முருகன் App
கதிரைமலைப்பள்ளு
பள்ளியர் தத்தம் நாட்டுவளம் கூறல்7 / 57
1காப்பு2கடவுள் வணக்கம்3மூத்தபள்ளி இளையபள்ளி குடும்பன்4மூத்தபள்ளி வருதல்5இளையபள்ளி வருதல்6பள்ளன் வருதல்7பள்ளியர் தத்தம் நாட்டுவளம் கூறல்8இளையபள்ளி தன் ஆண்டையின் பெருமை கூறல்9மூத்த பள்ளித் தன் ஆண்டையின் பெருமை கூறல்10குயிற் கூக் கேட்டல்11மழை பெய்ய வரங் கேட்டல்12மழை பெய்ய வரங் கொடுத்தல்13மழை பெய்தல்14ஆற்றில் வெள்ளம் வருதல்15குறிஞ்சி16பாலை17முல்லை18மருதம்19நெய்தல்20வெள்ளத்தில் ஓடும் மீன்வகை21பண்ணைத் தலைவன் வரவு22பள்ளியர் பண்ணைத் தலைவனை வணங்க வருதல்23பண்ணைக்காரனாரை வணங்குதல்24மூத்தபள்ளி பண்ணைத் தலைவனிடம் முறையிடுதல்25இளையாள் எதிர்மாற்றம் கூறுதல்26மூத்தபள்ளி கூற்று27இளையபள்ளி மாற்றம்28மூத்தபள்ளி கூற்று29இளையபள்ளி மாற்றம்30மூத்தபள்ளி கூற்று31இளையபள்ளி மாற்றம்32மூத்தபள்ளி கூற்று33இளையாளைப் பண்ணைத் தலைவன் உரப்பல்34பள்ளன் மூத்தபள்ளியை நேரஞ்சென்றதற்குக் காரணம் கேட்டல்35அவள் ஆண்டைக்குக் கூறுதல்36பள்ளனை விளித்துப் பண்ணைத்தலைவன் பண்ணைச்செயல் வினவல்37பள்ளன் அவைகூறல்38மூத்தபள்ளி முறையீடு39பள்ளன் தொழுவில் மாட்டுண்டு கிடக்க மூத்தபள்ளி வந்து கண்டு கூறுதல்.40அவன் அவளை மன்னித்தல் கேட்க வேண்டுதல்41அவள் அவனை மீட்கவேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல்42தொழுவிலிருந்து விடுபட்ட பள்ளன் விதை முதலிய வளம் கூறல்43நெல்லு வகை44நெல் விதைக்கும்படி கூறுதல்45வயலுழும்போது பள்ளனைக் காளைமுட்டப் பள்ளன் விழுந்து மூர்ச்சித்த செய்தி பண்ணைத்தலைவர்க் கறிவித்தல்46பள்ளிகள் புலம்பல்47பள்ளனெழுந்திருத்தல்48பண்ணைச்செயல் காணவருமாறு பண்ணைத்தலைவனை வேண்டுதல்49நாற்று நடுதல்50நெல் விளைதல்51அருவி வெட்டுதல்52பொலிகுவித்துப் பொலிகாணப் பண்ணைத்தலைவனை அழைத்தல்53பள்ளன் மூத்த பள்ளியைக்குறித்து முறையிடுதல்54மூத்தபள்ளி முறையீடு55பள்ளிகள் ஒருவரையொருவர் ஏசல்56பண்ணைக்காரன் சண்டையை விலக்குதல்57வாழ்த்து
கதிரைமலைப்பள்ளு

பள்ளியர் தத்தம் நாட்டுவளம் கூறல்

6✓
நஞ்சு போல்விழி மங்கையர் கூடி
நயங்கள் பேசி யிசைபாடி யாடி
பஞ்சு போலடி மெல்ல நடந்து
பணைத்த கொங்கை கனத்திடை தொய்ய
விஞ்சு கோதை விரித்து நறும்புனல்
மீது லாவி விளையாடக் கண்டு
மஞ்சு மஞ்சி மலையி லொளிக்கின்ற
மாவலி கங்கை நாடெங்கள் நாடே.
7✓
வஞ்ச வஞ்சியர் கற்பழித் தோர்மறை
வாண ராரூயிர் மாய்த்தவ ரேனும்
செஞ்சொல் வேத விதியால் வருபுனல்
தேவ தேவன் திருக்காசி மேவித்
தஞ்ச நீணதி யென்று மனத்துன்னித்
தர்ப்பணம் புரிந்தா லவர்தங்கள்
பஞ்ச பாதக மெல்லாம் தொலைக்கும்
பகீர தாகங்கை நாடெங்கள் நாடே.
8✓
காசில் பொற்சிலம் பின்சிக ரத்தைக்
கால்ப றித்தே யெறிந்திட வந்த
மாசில் தென்கோண மாமலையைச் சூழும்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே.
9✓
வரமு டைக்கபி லன்முன் னெரிந்தநல்
வன்மைச் சாகர ரின்சுவர்க் கம்பெறப்
பரம னைத்தவம் பண்ணியே பெற்ற
பகீர தாகங்கை நாடெங்கள் நாடே.
10✓
போத நாண்மலர் நாயக னார்நற்
புரந்த ரன்முதற் றேவர்கள் யாவர்க்கும்
மாத வர்க்கு மரிய தவம்வைக்கும்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே.
11✓
மாய வஞ்சக் கொடும்பவர் மாய்ந்திட
வந்தே யங்க மெடுத்தவர் போடப்
பாவந் தீர்த்துப் பரகதி யேற்றும்
பகீர தாகங்கை நாடெங்கள் நாடே.
12✓
செய்ய கேது தலையற்ற வந்நாள்
திருந்தும் பூசைகள் செய்து முடிப்போன்
வையம் போற்றிட நற்கதி யுற்றிடும்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே.
13✓
நலம தாகவே பூசித்த பேர்க்கெந்த
நாளும் பாக்கிய மோக்ஷமி யாவும்
பலவி தத்தினு மீந்திடு கின்ற
பகீர தாகங்கை நாடெங்கள் நாடே.
14✓
கோவிற் றன்சொற்கீழ் மேலுல கெல்லாம்
கொள்ளும் வேலைக் கதிரையில் வேலன்
மாவி லூன்றிப் பதம்வைத்துக் காத்திடும்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே.
15✓
அதிக பாவிக ளாயினு மெவ்வுயி
ராயினு மத்த லத்தி லிறந்தாற்
கதித ருந்திருக் காசியைச் சூழும்
பகீர தாகங்கை நாடெங்கள் நாடே.
16✓
எங்கும் மாமணி விற்பொலி யுங்கதி
ரெங்குந் தாமரை யன்னம் படுமலர்
மங்கு றாத வளந்திக ழுந்திரு
மாவலி கங்கை நாடெங்கள் நாடே.
17✓
திங்கள் தோறுமும் மாரிகள் பெய்யச்
சிறந்த சீருடன் தேனிசை செப்பப்
பங்க யத்தைக் குளங்கள் பரிக்கும்
பகீர தாகங்கை நாடெங்கள் நாடே.
18✓
அணி யிளங்கதி ராயிர முள்ள
வருக்கன் போய்க்குட பாலிடை மேவ
மணி கொணர்ந்து மணிவிளக் கேற்றிடு
மாவலி கங்கை நாடெங்கள் நாடே.
19✓
காய்ச்சுத் தோயலுடன் சோறு மிட்டுக்க்
கடனுக் காகவே கைமரக் காலால்
பாய்ச்சியே செந்நெல் முத்தளக் கின்ற
பகீர தாகங்கை நாடெங்கள் நாடே.
20✓
வேணிச் சங்கரர் தொண்டர்க ளென்று
வீடு தோறு மிரப்பவர்க் கெல்லாம்
மாணிக்க மள்ளிப் பிச்சை கொடுத்திடும்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே.
21✓
ஆரேனுந் தொழு வோர்க்கன்பு கொண்டவ
ராசை யின்படி யாக அருள்வோன்
பேர் புகன்றிடு வோரையுங் காத்தவன்
பேசுங் கங்கை நாடெங்கள் நாடே.
22✓
பொன்னு லோகம் பொருவுநன் னாட்டின்
பொழிலிற் றோகை மயில்நின் றுலாவும்
வன்ன வேலன் கதிரைக் குமரேசன்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே.