முருகன் App
சூரசங்காரம் முதலிய பக்திக் கீர்த்தனைகள்
த. செல்லையா
நல்லூர்க் கந்தன்பேரில் கீர்த்தனை5 / 7
சூரசங்காரம் முதலிய பக்திக் கீர்த்தனைகள் · த. செல்லையா

நல்லூர்க் கந்தன்பேரில் கீர்த்தனை

@todo add raagam, thalam
பல்லவி✓
கந்தா குகா சுகந்தா
கருணை பொழி பன்னிரு திருவிழிதிகழ் —கந்தா
அனுபல்லவி✓
வந்தாதரி அரன் மைந்தா தினசரி
வளந் திகழ்ந் தெழில் திருவொடுயர்கலை
நலந் திகழ்ந் தெழில் பொருந்திடு நல்லூர் —கந்தா
சரணம்✓
சந்ததம் வானவர் ஆனவர் வழிபட
சரணடை அடியர்தம் பலகுறை முறையிட
அந்தமில்லாப் பெருமானந்தம் மேலிட
ஆவல் கொள் நாவலர் பாவலர் ஓலிட
அவரவர்க்குறு வரமருள் சரவண
பவகுலக் குறமகள் புணர் பூரண —கந்தா