முருகன் App
செல்வச்சந்நிதி வேலர் திருவூஞ்சல்
த.பொ. கார்த்திகேசு
நூல்2 / 7
செல்வச்சந்நிதி வேலர் திருவூஞ்சல் · த.பொ. கார்த்திகேசு

நூல்

2✓
சொல்லாரும் நாதவிந்து கால்க ளாகத்
துதித்திடுநற் சத்தியதே விட்ட மாக
நல்லார்சொல் தந்திரநூ லிழைய தாக
நாடுகின்ற நான்மறைகள் கயிற தாக
வல்லார்சொல் உபநிடதம் பலகை யாக
வாகதரும் பிரணவமே பீட மாக
எல்லாரு மேத்துசெல்வச் சந்நிதி மேவும்
எழிலாரும் வேலவரே யாடீ ரூஞ்சல்
3✓
நக்கீரன் அருணகிரி நவிலு மின்னோர்
நலிவுற்ற துயர்களைந்தீர் ஆடீ ரூஞ்சல்
உக்கிரமாய் வருகடலைச் சுவற விட்ட
ஓங்காரத் துட்பொருளே யாடீ ரூஞ்சல்
நெக்குருகித் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
நின்றொளிரும் நீர்மையரே யாடீ ரூஞ்சல்
தக்கவொரு பதிசெல்வச் சந்நிதி மேவித்
தமிழ்தழைக்க வேலவரே யாடீ ரூஞ்சல்.