முருகன் App
செல்வச்சந்நிதி வேலர் திருவூஞ்சல்
த.பொ. கார்த்திகேசு
எச்சரிக்கை4 / 7
செல்வச்சந்நிதி வேலர் திருவூஞ்சல் · த.பொ. கார்த்திகேசு

எச்சரிக்கை

5✓
அன்பருளம் மேவுகின்ற ஐயாவெச் சரிக்கை
ஆறுபடை வீடுகளில் அமர்ந்தோயெச் சரிக்கை
துன்புசெய்த அவுணர்களைத் தொலைத்தோயெச் சரிக்கை
தொல்பிறவிப் பிணிதீர்க்கும் துய்யாவெச் சரிக்கை
முன்பவ்வைக் கருள்புரிந்த மூர்த்தியெச் சரிக்கை
மொழிவள்ளி மகிழ்கணவ முருகாவெச் சரிக்கை
இன்புதர வேலேந்தும் எழிலோயெச் சரிக்கை
இனியசெல்வச் சந்நிதியின் இறைவாவெச் சரிக்கை