கீழ்வேளூர் முருகன் பிள்ளைத்தமிழ்
செங்கீரைப்பருவம்3 / 7
கீழ்வேளூர் முருகன் பிள்ளைத்தமிழ்
செங்கீரைப்பருவம்
11✓
ஆறுசம யத்தவர்கள் வழிபாடு செய்வதற்
காறுபொரு ளாகமேவி
யவரவர் செயுஞ்செயலை யேற்பனென வறிவிக்க
ஆறுதிரு வதனமேவிப்
பேறுபெறு மச்சமய நச்சுமவ ரிச்சையுறு
பெத்தமுத் திகளையெல்லாம்
பிறழாம லீவனென வறிவிக்க வீராறு
பேதமில் கரங்கள்மேவி
ஊறுதவிர் பலகோடி சடசித் தினுக்கெலாம்
உயிராக மேவுமுதல்வன்
ஒருவனாம் என்றுதெரி விப்பதற் கொப்பிலழு
கொழுகுதிரு மேனியொன்றாய்த்
தேறுபுக ழுடன்வந்த மன்னுகீழ் வேளூர
செங்கீரை யாடியருளே
சிங்கார வேன்முருக சங்காழி மான்மருக
செங்கீரை யாடியருளே.
12✓
தத்துதிரை முத்தமுமிழ் சீகரச் சாகரத்
தரணியிடை வாழுமுயிர்கள்
சந்ததமு முந்துதுய ரந்தனி லழுந்தாது
தக்கமுறை நன்மைபெறவே
புத்தியொடு முத்திதரு புண்ணியமு நண்ணிய
புலன்கணுக ரின்பமதுவும்
பொற்புற வவற்றிடை விளங்கியனு தினமும்மெய்ப்
புகழ்பெற விருந்தபொருள்போல்
நித்தநிறை வுற்றபர ஞானசுக மானசிவ
நின்மலனு மதுரவசன
நீலமா துமை.யு மோகைபெற விவர்நடுவ
ணேயமொடு வீற்றிருந்த
சித்திபெறு முத்தமர்கள் மன்னுகீழ் வேளூர
செங்கீரை யாடியருளே
சிங்கார வேன்முருக சங்காழி மான்மருக
செங்கீரை யாடியருளே.
13✓
துள்ளுந் தகட்டகட் டிலவாளை விரிபாளை
துன்றுகமு கூடுதாவித்
துப்புறழ் பழக்குலை யுதிர்த்தயல் வருக்கைகொள்
சுளைக்கனிகள் சாடிவெடிபோய்
அள்ளுங் கவின்படைத் திலகுகற் பகத்தருவின்
அம்பொன்மலர் மாரிசிந்தி
அந்தர நிரந்துவரு கந்தர மதிர்ந்திட
வணைந்துவிசை யோடுமோதித்
தள்ளும் பொற்றாரை வழியூடு புவிவந்து
சங்கமலி வாவிமேவித்
தாமரை மலர்த்திரளு முக்கிவிரி தேனுண்டு
சந்ததமும் வந்துலாவும்
தெள்ளும் புனற்பழன மன்னுகீழ் வேளூர
செங்கீரை யாடியருளே
சிங்கார வேன்முருக சங்காழி மான்மருக
செங்கீரை யாடியருளே.
14✓
அங்கணமு தொழுகுகலை யெழுமதியம் வேணியணி
ஐந்துமுக முள்ளபரமன்
ஆறுமுக னெனவந்த வுண்மையினை யறியாத
அம்புய மலர்த்தவிசினோன்
பங்கமறு தாரகப் பொருள்கூறு நெறிதவறு
பட்டவல மேவினானப்
பழுதகல மறையினுரை முழுதுமுண ரத்தவசு
பண்ணுது மெனத்தேறியே
துங்கமுறு மப்பிரம னாவினுறை கலைமாது
தூயதட மலர்மேவல்போற்
றுப்புநிகர் செஞ்சரண வமுதநிற வாடகத்
தூவியிள வரசவன்னஞ்
செங்கமல மலர்மீது மன்னுகீழ் வேளூர
செங்கீரை யாடியருளே
சிங்கார வேன்முருக சங்காழி மான்மருக
செங்கீரை யாடியருளே.
15✓
சுத்தமார் வெண்படிக மாசற வரிந்துபுரி
தூநிலா முற்றமீது
சோதிமர கதசிகரம் வீசுபா சொளியுமளி
சூழமென் பந்தர்முல்லைப்
பத்திசேர் முகையொளியு மாதரணி கலனிலவு
பற்பரா கத்தினொளியும்
பாயவிது பாசடையு முத்தமம் புயமுநிறை
பைந்தட மெனப்பேதைமார்
புத்தியார் வத்தினொடு மூழ்கவரு போதிளைஞர்
புனலாழு மதுகொங்கைபொற்
குடங்கொண்டு நீந்திடு மென்னநா ணிமகிழ்
புரிசெழும் பதரிவனம்வாழ்
சித்திரகூ டப்பரமர் புத்திரவே தத்தலைவ
செங்கீரை யாடியருளே
சிங்கார வேன்முருக சங்காழி மான்மருக
செங்கீரை யாடியருளே.
16வேறு✓
நித்தன் மலைக்கொடி கண்கள் களித்திட
நீள்கதிர் தவழ்வதுபோல்
நிரைமணி முன்றிலின் வந்து தவழ்ந்து
நிமிர்ந்து சுரர்க்கெனவே
வைத்த சுவர்க்க முதற்பல பூமிகண்
மாதவ மாதிசெய
மன்னிய பூமிக ளலவெனல் போலொளிர்
மதிநிகர் முகமசையச்
சித்தி தருஞ்சிவ பூசை தவம்புகழ்
சீர்பெறு வேள்வியெலாம்
செய்து பலன்பெறு தலமிது வெனுநெறி
செப்புதல் போலமலர்
அத்த நிலத்தினில் வைத்து மகிழ்ந்தினி
தாடுக செங்கீரை
அதிக வளத்துறை பதரி வனக்குக
னாடுக செங்கீரை.
17✓
மணிகிளர் குஞ்சி முடித்திடு முச்சியின்
வச்சிர வொளியாட
மாசறு தேசுறு முத்தியல் சுட்டிநன்
மதியுடு வெனவாடக்
கனிதமி லொளிர்தரு குண்டல மாறிரு
கதிரவர் போலாடக்
கண்ட சரத்தொடு மண்டிய வெழில்வளர்
கண்டிகை களுமாடப்
பணிதரு மரதனம் விரவிய கரவளை
பலபல விதமாடப்
பயில்மர கதமிடை யுறுமரை வடமிசை
பகர்கிண் கிணியாட
அணிகிளர் பரிபுர மாட வசைந்தினி
தாடுக செங்கீரை
அதிக வளத்துறை பதரி வனக்குக
னாடுக செங்கீரை.
18✓
முகநிறை கலைமதி போலொளி தந்திட
முகிணகை நிலவூர
முழுமதி கண்டலர் குமுத மெனப்பொலி
மொய்யொளி வாய்மலர
திகழுமு தனையசெவ் வாயு றியகமழ்
தேறல் வழிந்தொழுகச்
சிற்பரை விழியிணை யான சரந்.....
தெரிவரு மகிழ்கூரப்
புகல்மணி நிலவிய குழையணி காதினை
புயமிசை நின்றாடப்
புத்தமு தச்சிறு குடநிகர் பண்டி
பொலிந்து குழைந்தசைய
அகமகிழ் சுந்தர மேனி குலுங்கிட
ஆடுக செங்கீரை
அதிக வளத்துறை பதரி வனக்குக
னாடுக செங்கீரை.
19வேறு✓
பொருந்திமை யத்துமை கலியா
ணங்காணுந் தேவர்
புகழ்ந்த தவத்தினர் புவியோர்
வந்தியா வருங்கூடி
நெருங்கிட வுத்தர திசைதா
ழஞ்சீர் கண்டீசர்
நிலஞ்சம முற்றிட முனிநீ
சென்றே தென்பூமி
வரும்பொதி யத்துறை யெனநா
தன்பாதப் போதை
வணங்கி யுரைத்தமிழ் மலைமே
லன்றார் வஞ்சேர
இருந்த வனுக்கருள் குமரா
செங்கோ செங்கீரை
இலந்தை வனத்திரு முருகா
செங்கோ செங்கீரை.
20✓
நலங்கொள் மறைக்கொரு முதல்வா
கங்கா ளன்பாகம்
நயந்த மலைக்கொடி புதல்வா
கந்தா செந்தூரா
குலங்கொள் சுரர்க்குள மிசையார்
சந்தா பந்தீரக்
குலுங்கு புனற்சர வணமேல்
வந்தா யின்பான
துலங்கு தவத்துறை முனிவோ
ரெந்தா யென்றோது
சுகந்தம் விரித்தலர் தொடைசேர்
மொய்ம்பா சிங்கார
மிலங்கு மயிற்படை யொருவா
செங்கோ செங்கீரை
இலந்தை வனத்துறை முருகா
செங்கோ செங்கீரை.