முருகன் App
கீழ்வேளூர் முருகன் பிள்ளைத்தமிழ்
தாலப்பருவம்4 / 7
கீழ்வேளூர் முருகன் பிள்ளைத்தமிழ்

தாலப்பருவம்

21✓
மின்னுக் கொடிபோல் மயிலினம்போல்
மிழற்றுந் தீஞ்சொற் குயிலினம்போல்
விரைக்கற் பகப்பூங் கொம்பினம்போல்
விளங்கும் கனக மாலிகைபோற்
கன்னற் சிலைவேள் பெருமிதம்போற்
கதிர்மா மணிபோல் விளக்கொளிபோல்
……… ……… ………
……… ……… ………
அன்னப் பெடைபோல் மானினம்போல்
அவனி படைத்த பெருநிதிபோல்
அழகு பழுத்த கொழுங்கனி போல்
அணிமா ளிகையின் மடமாதர்
மன்னிப் பயிலும் இலந்தைவன
வாழ்வே தாலோ தாலேலோ
மயில்மா முருகா மகபதிக்கு
மருகா தாலோ தாலேலோ.
22✓
முதிர்தேன் றுளிக்கு நறையாம்பல்
முறுக்கு நெகிழ்ந்து முகமலர
முற்று மெழிற்சந் திரகாந்த
முழுமா ளிகைதன் புனல்கொழிப்பக்
கதிர்மா மணிநீ டரமியமேற்
கணவர் புயமங் கையர்திளைப்பக்
கருதும் சகோர மகிழ்தூங்கக்
கதிரோன் இரவோ வென்றயிர்ப்ப
……… ……… ………
……… ……… ………
அம்பொற் புரிசை யிடந்தோறு
மாரமுயர்த்துச் சங்கினங்கள்
மதிபோ னிலவு மிலந்தைவன
வாழ்வே தாலோ தாலேலோ
மயின்மா முருகா மகபதிக்கு
மருகா தாலோ தாலேலோ.
23✓
ஒலச் சிறைவண் டினம்பெடையோ
டுதிக்குஞ் சிறுகா லையிற்கமலத்
தூறும் பசுந்தேன் பருகிமண
முயிர்த்துக் கனகத் தாதூதிக்
கோலப் பொழிலிற் கணிகையர்தங்
கூர்வேல் விழிபோ லுலவியுச்சி
குறுகிக் கதிரோன் கதிரினொளிக்
குளிர்நித் திலம்வெண் டிரைகொழிக்கும்
மேலக் கடலிற் புகுவதன்முன்
விரைந்தும் மதுரக் காமரப்பண்
மிழற்றி யமுத கிரணன்வர
விரியு நறைப்பூங் குமுதமிசை
மாலை பயிலு மிலந்தைவன
வாழ்வே தாலோ தாலேலோ
மயின்மா முருகா மகபதிக்கு
மருகா தாலோ தாலேலோ.
24✓
கிளரும் பசுந்தோட் டிளந்துளபக்
ரலங்கற் சுருளோதிக்
கெண்டை நெடுங்கட் செந்துவர்வாய்க்
கிளைக்கும் பணைப்பூண் முலைசுமந்து
தளருஞ் சிறிய விழைமருங்குற்
றண்ணங் கமலத் திருமாதைத்
தழுவி மகிழு மொருமாமன்
றுவகை மீதுர
ஒளிருங் கனகத் தாலியற்றி
யொன்பான் மணியிற் குயிறிமுழு
துலகம் புகழக் கொணர்ந்தவெழி
லோங்கு மணிப்பூந் தொட்டிலிடை
வளருங் குமரா விலந்தைவன
வாழ்வே தாலோ தாலேலோ
மயின்மா முருகா மகபதிக்கு
மருகா தாலோ தாலேலோ.
25✓
தக்க நவவீரர் கடாயர்
சுகுண வருணச் சுடர்படலை
தழைக்கு நவமா மணித்தொகுதித்
தகுதி விளங்குந் தொட்டிலிரு
பக்க மருவி நின்றாட்டும்
பருவத் திமையப் பாவையுடன்
பரம னவர்க்கண் டைத்தெனத்தாம்
பைம்பொற் றுகிலாற் றொட்டிலினை
மிக்க வகையாற் புறம்பொதிய
விமலன் நகைக்க வாங்கவர்கள்
வெள்கி வறிதே நிற்பவுமை
விரும்பி எடுத்து மடித்தலமேல்
வைக்க மகிழும் இலந்தைவன
வாழ்வே தாலோ தாலேலோ
மயின்மா முருகா மகபதிக்கு
மருகா தாலோ தாலேலோ.
26வேறு✓
வளமை தழைத்திடு சரவண வாவியில்
வளருஞ் சிறுமகவே
மன்னிய வாரல் மடந்தையர் பூண்முலை
வருபா னுகர்வோனே
இளமை மயிற்புற மகிழ்கதிர் ஞாயி
றெனதிகழ் மேனியனே
எங்கு நிறைந்த சுகக்கட லாகியெ
னிதயத் துறைபவனே
களப மிகுத்தலர் புளக முலைக்கன
கவுரிகண் ணொளிர் மணியே
கறுவு சமர்த்தொழில் நிறுவிய வீரக்
காளைய ராதிபனே
தளவ மணத்திடு பதரி வனத்திறை
தாலோ தாலேலோ
சங்கரர் தந்தருள் கந்த துரந்தர
தாலோ தாலேலோ.
27✓
திங்கள் முகத்திரு வாணி புலோமசை
சீர்பெற வந்தவனே
தெய்வ நதிப்பகி ரதிமல ரங்கை
செழிக்க வளர்ந்தவனே
துங்க மறைப்பிர மாவை வினாவிய
தொன்மனு வாசகனே
சூழ்தரும் வானவ ரியாவரும் வந்து
தொழும்பத பங்கயனே
இங்கித வங்கிய மங்கல கீத
மியம்பிய மான்மகளார்
ஏர்பெற முன்புசெய் மாதவ நாடி
யெழுந்தரு ளும்பொருளே
சங்க மொலித்துறை பதரி வனத்திறை
தாலோ தாலேலோ
சங்கரர் தந்தருள் கந்த துரந்தர
தாலோ தாலேலோ.
28✓
அண்டரை முன்னம் வெகுண்ட பெருந்திற
லதிசூ ரொடுமாவை
அலைவாய் விரைவாய் விழநீ டியகதி
ரடல்வேல் விடுவோனே
தொண்டரை யென்றும் விடாதிக பரமுறு
சுகநுகர் வித்துமெனத்
தோன்ற பயத்தொடு வரத நிலாவிய
தொடியணி செங்கையனே
கொண்ட லெனச்செறி பாசடை யுந்திகழ்
குளிர்தா ரகையென்மேற்
குலவிய புதுமல ரும்பெய லெனவரு
கொழுவிய தேனுநிறை
தண்டலை மண்டிய பதரி வனத்திறை
தாலோ தாலேலோ
சங்கரர் தந்தருள் கந்த துரந்தர
தாலோ தாலேலோ.
29(சந்த விருத்தம்)✓
காதார் தோயார் பாலா லோலா கோமானே
காவே தாவே யாறா மூரா சீராளா
மாதா வேபோ னாயே னாழா தாள்வோனே
வானோர் வாழ்வே ஞானா காரா தேசானே
வேதா தாலோ தாலே லோகீழ் வேளூர்வாழ்
சேயே தாலோ தாலேலோ தாலோ தாலேலோ
30✓
வேயூ தோர்மால் நேயா தாலோ தாலேலோ
வேளே தார்சேர் தோளா தாலோ தாலேலோ
தீயூர் சூர்போ ரேறே தாலோ தாலேலோ
சேனா பாரா வோரார் தாலோ தாலேலோ
மாயூ ராபா வாணா தாலோ தாலேலோ
மாயா வீடே யீவாய் தாலோ தாலேலோ
கேயூ ராமா சீரா தாலோ தாலேலோ
கீழ்வே ளூர்வாழ் சேயே தாலோ தாலேலோ.