முருகன் App
செல்வச்சந்நிதி வேலர் திருவூஞ்சல்
த.பொ. கார்த்திகேசு
வாழி3 / 7
செல்வச்சந்நிதி வேலர் திருவூஞ்சல் · த.பொ. கார்த்திகேசு

வாழி

4✓
சீராரும் திருநீறும் அக்கம் வாழி
திகழ் மறைகள் ஆகமங்கள் சிறந்துவாழி
நேராரும் அந்தணர்கள் நிறைந்து வாழி
நெடுவேலின் புகழ்பரவும் நெறியோர் வாழி
ஏராரும் தமிழ்சைவம் இயைந்து வாழி
எழிலாரும் யாழ்ப்பாணத் தேயம் வாழி
பேராரும் தொண்டைமா னாறும் வாழி
பிறங்குசெல்வச் சந்நிதியும் வாழி வாழி.