கீழ்வேளூர் முருகன் பிள்ளைத்தமிழ்
வருகைப்பருவம்7 / 7
கீழ்வேளூர் முருகன் பிள்ளைத்தமிழ்
வருகைப்பருவம்
51✓
சீலமெச் சியதவம் புரிபரா சரனுதவு
சிறுவர்முன் செய்தபிழையாற்
செய்யமன மச்சமுற மச்சமா குதிரெனச்
செப்புசா பத்தைநீக்கிக்
காலமைப் புயலுலவு தென்பரங் குன்றினவர்
கருமமல மாயைதவிராக்
கண்ணருள்செய் தெண்ணரிய சிவஞான நல்கிவரு
கற்பனை கடந்தமுத்தி
சாலவுற் றகலாமல் வைத்தகுரு பரனெனச்
சாற்றியுள நெக்குருகியே
தளராம லனுதினமும் வழிபடும் பேரன்பர்
தங்களுந் கெல்லாமநு
கூலமெய்ப் பதரிவன வாலசுப் பிரமணிய
கோதைவே லவன்வருகவே
கொக்கிறகொ டக்கணியு நக்கனரு ளுக்கிரசேய்
குக்குடது வசன்வருகவே.
52✓
சேடனைப் பொருவுவலி யுள்ளபண மணியொளிறு
தேசுவா சுகிநாணினைச்
செந்தம னியச்சிகர முந்துமந் தரமெனுந்
திகழ்மத்தின் மீதுகொருவி
நீடலைத் திரள்குலவு பாற்கடலை மாற்கடவுள்
நீளமரர் ஞெலியமலியு
நித்தவமு தத்தினுற் பத்தியுற் றதிசீத
நிழலின்முத் தாபமாற்றிச்
சூடகக் கமலமல ரங்கையர் மங்கையர்கள்
சுரர்முனிவர் புகழாளுந்
துகளற்ற வமுதமய மானகனி நனிதந்து
தூயதிசை யெட்டுமெட்டுங்
கோடறப் பதரிவன வாலசுப் பிரமணிய
கோதைவே லவன்வருகவே
கொக்கிறகொ டக்கணியு நக்கனரு ளுக்கிரசேய்
குக்குடது வசன்வருகவே.
53✓
கோடுமுத் தமிழ்வனச வாவியிற் சினவாளை
குதிகொண்டு முதிர்வாழையின்
குலைசாடி நெடுநாளி கேரத் தனிக்கனிக்
குலையுதிர்த் தினியபனச
நீடுமுட் குடமனைய புழமுடைய விடறிமடல்
நிலவுகமு கலையமோதி
நீனிறப் புயல்வறிய குழையமழை பொழியும்வகை
நெடிதோடி யும்பர்தருவின்
ஊடுபொற் பொடிசிதறு நறுமலரி னறவுற்றின்
ஒழுகுபே ரருவியுடனே
உயர்நிலையி னின்றுவந் துழுவுதய னிறைபுனலின்
உற்றதன் கிளையினோடு
கூடுநற் பதரிவன வாலசுப் பிரமணிய
கோதைவே லவன்வருகவே
@todo 2 more lines
@todo add rest of the books