முருகன் App
செல்வச்சந்நிதி முருகன்பேரில் கிளித்தூது
சந்தனா நல்லலிங்கம்
விநாயகர் துதி1 / 7
செல்வச்சந்நிதி முருகன்பேரில் கிளித்தூது · சந்தனா நல்லலிங்கம்

விநாயகர் துதி

1வெண்பா✓
இந்நூல், குருவாகிய தாய் பசுவாகிய மகளைப் பக்கு வப்பட்ட ஆன்மாவாக்கித் தருமமாகிய தோழி துணை செய்ய, அறிவாகிய கிளியைத் தூதனுப்பிப் பதியாகிய முருகக் கடவுளோடு கலந்து பேரின்பம் அனுபவித்தலைக் கருதிற்று.
வாரானைக் கன்றே வரமருளும் ஆரணமே
காரானைக் கன்றே கலியுகத்தில்-தாரானை
செல்வச் சந்நிதியானைக் கிளித்தூதி னாற்பாட
செல்வமிகு வாரணமே காப்பு.