முருகன் App
தணிகை வெண்பா
கந்தப்ப ஐயர்
ஆறு-அக்கரம்4 / 7
தணிகை வெண்பா · கந்தப்ப ஐயர்

ஆறு-அக்கரம்

56✓
செங்கழுநீர் ஓடையினும் செந்தா மரையிடத்தும்
சங்கமலை வீசும் தணிகையே - பங்கயன்சீர்
மாறக் கரத்தால் மணிமுடிமேல் சூட்டினான்
ஆறுஅக் கரத்தான் அகம்.
57✓
கண்ணமையும் கண்அமையும் கானவர்நீ ளும்தோளும்
தண்ணுமைமே லாகும் தணிகையே - பெண்குறத்தி
தாளில்நல்அம் காட்டில்நான் தாகம்உற்றேன் என்றுஇறைஞ்சி
வேளின்நலம் காட்டினான் வெற்பு.
58✓
ஓங்குறுவான் எல்லைக்கும் ஒண்தவர்வீட் டுஎல்லைக்கும்
தாங்கறிவே யொன்றும் தணிகையே - ஏங்கிஅழும்
வானவர்கோ பத்தினியார் வாடுதுயர் நீக்குதற்குத்
தானவர்கோ பத்துஇனியார் சார்பு.
59✓
பூஉதிர்வெங் கானகத்தும் புக்கமட வார்அகத்தும்
தாவுமறி வாழும் தணிகையே - தேவிஉமை
கிண்ணப்பால் ஆர்வாயான் கேடுஅறுபூ நீர்தீகால்
விண்அப்பால் ஆர்வாயான் வெற்பு.
60✓
மிக்கமட வார்முலைக்கும் வேய்த்தலைத்தேன் கூட்டினுக்கும்
சக்கரவா கம்தாழ் தணிகையே - துக்கம்உறும்
இம்மைஇலான் அம்மைஇலான் ஏனோர்க்குஆம் உம்மைஇலான்
வெம்அயிலான் அம்(மை)மயிலான் வெற்பு.
61✓
கெண்டைவிழி யார்அடியும் கேதனத்தின் நீள்முடியும்
தண்டை அணிந்துஓங்கும் தணிகையே - தொண்டர்உன்னும்
ஆறுஆதா ரத்தினார் அவ்ஒளிஆ னார்குறத்தி
தேறுஆதா ரத்தினார் சேர்வு.
62✓
ஓவில்அகம் கண்டவர்க்கும் ஊங்குபுறம் கண்டவர்க்கும்
தாவிலண்டர் போற்றும் தணிகையே - மேவியதோள்
வாகுவலை யம்சூழ்ந்தார் மாங்கனிக்காய் ஓர்இமைப்பின்
மாகுவலை யம்சூழ்ந்தார் வைப்பு.
63✓
முந்திரிகைச் சாரல்களும் மொய்குழலார் மூரல்களும்
சந்திரிகை ஆகும் தணிகையே - கந்தர்
அலங்கார பூதியினார் அன்புடையார் பாவம்
விலங்குஆர பூதியினார் வெற்பு.
64✓
சிந்தா மணிக்கொடியும் சேவிக்கும் வந்திகளும்
சந்தானம் எய்தும் தணிகையே - நந்தாத
கானத் துஇருக்குளவன் காலில் தளைபூட்டும்
ஞானத் திருக்குளவன் நாடு.
65✓
பூமருவும் சாரலினும் பொய்கையிடத் தும்கொடிய
தாமரைகள் தாவும் தணிகையே - காமருவும்
அம்தவள வாரணத்தான் ஆகண் டலன்வாழ்வு
தந்தவள வாரணத்தான் சார்பு.
66✓
மைக்கணமும் சுந்தரமும் வானமதி யங்குலவும்
தக்கவரை மேவும் தணிகையே - கொக்கை
இரண்டாகத் தாக்கியமன் ஏங்கஉயிர் மீட்டும்
திரண்டுஆகத் துஆக்கியமன் சேர்வு.
67✓
விற்பரவு ஞானியரும் மென்கோட்டுத் திண்கனியும்
தற்பரத்தை நண்ணும் தணிகையே - பொற்பணிலச்
செங்கைஇடை யன்துதித்தான் தேவர்சிறை யும்தொலையக்
கங்கையிடை அன்றுஉதித்தான் காப்பு.
68✓
சிங்கார மங்கையரும் தேனருவிக் கானாறும்
தங்கா தலையார் தணிகையே - இங்குஆர்
மனத்தின்ஒளித் துப்புஉணர்வார் மால்அறுத்தார் மாதை
வனத்தின்ஒளித் துப்புணர்ந்தார் வைப்பு.
69✓
மாந்தர் மனங்களினும் மாதர்குடை வாவியினும்
சாந்தம் குலாவும் தணிகையே - பாந்தள்அணி
எட்டுஅம் புயத்தான் இளஞ்சேய்கை கால்முகம்கண்
மட்டுஅம் புயத்தான் வரை.
70✓
பொற்குறமின் னார்முகம்நேர் போம்கதிரும் வாள்அரவும்
தற்பணம்நேர் காட்டும் தணிகையே - சொல்பொறிகள்
ஐந்துஓகை மால்தான் அசித்தாரை ஆட்கொள்வான்
பைந்தோகை மாறான் பதி.
71✓
மேதகுவில் வேட்டுவரும் மேன்மைபெறும் சோதிடரும்
சாதகத்தைத் தேடும் தணிகையே - பாதத்து
அடுக்குஆர்த்தி கைஆயார் ஐயறிவிற் குஎட்டார்
உடுக்கார்த்தி கைஆயார் ஊர்.
72✓
வேரல்அரி ஆர்குவட்டும் வெங்கயத்தின் மத்தகத்தும்
சாரலரி வாவும் தணிகையே - பாரில்எழில்
நன்குறிஞ்சிக் கோவிலான் நாரதரை வீணைஎழும்
பண்குறிஞ்சிக் குழவிலான் பற்று.
73✓
விம்முமுலைப் பேதையரும் வில்வாங்கு மன்மதனும்
தம்மணக்கோ லம்செய் தணிகையே - செம்மலர்சேர்
ஆறு முகமுடியார் ஆறிரண்டு தோள்உடையார்
கூறும் உகம்முடியார் குன்று.
74✓
மாதவம்செய் வோர்மனமும் மாலைதொடுப் போர்கரமும்
சாதிகுல மாயும் தணிகையே - யாதும்
மலையா துஅலையுடைஆர் வையகத்தில் கோவில்
மலைஆ தலையுடையார் வாழ்வு.
75✓
கந்தருவர் யாழ்இசையும் கல்அருவித் தாழ்வரையும்
சந்தம் பலவாம் தணிகையே - வெந்து
நடுக்குறத்தி காந்தம்நய னம்திறந்தோன் மைந்தன்
படுக்குறத்தி காந்தன் பதி.
76✓
தூதுஇறைவர் பால்விடுத்த தோகையரும் பூஞ்சுனையும்
தாதிவரப் பார்க்கும் தணிகையே - நாதமொடு
விந்துகலை அற்றுஅடுத்தார் மெய்ச்சொரூபம் காணஉயிர்
நைந்துகலை யல்தடுத்தார் நாடு.
77✓
நண்ஈர நெஞ்சினர்வாய் நன்மொழியும் சோலைகளும்
தண்ணீர்மை குன்றாத் தணிகையே - விண்ணோர்
புணர்வுஅரும்சோ தித்தறியார் பூரணர்சேய் ஆனார்
உணர்வரும்சோ தித்துஅறியார் ஊர்.
78✓
ஏர்பெறுவல் லிக்கொடிக்கும் ஏற்றஅறம் செய்குநர்க்கும்
சார்புகழை ஈயும் தணிகையே - பாரில்
அனந்தம் குவட்டுடையார் அன்றுஅரக்கர் போரில்
வனம்தங் குவட்டுடையார் வாழ்வு.
79✓
வீரமற வோர்உரமும் மெய்த்தவரும் வந்துமுனம்
சாருமெய் முட்டாக்கும் தணிகையே - ஆரணனார்
நீலமணி கோலத்தார் நேடுஅழலா னார்அருளும்
நீலம்அணி கோலத்தார் நேர்பு.
80✓
காஇலங்கு தென்றலும்நீங் காமகம்செய் பூசுரரும்
தாவிலங்க மோதும் தணிகையே - தேஇலங்கு
வானத்துஅ ரம்பைமக வான்நத்தன் ஏத்தமகிழ்
வான்அத்தர் அம்மைமக வாழ்வு.
81✓
சேறுபட்ட தண்பனையும் செவ்வாழை யின்கனியும்
தாறுபட்டுஏர் துன்னும் தணிகையே - ஆறுபட்ட
கோணத் தன்இத்துவந்தான் கூடான் குறத்திநலம்
காணத் தனித்துவந்தான் காப்பு.
82✓
கோலியசெய் கன்னலொடும் கோல்வளையார் கற்பினொடும்
சாலி சமம்காட்டும் தணிகையே - நாலுமுகன்
கேசவன்அங் கம்பரித்தார் கேண்மைஉப தேசிகனார்
வாசவனங் கம்பரித்தார் வைப்பு.
83✓
வந்தோர்க் குஅருள்குருவும் மாகளிறு மேகலகச்
சந்தேகந் தீர்க்கும் தணிகையே - முந்துஊரும்
அம்சே வலத்தன்நுவல் ஆகமம்எ லாம்உணர்ந்தான்
செஞ்சேவல் அத்தன் சிலம்பு.
84✓
வேடர்பிழி யும்பிழியும் வெள்அருவி நீரும்முனம்
சாடிஉற வாக்கும் தணிகையே - கூடலர்செய்
வெம்போர் உகம்உகதான் வீயாத கொக்கைஅட்டான்
அம்போ ருகமுகத்தான் ஆர்வு.
85✓
வேய்அழல்தாக் கும்குரங்கும் வெம்கரியின் கன்றுகளும்
தாய்முலைப்பா லாரும் தணிகையே - வாய்மைதரும்
புந்திமடுத் துஎன்பாலான் போன்றுஅருள்செய் யும்குமரன்
நந்திமடுத் தென்பாலான் நாடு.
86✓
மையல் மடந்தையரும் மாந்தர்களும் காமர்உடற்
றையலரைச் சேரும் தணிகையே - பொய்அகந்தை
ஆம்கா தரத்தார் அறியாவே தாந்தத்தில்
தேங்குஆ தரத்தார் சிலம்பு.
87✓
கேகயமும் அந்தணர்தம் கேள்வியும்பல் மாமறைபூஞ்
சாகைஉற வாடும் தணிகையே - நாகுஅலைவாய்
ஐயன்முனம் கைபுனைந்துஆ னாதுமுரு கானும்ஒர்
தையல்முனம் கைபுனைந்தான் சார்பு.
88✓
பூவையரும் தென்றல்தவழ் பூங்காவும் செஞ்செவியைத்
தாவுகுழை பூட்டும் தணிகையே — மேவலர்மேல்
ஐஅம்புஎய் துஏர்என்புஆர் ஆக்கைஅழித் தார்எனக்குஇவ்
வையம்பேய்த் தேர்என்பார் வைப்பு.