முருகன் App
கீழ்வேளூர் முருகன் பிள்ளைத்தமிழ்
காப்பு1 / 7
கீழ்வேளூர் முருகன் பிள்ளைத்தமிழ்

காப்பு

✓
பொன்னுலகு மின்னுலகு முகில்பொழியு மகிலமும்
பூங்கமல மலரோனுமென்
பூவைவண் ணத்துவண் ணத்துவனு ம் வச்சிரப்
புருகூத னாதியெவரும்
உன்னுபெரு வாழ்வுபெற விமையா சலத்துவளர்
உமைபாகன் முன்னமுதவும்
உயர்வார ணத்துமுக னருவார ணக்கடவுள்
உபயபத மலர்பணிகுவாம்
கன்னன்மொழி வன்னமுலை வாரணம் விரும்புறு
கரும்பினைய ரும்புநகைசேர்
கானவர்கள் வானவர்க ளாகவரு வல்லிபடர்
கனகவர் கற்பதருவை
மன்னுகதிர் வேலவனை மாலவனை மாமனென
மகிழ்கருணை மகமேருவை
வாலசுப் பிரமணிய சுவாமியைப் பரவுமென்
மதுரமிகு தமிழ்தழையவே.