முருகன் App
செல்வச்சந்நிதி முருகன்பேரில் கிளித்தூது
சந்தனா நல்லலிங்கம்
சோதிமா மணிகளோங்கும்6 / 7
செல்வச்சந்நிதி முருகன்பேரில் கிளித்தூது · சந்தனா நல்லலிங்கம்

சோதிமா மணிகளோங்கும்

9விருத்தம்✓
சோதிமா மணிகளோங்கும் சுடரொளி மாடமோங்கும்
கோதிலாக் கொடிகளோங்கும் போதலர் சோலையோங்கும்
போதமே அளிக்கவல்ல பொலிவுறு சந்நிதியை
ஏதமே போக்க வென்றே இசைந்துமே வணங்கும் கிள்ளை.
10நொண்டிச் சிந்து✓
தத்துகடல் முத்துமிழ்ந்ததே
வித்தாரச் சந்நிதியான் பொற்பதியிலே
குத்திடுதே கோலமணிக்கோபுரம் வானை
குலவியே விளங்கிட நின்றுயர்ந்துமே
பொல்லாத வினைகள் போக்கும்
செல்வச் சந்நிதிக்கடலில் ஆடியதே
பொற்றேரோடும் வீதி தனையே
பொலிவுற வலம் வந்து வணங்கியதே
நக்கீரரின் ஆற்றுப் படையை
தத்தை மொழியாலே இயம்பிற்றே கிள்ளை
ஆலிலையிலே சாதம் உண்டு
பாலமுது பஞ்சாமிர்தம் தாமுமுண்டு
ஏலவார் குழல் வள்ளி
தேவானையாருடன் மகிழ்ந்தவேலர்
பூவரச மர நிழலில்
புன்னகைத்துப் பக்தர்களைக் காத்து நிற்கையில்
வன்ன மயில் தோகை விரித்து
வாகாக ஆடுநின்ற வேளைதனிலே
வளைசிலை மதன் செய்கையால்
வனிதையர் படுந்துயர் பன்னிற்றே கிள்ளை
வாய்புதைத்து வணங்கி நின்று
வாதைப் படும் பெண்ணின்றுயர் விளம்பியதே
பூவை படும் பொல்லாத்துயரம்
பூதலத்திற் றாங்கொணாது என்பதனையே
பூங்கடம்ப மார்பனிடம் மெல்லக் கழறி
பூந்தொடையல் ஒன்றருள வேண்டுமென்றதே
புன்னகைத்து வேலவரும் மெல்ல
தன்னுடைய மார்பிலணி வாசத்தொடையை
மன்னுகாதல் வசப்பட்ட மங்கையவளின்
பொன்றுதுயர் போக்கிடவே புரிந்தளித்தார்
மெய்புளக மெய்தியதே வண்ணக்கிள்ளை
தெய்வக் கந்தன் சந்நிதியைத் தான் விட்டதே
பூந்தொடையைப் பூவையவள் முகமலர
பூங்கரத்தில் பூசித்துமே அளித்திடவே
மால்மருகன் மீது காதலான மங்கையும்
மலர்த்தொடையலைத் தனது மார்பிலணிந்தே
மாலுறுமனத் துயரம் மாறக் கண்டனள்
மலர்தலையுலகினில் மகிழ்வாய் வாழ்ந்தாள்
வச்சிர் கூட்டிலுறை கிள்ளையை
வாகாகக் கைகளிலே காரிகை யேந்தி
இச்சகமாகப் பல வார்த்தைகள் கூறி
இனிதாகப் பாலமுதும் பழமும் ஊட்டி
இசைவாக நாட்டின் வளங் கேட்டனளே
இங்கிதமாகக் கிள்ளைதானும் இனிதே செப்பும்