முருகன் App
செல்வச்சந்நிதி வேலர் திருவூஞ்சல்
த.பொ. கார்த்திகேசு
மங்களம்7 / 7
செல்வச்சந்நிதி வேலர் திருவூஞ்சல் · த.பொ. கார்த்திகேசு

மங்களம்

8✓
எங்குநிறை ஈசருக்கு மங்களம் — எழில்
இயைந்தமயில் இவர்பவர்க்கு மங்களம்
கங்கைதன் சிறுவருக்கு மங்களம் — மகா
கணபதியின் இளவலுக்கு மங்களம்
பங்கமெலாம் அகற்றுவோர்க்கு மங்களம் — குரு
பரனாகும் குமரருக்கு மங்களம்
செங்கைவடி வேலவர்க்கு மங்களம் — சீர்
செல்வச்சந் நிதிக்குகுகற்கு மங்களம்.