பலதிசைகளில் உள அடியவர் காடுமலை யூடுருவு
ஆறுகள் கடந்து அடர்சோலையிடை தோன்றுசிறு
பாதை விரைவாய் நடந்து செல்லும் போதெவரும்
ஆசையொடு கூறுதுதிப் பாடலொடு அரோகரா
ஓசை முழங்க மிருகங்க ளெங்கும் ஒதுங்க வெகு
ஆவலொடுன திரு பாதமே சதமென மேவிடு நினைவோடு
விரைந்தணைந் தரு கிரைந்து பெருமெழில்
சிறந்த மாணிக்க கங்கைத் தீர்த்தமாடி சிவ தோத்திரம் பாடி
சிவ சிவ சரவண பவ குருவேயென சிரசில்
கைகுவித் தழுது தொழுது தரை புரளப் பலமுறை
தெரிசித் தருகுற்றிடு நற்கதிபற் றிடுபொரு மற்புதமுறு கதிர்காமக்
கவினுறு வானுயர் கதிரைச் சிகரத் தொளிர்தரு கூர்வடி வேல்வேல் வேலென
விழிகணீர் சொரிதர வெகு விரைவொடு
வழிபட்டிடு மடியர்க் கருள் புரிதத்துவ உனைநித்தமும்-மற