முருகன் App
சூரசங்காரம் முதலிய பக்திக் கீர்த்தனைகள்
த. செல்லையா
மாவைக் கந்தன்பேரில் கீர்த்தனை6 / 7
சூரசங்காரம் முதலிய பக்திக் கீர்த்தனைகள் · த. செல்லையா

மாவைக் கந்தன்பேரில் கீர்த்தனை

@todo add raagam thallam
பல்லவி✓
முருகா எனத்தின முருகாதவர்க்குமுன்
பெருவாழ் வருள் வாயே — திருமுருகா —முருகா
அனுபல்லவி✓
அரனருள் அறு பொறியென விழிவரு
சரவண பவசிவ சுதனென ஒளிர்திரு —முருகா
சரணம்✓
ஒருகண மேனுமுன் கருணை நினைந்து
உறுதியோடுன் திருவருளை வியந்து
திருவடி தொழுபவர்க் கன்பு மிகுந்து
தீரா நோய்கள் பல தீர்ப்பாயுகந்து
செல்வி மாருத வல்லிக்கருள்புரி தேவனே
திரு மாலையம்பதி
எல்லையில் அருள் வெள்ளமே நீகதி
என அலைபவர்க்குறு துணைபுரி குணநிதி—முருகா