முருகன் App
கீழ்வேளூர் முருகன் பிள்ளைத்தமிழ்
காப்புப்பருவம்2 / 7
கீழ்வேளூர் முருகன் பிள்ளைத்தமிழ்

காப்புப்பருவம்

1திருமால்✓
சீர்கொண்ட பகிரண்ட கோடுபல பெற்றுநிறை
செவ்வி தளராத உமையாள்
சீதமதி வேணியர னிருவர்கண் மணியையியுயர்
தேவர்பெரு வாழ்வை மலிதேன்
நீர்கொண்ட தண்டலைக ளெண்டிசையு மண்டியெழில்
நிலவு கீழ்வேளூ ரில்வாழ்
நித்தியனை வாலசுப் பிரமணிய சுவாமிதனை
நிருமலனை இனிது காக்க
வார்கொண்ட செங்கமலை யென்னுமின் னினைமருவி
மகிழ்க ருணைமா ரிபெய்து
மன்னுமூ வுலகெனுங் கழனியிடை யுயிரென்ன
வருபெரும் பயிர்வ ளர்த்தே
ஏர்கொண்ட மார்பின்மணி பைந்துளவு தந்தவொளி
யென்னும்வான வில்லை மருவி
இயன்முல்லை மாதரென வருதோகை யோகையுற
எழில்பெற்ற நீல முகிலே
2சிவபெருமான் (சந்தவிருத்தம்)✓
பாலா ர் தேன்மொழி நீள்க ரும்புயல்
போலார் மைக்குழல் பங்கரைக் கூர்த்திடு
பானா ளாரிரு ளாய்வ ளைந்தெழும்
ஆலா லத்தொளிர் கண்டரைச் சீர்ப்பெறு
பாவான் மூவர்மு னாளி யம்பிய
தேவா ரப்பொரு ணம்பரைப் பாற்பொலி
பாரா வாரச மான வின்பம
தானா வற்புத விம்பரைத் தேக்கிய
கீலா லாதிப னாதி யெண்டிசை
ஆள்வார் சக்கர மங்கையிற் சேர்த்தவர்
கேழார் தாமரை மீதி ருந்திடு
வேதா மெய்த்தவ ரம்பரத் தீர்த்தர்கள்
கீழேழ் பாதள லோக ரம்புவி
மேலோர் நித்தமு மன்புவைத் தேத்திய
கீழ்வே ளூருறை யோக சுந்தர
வாழ்வா மாட்சய லிங்கரைப் போற்றுதும்
நாலா காரண நூன்மொ ழிந்தருள்
கோமா னைச்செய துங்கனைப் பாட்டியல்
நானா பேதவி ராக வண்டிமிர்
தேனீ பத்தொடை மொய்ம்பனைப் பாற்றிகழ்
ஞானா காரவி லாச சம்ப்ரம
லீலா நற்பிர சங்கனைக் கார்த்திகை
நாண்மா னார்தரு பால லர்ந்தசெவ்
வாயா ரக்கொளு மைந்தனைப் போர்த்தொழில்
மாலா ர் சூரொடு நேநெர திர்ந்திகல்
வேலால் வெற்றிசெ யெந்தையைத் தேற்றமில்
மாசார் கானவ ராய்வ ரும்பல
மால்யா னைக்கொரு சிங்கனைப் பாக்கிய
வானா டேகுகு யாக வும்பரை
யேதா பித்திடு நண்பனைச் சேட்செலும்
மாமே காரந டாவி வந்தருள்
சீரார் பொற்புறு கந்தனைக் காக்கவே.
3உமை✓
வலஞ்செய் துளத்தருள் பெறுபரி பாகர்கள்
மாசறு பரசுக மருவக் கொடுத்தவள்
வணங்கு சிரத்தினர் மகபதி நான்முகன்
மால்பத முறவருள் வரத கரத்தினள்
வயங்கு வனக்கிளி புரிதவ மியாதுகொல்
வாவென மதுர நன்மொழியைப் பயிற்றுவள்
மகிழ்ந்த வனித்தொகை பெறுமொரு தாயென
வாழ்வருள் கருணைமெய் வடிவுற்ற சிற்பரை
இலங்கு விழிக்கயல் குழையணி காதினி
லேதமில் குவளையி னுலவப் படைத்தவள்
எழுந்த மதிக்கணை யிதுவென மான்மத
மேர்பெற வெழுதிய திலகத்து நெற்றியள்
இருண்ட களிற்றிடை மதனலர் வாளிகள்
ஏயும தெனமல ரளகத்தில் வைத்தவள்
இலந்தை வனத்துறை வனமுலை நாயகி
ஈசுவரி பதமலர் இணையைய் பழிச்சுதும்
குலங்கொள் தயித்திய இருள்கெட வேலிடு
கோழியோர் வனமகனைப் பெருத்திடு குரும்பை
முலைத்துணை வனிதை புலோமசை கோமகள்
தழுவியணைச் சுகத்தனை குழைந்த கருத்துடன்
வழிபடு சீரியர் கூறியமுறைதரு வைப்பரப்பிய
விலங்கு திரைக்கடல் புகுமொரு சூரனை
வேல்கொடு பிளவு செய்த தருவனைச்
சகத்தினில் வியந்த விரதத்தை நிலவு
பராசரன் மேவுறு சிறுவர்கள் பணியற்புதத்தனை
விளங்கு மிசைத்துறை மகதியினா ரதன்வேள்வியி
லெழுந்தகர் நடவச் சமத்தனை விளம்பு
சமர்க்கொரு கரையென லாநவ வீரர்கள்
முனிவரு குகனைப் புரக்கவே.
4விநாயகர்✓
உரைசெய்மறை என்னவியல் பாரதக் கதையினையொர்
உலவைகொடு பொன்னினியுயர் மேருவெற்
புறவெழுதும் ஆனையைப் பார்ப்பதி
பரமசிவன் முன்னுதவு பாலனைப் புயலணவு
பதரிவன மன்னுக்கண நாதமெய்க்
கணபதியை ஆர்வம் வைத்தேத்தும்
விரவுமெழில் அன்னநடை மேவுபொற் கலசமுலை
விசயவயில் அன்னவிழி மோகனக்
குறவனிதை பாகனைத் தோற்றிய
விரவியொளி மின்னுகதிர் வேலனைப் பணியுமவர்
இனியகதி நண்ணவருள்வாலசுப்
பிரமணிய சுவாமியைக் காக்கவே.
5திருமகள்✓
அகல மாகப் பொன்படைத்தார்
அவனி புரப்பார் பகைதுரப்பார்
அழியாப் புகழும் பெறுவரென
அறிவிப் பதற்குப் பரந்தாமன்
நிகழும் மார்பின் வீற்றிருந்து
நினைத்த வெவையுங் கொடுத்தருளி
நிறையு முரையும் பேரொளியு
நிலவு பொன்னைப் பணிகுவாம்
சகல நூலுந் தருவானைச்
சைவ சமய பூஷணனைத்
தருவா னவர்தஞ் சிறைவிடுத்த
தனிச்சே வகனை மயிற்குஹனை
புகலு மிலஞ்சி மலர்ப்பசுந்தேன்
பொழியும் வளஞ்சே ரிலந்தைவனப்
புனிதன்மகனைச் சரவணப்பூம்
பொய்கைக் கரைசைப் புரக்கவே.
6கலைமகள்✓
மந்தரமோர் மத்தாக வந்தரத் திந்துவொரு
மதலையாய் விதலையறியா
வாசுகியை நேசமுறு நாணெனச் சேணமரர்
வைத்துவரு வித்தமுதந்
தந்தசுவை கைப்பென்று மெய்ப்புலவர் செப்பும்வகை
சதுரநவ ரசகோமளத்
தண்ணெனக் கவிச்செல்வ நல்குபா ரதியுள
சரணதா மரைபணிகுவாம்
இந்திரன்முதல் வானவர்கள் நயனமுந் தானவர்க
ளேலுமட மாதர்விழியும்
இலகுவல மாடவிக னிசாசரர்தம் விழியும்எழில்
இனியசுரர் தினமுமகிழு
மந்தன்மொழி மடமாதர் விழியுமிட னாடவோ
ரயில்வேல் பிடித்தகுகனை
ஆறுமலர் முகனையருள் பதரிவன வரன்மகனை
ஆதியைக் காக்கவென்றே.
7பிரமன்✓
அந்தன் மொழியை யொருதன்மைத் தாக்கா
தெவர்க்கும் வெவ்வேறு
யாக்கு கெனப்பா மடந்தையைத்தன் னணிசேர்
மணிநா மிசையிருத்தி
உந்தி வனசத் திருந்துக
முறுமெப் பொருளும் படைத்தருளும்
உயர்நான் முகத்து மறைக்கிழவ
னுவந்து தினமுந் தனிபுரக்க
முந்து சுடர்வேற் கரத்தானை
முழுதும் கொடுக்கும் வரத்தானை
முதிரு நிகமச் சிரத்தானை
மூழ்கும் விசயச் சரத்தானைச்
சந்த மயில்வா கனத்தவனைத்
தயவு பெருகு மனத்தவனைத்
தமிழ்ச்சேரி லந்தை வனத்தவனைத்
தயங்கு விசாகத் தினத்தனையே.
8இந்திரன்✓
மருவுந் தனக்கோட் டிணைதால
வட்டந் துதிக்கை பெறுதெய்வ
மால்யா னையினை முன்மணந்து
வளர்சொற் கவள மருத்துவித்துப்
பெருகுங் குசங்கை வசமாக்கிப்
பிரியாப் பாசத் தொடுசேர்க்கும்
பெரிய பாக னெனுமுருகப்
பிரானைக் குகனைத் தனிபுரக்கத்
தருவி னீழல் விரவுசுரர்
தடமா மகுடத் தலைபணியத்
தளிர்க்கற் பகமுங் கடமணியுஞ்
சாற்று மேவல் ஆற்றிவரக்
குருமென் மலர்க்கொந் தளவளகக்
கொவ்வைக் கனிவாய் அயிராணிக்
குதலைப் பசுந்தேன் செவிமடுத்துக்
குலவுங் குலிசப் பெருமாளே.
9சப்த மாதர்கள் (சந்தவிருத்தம்)✓
கனதம னியவரை வண்ணவிற் கோட்டினள்
கலையினை நடவுமோர் வெம்முனைக் காட்டினள்
கடல்புகு மவனியை முன்னையிற் சேர்த்தவள்
கதிர்விரி திகிரியை மன்னுகைக் கேற்றவள்
இனமலி சதுமறை யுண்மையைத் தேறினள்
எழுதரு வளநகர் விண்ணவர்க் காத்தவள்
இனமயில் மிசைவரு மன்னமெய்ப் பேட்டினள்
எனுமிவ ரெழுவரை நன்னயத் தேத்துதும்
சினமொடு விழிதொறும் வன்னியைக் காட்டிய
திடமுளத் தகுவர்கள் பின்னிடப் போர்த்திடு
சிறைமயி லுய-- திண்ணனைக் காட்டிய
திகழ்தரு வருள்பொழி கண்ணனைத் தேக்கமழ்
வனம்வரு குறமக ளண்ணலைப் பார்ப்பதி
மனமகிழ் மழலைச்சொல் சண்முகத் தீர்த்தனை
மணமலி சரவண முன்னனைக் கீர்த்திகள்
மருவுப தரிவன மன்னனைக் காக்கவே.
10முப்பத்து முக்கோடி தேவர்✓
ஞானசுக மிக்கவனை வேலவனை யோகனை
நலங்கிளர் கிரிக்குல மிடந்தொறும் விருப்பனை
ஞாலவலை யச்சுகைக சோதிதரு சேடனு
நடுங்கிட நடத்திய விளங்கு மயிலப்பனைக்
கோனவனை வெட்சிமலர் கோடன்மலர் தேனுறை
கொழும்பிரச முற்றிடு கடம்பணி புயத்தனைக்
கூவிவரு குக்குடப் பதாகையனை மேதகு
குறிஞ்சியனை வித்திக ழுவந்தருண் முகத்தனை
வானமலி மைப்புயல்கள் சாளர நிலாவிய
வளந்தரு மணிப்புரிசை யெங்கணு மதத்தொடு
வாதுவரை விட்டுலவும் வேழமென மேவிய
வரம்பெறு திருப்பதி யிலந்தைவன நித்தனை
ஆனதொகை முப்பதொரு கோடியிரு கோடிகள
ணைந்திடு புகழ்க்குலவு மும்பர்க ளெனச்சொலு
மாதவரு ருத்திரர்கள் மேவுவசு வானவ
ரிலங்கிய மருத்துவர் தினந்தனி புரக்கவே.