முருகன் App
செல்வச்சந்நிதி வேலர் திருவூஞ்சல்
த.பொ. கார்த்திகேசு
பராக்கு5 / 7
செல்வச்சந்நிதி வேலர் திருவூஞ்சல் · த.பொ. கார்த்திகேசு

பராக்கு

6✓
ஆடுமயில் மீதிவரும் அழகா பராக்கு
அணிசேவற் கொடியுயர்த்த அமலா பராக்கு
கூடசுரர் குலமொழித்த கோவே பராக்கு
குலவுதெய்வ யானைமகிழ் குழகா பராக்கு
நாடுவள்ளி தனைமணந்த நாதா பராக்கு
நம்பனருள் நாயகனே நலனே பராக்கு
தேடுகின்ற வேலேந்தும் செல்வா பராக்கு
செல்வச்சந் நிதியமரும் தேவே பராக்கு.