முருகன் App
செல்வச்சந்நிதி வேலர் திருவூஞ்சல்
த.பொ. கார்த்திகேசு
இலாலி6 / 7
செல்வச்சந்நிதி வேலர் திருவூஞ்சல் · த.பொ. கார்த்திகேசு

இலாலி

7✓
பிரணவப் பொருளதைத் தந்தோயி லாலி
பிறங்கிடுந் தமிழினை வளர்த்தோயி லாலி
சரவணப் பொய்கையில் வந்தோயி லாலி
சங்கரன் தந்தநற் சாமியேயி லாலி
அகுண கிரிக்கருள் செய்தோயி லாலி
ஆதியாய் நின்றிடும் அன்பேயி லாலி
அரணதாய் எமக்குதவும் அமுதேயி லாலி
அருள்செல்வச் சந்நிதிவே லப்பாவி லாலி.