள் புரிந்தவன்
புட்ப மெடுத்திரு பூம்பத மர்ச்சித்துப்
பூசைசெய் வார்களி லாசையான்
மற்றவர் முப்புர முற்றெரியச் சினம்
வைத்துந கைத்தவன் மனமகிழ்
மைந்தன் கதிரை மலையில் வேலன்
மாவிலி கங்கை வயலிலே
சற்கரை யொத்திடு சொற்க ளுரைத்திடு
சற்குண மங்கையர் கூடியே
சற்றுமோர் குற்றமில் நெற்பயி ருற்றிடு
தன்மைய ராயங்கு நடுகையில்
அற்புதச் சிற்றிடை வெற்பு முலைக்கனத்
தற்றிடு மற்றிடு மென்னவே
அக்குழ லிற்கரு விற்பொலி வண்டுகள்
ஆர்ப்பது பாரும் பள்ளிரே.
102✓
கலைக்கு கந்தவர் மிகுத்துக் கற்றவர்
கருத்து றத்தொழுங் கந்தவேள்
கருத்து மகிழுங் கந்தன் மாவிலி
கங்கை திகழுநல் வயலிலே
சிலைக்குக் கைத்தொயி லிழைத்துக் கட்பொத்து
கைக்கூ டைத ரித்துத்தாள்
தெரித்துத் திக்கெங்கும் மதிக்க வெண்டுய்ய
திங்கட் குடையோன் முடியென்ன
முலைக்குப் பொற்கச்சிட் டிறுக்கிச் சிற்றிடை
முறுக்கிப் பட்டுடை திருத்தித்தான்
முதிர்ச்சி கொண்டு திமிதித் தொம்மென
முடுகிக் கடுகி நடுகையில்
வலைக்குத் தப்பி வயலிற் கிடந்த
வண்சங் கோடுறு வாளையை
வனக்கொக் குக்கொத்தி யெடுத்தொக் கக்கக்கும்
வளமை பாரும் பள்ளிரே.