முருகன் App
செல்வச்சந்நிதி வேலர் திருவூஞ்சல்
த.பொ. கார்த்திகேசு
காப்பு1 / 7
செல்வச்சந்நிதி வேலர் திருவூஞ்சல் · த.பொ. கார்த்திகேசு

காப்பு

1✓
திருவோங்கி வளரீழ மண்ட லத்து
சிவம்பெருக்கும் யாழ்ப்பாணத் தேயந் தன்னில்
தருவோங்கி வளர்தொண்டை மானா றென்னும்
தலமதனின் தென்பாலில் இனிது மேவும்
உருவோங்கி வளர்செல்வச் சந்நிதி யுற்று
ஒளிர்கின்ற வேலவர்மேல் ஊஞ்சல் பாட
மருவோங்கி வளர்சோலைப் பாங்கர் மன்னும்
மாணிக்கப் பிள்ளையார் காப்ப தாமே.