கீழ்வேளூர் முருகன் பிள்ளைத்தமிழ்
சப்பாணிப்பருவம்5 / 7
கீழ்வேளூர் முருகன் பிள்ளைத்தமிழ்
சப்பாணிப்பருவம்
31✓
சேரும்விட் புலமுகடு தொடுகுடுமி நிலவுபொற்
சிகரமலி பலமாமணிச்
சித்திரப் பத்திதிகழ் அபரிமிதக் கோமளச்
செல்வநிறை மாளிகைதொறும்
காருமெச் சியகருங் கூந்தற் பொறைக்கிணைக்
கனமுலைக் கொசிமருங்குற்
கன்னிமங் கையர்முன்றி லிடைவைத்து வளர்கின்ற
கார்முல்லை மென்கொடியினுக்
காருநற் கொழுகொம்பு நாட்டல்கண் டன்னையர்கள்
அகமகிழ்ந் தருமணஞ்செய்
ஆசையறி வித்தனார்க ளென்றளவில் வளனொடுகல்
யாணஞ்செய் கோலமெங்குஞ்
சாருநற் பதரிவன மேவுசிற் பரகுமர
சப்பாணி கொட்டியருளே
சனகமுனி முதன்முனிவர் பரவுதிரு முருகவொரு
சப்பாணி கொட்டியருளே.
32✓
பெருமைபெறு வெண்டிரைச் சீகரச் சாகரப்
பேர்பெற்ற வேழாடையம்
பிதிராது தற்றுற்ற வொருமா நிலக்குமரி
பெறுமா ருயிர்த்தொகையெலாம்
ஒருமையுட னெஞ்சத்து வஞ்சப் பிணக்கறுத்
துள்ளுறி யள்ளுறுநல்
லுரைகொண்டு நின்றிரு வெழுத்தையும் வழுத்தியு
முயர்ஞான வேடமணியில்
அருமையுறு மின்பருளி யபிமான மதிமோகம்
அச்சமறி யாண்மையின்னல்
ஆசைமத மாற்சரியம் வெகுளிமுத லணுகா
தகற்றுவிப் பதுநிகர்ப்பத்
தருமமிகு பதரிவன மருவுசிற் பரகுமர
சப்பாணி கொட்டியருளே
சனகமுனி முதன்முனிவர் பரவுதிரு முருகவொரு
சப்பாணி கொட்டியருளே.
33✓
தேனைசெய் கேசரத் தேடுவிரி நாண்மலர்
தெங்கொத் திலாதகாய்க்ககுஞ்
செய்யவட தாருவிற் றுய்யபா சிலையெனத்
திகழு மொருபாயவன்
ஊனமறு செங்கமல மங்கையொடு துயில்கூரும்
ஓங்குவண முருமாலோன்
உந்தித் தலக்கமல முந்திப் பயந்ததிசை
உயர்நான் முகத்துமதுரப்
பானன்மொழி வாணிபதி வேதத்தி னாதிப்
பழம்பொருள் சொலாதமிகையாற்
பசியகுடு மித்தலை குலுங்கப் புடைத்தசெம்
பதுமத் திருக்கரத்தால்
தானமலி பதரிவன வேலசிற் பரகுமர
சப்பாணி கொட்டியருளே
சனகமுனி முதன்முனிவர் பரவுதிரு முருகவொரு
சப்பாணி கொட்டியருளே.
34✓
விழைவுறச் சந்தனக் காடுமலி மலயமலை
வீற்றினி திருக்குமோலி
வேணிப் பசுந்தமிழ் செந்நாப் பெருந்தவ
விதிக்குறு முனிக்கருளுவோய்
குழையுமுத் தமநேச வடியருள மகலாது
குடிகொண்ட பாதவனசங்
கோமளப் பாகர்புய வரைமிசைப் பூப்பவளர்
குழகவழ கொழுகும்வடிவா
கழையுநெற் பயிருமந் தாரமுஞ் சாதியுங்
கமுகுமா லுங்கதலியுங்
கன்னி காரங்களும் புன்னையுஞ் சண்பகக்
காவுமா வும்பனசமுந்
தழையுநற் பதரிவன மருவுசிற் பரகுமர
சப்பாணி கொட்டியருளே
சனகமுனி முதன்முனிவர் பரவுதிரு முருகவொரு
சப்பாணி கொட்டியருளே.
35✓
காதிலிடு வச்சிரக் குண்டலமு நெற்றியிற்
கவினொழுகு பொற்சுட்டியுங்
கரியகவு சியின்வாய்ந்த முச்சியிற் சுற்றிவிடு
கதிர்முத்த மிளிர்தொங்கலுஞ்
சோதிமய மானதிரு மார்பிற் கிசைந்திலகு
தூமணிப் பொன்னாரமுந்
தோளிலணி பன்மணிக் கேயூர முஞ்சிறிய
தொந்திசரி யரைநாணுடன்
சீதமுறு நாதமுரல் கிண்கிணித் தொகுதியுஞ்
செந்தளி ரினுஞ்சிவந்த
சீரடித் துணையிலணி செம்பொற் சதங்கையும்
செய்யநூ புரமுமசையத்
தாதுகமழ் பதரிவன நீதசிற் பரகுமர
சப்பாணி கொட்டியருளே
சனகமுனி முதன்முனிவர் பரவுதிரு முருகவொரு
சப்பாணி கொட்டியருளே.
36வேறு✓
தத்து திரைக்கட லுத்தர திக்கமர்
சமரத் தரிமுகவன்
தானையு மானமு மீன முறும்ப்படி
சங்கிராமத் தொழில்செய்யும்
உத்தம மெத்திய பூத கணாதிபர்
உயர்வீ ரரையேவி
ஓங்கி ரதத்தை நடத்தி யெதிர்த்தவன்
ஓரா யிரமுடியும்
பத்திகொள் கைத்தல மீரா யிரமும்
படவுரு கணைவிட்டப்
பற்றல னுயிருண வச்சிர முய்த்தருள்
பதுமச் செங்கையினாற்
கொத்துறு வெட்சி மலர்த்தொடை வேலவ
கொட்டுக சப்பாணி
கொற்றவ பதரி வனத்துறை சண்முக
கொட்டுக சப்பாணி.
37✓
இலகு மணிச்சுடி கைப்பணி யரசுகடல்
எங்கும்வெ யர்த்தோட
எட்டர வுட்க நடுங்கி மதக்கரி
எட்டுவென் னிட்டதிர
நிலவு திசைக்கிரி பம்பர மொத்துயர்
நிலமிசை நின்றாட
நேமிப் பெருவரை சுழலக் கதிர்மதி
நெளியக் கடல்சுவறச்
சுலவு முகிழ்பட லத்தொடு மண்டச்
சுவர்பிதி ருற்றுதிரத்
தோன்ற வுணக்குலம் வேரற நீடிய
சோதி மணிக்கலபங்
குலவு மயிற்பரி நடவு திறற்குக
கொட்டுக சப்பாணி
கொற்றவ பதரி வனத்துறை சண்முக
கொட்டுக சப்பாணி.
38✓
சீதக் களப வுலாசப் புளகித
செப்பு முலைத்திருவும்
செந்தமி ழுந்திகழ் நன்கலை யுந்தரு
சீருறு பாரதியும்
ஓதக் கடலமு துரையிற் குணவற்
குதவு புலோமசையும்
உள்ள முவந்துவ கைக்கட லாடவிண்
உம்பர்கள் குடியேற
ஆதிக் கத்துட னண்டத் தொகுதியின்
ஆணை செலுத்திமனத்
தச்ச மினிச்சய வச்சிர மிடலுடல்
அச்சு ருரமுருவ
கோதைச் சுடர்விடி வேலைத் தொட்டவ
கொட்டுக சப்பாணி
கொற்றவ பதரி வனத்துறை சண்முக
கொட்டுக சப்பாணி.
39வேறு✓
குறைவறு மதுரம் விளக்கிய
சொற்கிளி யொப்பான
குறமகள் புளக முலைத்துணை
யிற்கள பச்சேறு
நறுமல ரனைய கரத்தினில்
அப்பி நயப்பாக
நறுமுகை விரிய மலர்த்தொடை
மைக்குழ லிற்சூடி
இறுகிடை நலியு மெனச்சொலி
மற்புய வெற்புடுள்
இதமுற மருவிரி பனக்கிது
தக்கதெ னக்கூறி
மறுவறு கலவி வளர்த்தவ
கொட்டுக சப்பாணி
வளமலி பதரி வனக்குக
கொட்டுக சப்பாணி.
40✓
துதிபெறு புலமை நிரம்பிய
மெய்ப்புகழ் நற்கீரர்
சொலுநல கவிதை திருச்செவி
வைத்த முதற்றேவ
கதிதரு கருணை பெருக்கிய
கட்புல வித்தார
களியளி முரல மதுப்பொழி
பற்ப மலர்ப்பாத
விதிமுறை யொழுகு மவர்க்கொரு
கற்பக நற்றாம
விரைசெறி நறிய கடப்ப
மலர்த்தொடை யற்பாள
மதியணி அமல னளித்தவ
கொட்டுக சப்பாணி
வளமலி பதரி வனக்குக
கொட்டுக சப்பாணி.