முருகன் App
கதிரைமலைப்பள்ளு
பள்ளிகள் ஒருவரையொருவர் ஏசல்55 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3மூத்தபள்ளி இளையபள்ளி குடும்பன்4மூத்தபள்ளி வருதல்5இளையபள்ளி வருதல்6பள்ளன் வருதல்7பள்ளியர் தத்தம் நாட்டுவளம் கூறல்8இளையபள்ளி தன் ஆண்டையின் பெருமை கூறல்9மூத்த பள்ளித் தன் ஆண்டையின் பெருமை கூறல்10குயிற் கூக் கேட்டல்11மழை பெய்ய வரங் கேட்டல்12மழை பெய்ய வரங் கொடுத்தல்13மழை பெய்தல்14ஆற்றில் வெள்ளம் வருதல்15குறிஞ்சி16பாலை17முல்லை18மருதம்19நெய்தல்20வெள்ளத்தில் ஓடும் மீன்வகை21பண்ணைத் தலைவன் வரவு22பள்ளியர் பண்ணைத் தலைவனை வணங்க வருதல்23பண்ணைக்காரனாரை வணங்குதல்24மூத்தபள்ளி பண்ணைத் தலைவனிடம் முறையிடுதல்25இளையாள் எதிர்மாற்றம் கூறுதல்26மூத்தபள்ளி கூற்று27இளையபள்ளி மாற்றம்28மூத்தபள்ளி கூற்று29இளையபள்ளி மாற்றம்30மூத்தபள்ளி கூற்று31இளையபள்ளி மாற்றம்32மூத்தபள்ளி கூற்று33இளையாளைப் பண்ணைத் தலைவன் உரப்பல்34பள்ளன் மூத்தபள்ளியை நேரஞ்சென்றதற்குக் காரணம் கேட்டல்35அவள் ஆண்டைக்குக் கூறுதல்36பள்ளனை விளித்துப் பண்ணைத்தலைவன் பண்ணைச்செயல் வினவல்37பள்ளன் அவைகூறல்38மூத்தபள்ளி முறையீடு39பள்ளன் தொழுவில் மாட்டுண்டு கிடக்க மூத்தபள்ளி வந்து கண்டு கூறுதல்.40அவன் அவளை மன்னித்தல் கேட்க வேண்டுதல்41அவள் அவனை மீட்கவேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல்42தொழுவிலிருந்து விடுபட்ட பள்ளன் விதை முதலிய வளம் கூறல்43நெல்லு வகை44நெல் விதைக்கும்படி கூறுதல்45வயலுழும்போது பள்ளனைக் காளைமுட்டப் பள்ளன் விழுந்து மூர்ச்சித்த செய்தி பண்ணைத்தலைவர்க் கறிவித்தல்46பள்ளிகள் புலம்பல்47பள்ளனெழுந்திருத்தல்48பண்ணைச்செயல் காணவருமாறு பண்ணைத்தலைவனை வேண்டுதல்49நாற்று நடுதல்50நெல் விளைதல்51அருவி வெட்டுதல்52பொலிகுவித்துப் பொலிகாணப் பண்ணைத்தலைவனை அழைத்தல்53பள்ளன் மூத்த பள்ளியைக்குறித்து முறையிடுதல்54மூத்தபள்ளி முறையீடு55பள்ளிகள் ஒருவரையொருவர் ஏசல்56பண்ணைக்காரன் சண்டையை விலக்குதல்57வாழ்த்து
கதிரைமலைப்பள்ளு

பள்ளிகள் ஒருவரையொருவர் ஏசல்

110இளையபள்ளி✓
ஆமோடியி தெல்லாமிவ் வூறறியா தோடி—சொன்னால்
அத்தனையும் வெட்டவெளி யாக்குவே னடி
ஓமேடி யுன்னோ டுரைக்கலா மோடி—வெள்ளை
உப்புங் கர்ப்பூரமு மொக்குமோ போடி.
111மூத்தபள்ளி✓
ஒக்குமோ தோகையுடன் வாரணமு மாடிப்—பொல்லா
உவர்நீரில் வேமோ பருப்பிங்கே போடி
வெட்கமில் லாதமுழு நீலிமழு மாறி—பாரில்
வேழங்கண் டாளியஞ்சி வெருளுமோ போடி.
112இளையபள்ளி✓
வெருட் டாதேபூனை யுடனேயெலி யெதிர்த்தால் தப்பி
மீளுமோடி மாவலி கங்கையிற் பள்ளி
பொருட் டாகவுனை வைப்பனோ போடி
உன்புத்தி யெல்லாமிங்கே சித்தியா தேடி.
113மூத்தபள்ளி✓
உரைத்த வுரைசொலி யெனக்குமுன் வர
உனக்குவீ றோடி
பரத்தை யுனதிரு தனத்தை யுயிரொடு
பறித்திடுவ னேடி.
114இளையபள்ளி✓
பறியெடி திருவிலி யறிலிலி படுநீலி
பறிதனை நிகர் வயிறி
அறியெடி நாயே யெனதிரு கையின்
வலிமையை யறியா முழுமூடி.
115மூத்தபள்ளி✓
மாறுரை பேசவு மேசவு மாச்சுதோ
மழுமாறிய முழுமூடி
பேறிலா நீலி துரோகி யென்னோடுரை
பேசவுமா மோடி.
116இளையபள்ளி✓
பேசியுமெ ன்னெதி ராகவுநின்று
பிழைக்கவும் வல்லாயோ
தேசம றிந்திடு மென்னுடை யாண்டவன்
செய்கை யறியாயோ.
117மூத்தபள்ளி✓
எவ்வுலகு மெவ்வுயிரு மெப்பொருளை யும்படைத்த
இறையவனைக் காலில்விலங் கிட்டுவைத் தவன்
நவ்விதரித் தங்கையத்தன் வந்தினிய சொன்னதனால்
நான்முகனை விட்டவனம் மாண்டையல்ல வோடி.
118இளையபள்ளி✓
அன்றமரர் சபைதன்னி லம்புலியைச் சபித்தே
அன்றுமுத லென்றுநல்லோ ராண்டிலொருநாள்
இன்றளவு மங்கவனை நோக்காம லேயிருக்க
எதிராய்ச் சபித்தவனெம் மாண்டையல்ல வோடி.
119மூத்தபள்ளி✓
சங்கரி கதவடைத்துத் தாழ்ப்பூட்டத் தாழ்திறக்கச்
சங்கரன் தன்னாலும் முடியாத படியால்
அங்கவனு மாங்கிவனை யேநினைக்கப் பூட்டுவிட
அப்போ திறந்தவனெம் மாண்டையல்ல வோடி.
120இளையபள்ளி✓
நித்தமும் மிவனையே நினைத்துப்பூசை செய்யாமல்
நிந்தித்த பேர்க்கொன்றுஞ் சித்திப்ப திலையால்
அத்தனை பேருமுன் னினைப்பதுந் தொழுவதும்
அர்ச்சனை புரிவதும்நம் மாண்டைக்கல்ல வோடி.
மூத்தபள்ளி✓
என்றும் அவனிதனி
லிருந்தக்கார முதலான
பண்டமெடுத் துண்டவனுன்
னாண்டையல்ல வோடி
121இளையபள்ளி✓
அன்றுலவி யேவலையில்
மீனாகவே கிடந்து
அகப்பட்டுக் கொண்டவனுன்
னாண்டையல்ல வோடி.
மூத்தபள்ளி✓
அவனியறி யத்தக்கன்
வேள்விதனிற் றின்னப்போய்
அகப்பட்டுக் கொண்டவனுன்
னாண்டையல்ல வோடி
122இளையபள்ளி✓
தவனமென வேசொல்லித்
தேனுந் தினைமாவும்
சாதித்துத் தின்றவனுன்
னாண்டையல்ல வோடி.
மூத்தபள்ளி✓
ஆங்கவனுக் கொருபெண்வே
றெங்குங் கிடையாமல்
அசுரர்பெண் கொண்டவனுன்
னாண்டையல்ல வோடி
123இளையபள்ளி✓
வேங்கைமர மாகிநின்று
மின்னிடைக் குறமகளை
விரும்பி யணைந்தவனுன்
னாண்டையல்ல வோடி.
மூத்தபள்ளி✓
அம்புயத்தி னால்மலையை
யன்றெடுத்த ராவணன்றன்
அங்கையாற்குட் டுண்டவனுன்
னாண்டையல்ல வோடி
124இளையபள்ளி✓
அம்புவியிற் றேவமின்னா
ரானசொர்க்க மின்றிமிக
ஆரமுலை யுண்டதுமுன்
னாண்டையல்ல வோடி.
மூத்தபள்ளி✓
அல்லவெடி நானும்நீயும்
சொன்னதெல்லா மிருக்கட்டும்
ஆண்டையை யிழுக்கச்
சொன்ன தாரடிபள்ளி.
125இளையபள்ளி✓
வல்லமையாய் நீயுரைத்தால்
நானுமதற் கானபடி
மாறுரையா தேயிருக்க
மதிப்பாயோடி கள்ளி.
மூத்தபள்ளி✓
மதியாதிரு கண்ணால்
மருட்டியே காசுவாங்கி
வயிறு வளர்ப்பதுவும்
நாங்களோ பள்ளி
126இளையபள்ளி✓
கொதியுற்ற பிட்டுத்தின்று
கொண்டகண வன்வயிற்றைக்
குறைத்துத் துரத்தினதும்
நாங்களோ பள்ளி.
மூத்தபள்ளி✓
பல்லெல்லாஞ் சுரையின்
விதைபோலவே யுதிரப்
பாதத்தி னாலுதைப்பேன்
பார்த்திரு பள்ளி
127இளையபள்ளி✓
வல்லமையால் மாயவஞ்சப்
புள்ளின்வாய் கிழித்ததுபோல்
வார்த்தைசொன்னவாய் பிளப்பேன்
பார்த்திரு பள்ளி