முருகன் App
செல்வச்சந்நிதி முருகன்பேரில் கிளித்தூது
சந்தனா நல்லலிங்கம்
தன்மனை தன்னை3 / 7
செல்வச்சந்நிதி முருகன்பேரில் கிளித்தூது · சந்தனா நல்லலிங்கம்

தன்மனை தன்னை

3விருத்தம்✓
தன்மனை தன்னை விட்டே தலைவியும் விடையுங்கொண்டு
தன்னுயிர் பாங்கியில்லம் தயவுடன் நாடியேதான்
மன்னு மாங்காவில் வேலர் வடிவுடன் அணைந்தசெய்கை
நன்னுதல் நங்கைதானும் நயந்துமே நவிலலுற்றாள்
4வேறு✓
எந்தனுயிர்த் தோழியரே
ஏந்திழையே எந்தனுரை கேளும்
செல்வச் சந்நிதி வேள் காவினிலே
சேர்ந்தணைந்து சென்றாரடி தோழி
அன்னை தந்தை தவப்பயனே
அன்பராய் முருகர் வந்தணைந்தார்
இன்னும் நீசெய் தவப்பயனே
இந்தக் காவினிலே கந்தரணைந்தார்
இந்த மொழி கேட்டதுமே நங்கை
இயம்பினளே தோழிக்குத் தன் நிலையை
கந்தர் வந்தணைந்து சென்றதாலே
எந்தன் சித்தம் கலங்கிடுதே தோழி
மெய்யாகவே கூடிச் சென்ற சேதி
மேதினியில் யார்க்குரைப்பேன் தோழி
கையினிலே வேலுடனே வந்து
மெய்கலந்து சென்றனனே தோழி
தோற்றமெல்லாம் கந்தவேளாய் எங்கும்
தோற்றுதே யென் கண்களுக்குத் தோழி
தேகமெல்லாம் சோர்கிறதே தோழி
தேசுடைய வேலரைக் காணாமல்
வேலவரை மீண்டுங் கண்டு கூட
வேண்டியதோர் புத்தி நீயும் கூறாய்.