முருகன் App
செல்வச்சந்நிதி முருகன்பேரில் கிளித்தூது
சந்தனா நல்லலிங்கம்
குளிர்மலர் தூவியேதான்5 / 7
செல்வச்சந்நிதி முருகன்பேரில் கிளித்தூது · சந்தனா நல்லலிங்கம்

குளிர்மலர் தூவியேதான்

7விருத்தம்✓
குளிர்மலர் தூவியேதான் கழலணிதாள் பணிந்து
களிப்புறக் கந்தர் என்னைக் கலந்துமே சென்ற செய்கை
அழிந்த என் உள்ளந்தன்னில் அதி நிறை வளிக்கும் வண்ணம்
அளியுறு தொடையலொன்று அவசியம் வாங்கி வாராய்.
8வேறு✓
தையலுரை கேட்டதுமே கிள்ளைதானும்
தைரியமாச் சந்நிதி யுற நினைந்ததே
உத்தர திசையை நோக்கியே
உயரப் பறந்ததாமே கிள்ளை
நித்தமுமே தேவரெல்லாம் போற்றும்
நிகரில்லாக் கோணேச்சரம் தான் பணிந்ததே
முத்துத்திரை கொழிக்கும் நல்ல
முந்திய கேதீச்சரமும் பணிந்ததே
நற்றமிழார் நாவலர் போற்றும்
நல்லூரிற் கந்தவேளைப் பணிந்ததே கிள்ளை
மாருதப்புரவீகவல்லி சாபந் தீர்த்த
மாவிட்ட புர வேலனை வணங்கிற்றே கிள்ளை
வானோங்கி வளர்ந்துநின்ற பனந்தோப்பு
தேனோங்கும் மா பலாவின் வளத்தோப்பும்
கானோங்கிக் காட்சிதந்த செவ்விகண்டு
களித்துமே பறந்ததாமே வண்ணக்கிள்ளை.