தணிகை வெண்பா
கந்தப்ப ஐயர்
முப்பொருள் - சிலேடை5 / 7
தணிகை வெண்பா · கந்தப்ப ஐயர்
முப்பொருள் - சிலேடை
89✓
கோபுரம்சேர் கோபுரமும் கோடரம்சேர் கோடரமும்
தாபரமும் மஞ்சுஆர் தணிகையே — நீபம்அணி
வேலா யுதத்துவசன் மெய்யடியா ருக்குஅருளும்
காலாயு தத்துவசன் காப்பு.
90✓
ஏழு சுனையும் எயிலும் இரும்பொழிலும்
தாழு மரவங்கு.ர் தணிகையே — வாழுமனை
காட்டும்மறி வென்றுவிண்டான் காதல்மரு கன்வீட்டில்
நாட்டும்அறி வுஎன்று விண்டான் நாடு.
91✓
தேக்கும்மலர் ஓடைகளும் சீயம்எதிர் பாய்கரியும்
தாக்கணங்கை மன்னும் தணிகையே — வீக்குசடை
ஆறு முடிக்கும்அரன் ஆதரவி னால்அளித்த
ஆறு முடிக்குமரன் ஆர்வு.
92✓
பண்அடைவில் பாடுநரும் பைந்தருவும் அந்தணரும்
தண்ணடையை ஓவாத் தணிகையே — மண்ணிடம்சேர்
மாலான ஏலான் மலர்த்தா மரைக்கரத்தின்
மேலான வேலான் விழைவு.
93✓
மெத்துசுனை ஓர்ஏழும் வேட்டுவரும் பாய்அரிமாச்
சத்தமும்நம் பாயும் தணிகையே — மொய்த்தகர
பங்கயக்கன் றுகிளைஆர் பண்மொழியாள் பாகன்அருள்
வெம்கயக்கன் றுக்குஇளையார் வெற்பு.
94✓
வாரம்உறும் ஜவனமும் மைவேடர் கைவில்லும்
சாரலும்சங் கேசூழ் தணிகையே — ஆருயிர்நோய்
துய்யவா நைத்துஅலைவன் சோகம்உறா துஆள்குமரன்
தெய்வயா னைத்தலைவன் சேர்வு.
95✓
வானவர்சூழ் ஆலயமும் மங்கையர்கை யும்கரியின்
தானமும்வண் டார்க்கும் தணிகையே — ஈனம்உறும்
நானா பதிதன்ஒரு நன்குஇல் எனைப்புரந்த
சேனா பதிதன் சிலம்பு.
96✓
தண்டலையும் பங்கயமும் தன்நிழலைப் பாய்கரிபோம்
தண்டமும் கோடுஏந்தும் தணிகையே — தொண்டருக்கு
நாக்குஇரவும் சங்கடம்தான் நண்ணும்மிடி யும்கெடுத்தான்
மாக்கிரவுஞ் சம்கடந்தான் வைப்பு.
97✓
யாகநிலத் தும்தேற் றிறாலிடத்தும் மேகத்தும்
சாகம் நிலையாகும் தணிகையே — மோகம்அறும்
சாத்துவிதத் தான்அகிலன் தண்காந்தள் வெட்சிமராச்
சாத்துவிதத் தான்அகிலன் சார்பு.
98✓
வீறுமணி வீதிகளும் மென்கரும்பும் பைங்கமுகும்
சாறுமிகுந் துஓங்கும் தணிகையே — ஏறிஇழி
சாரலைவாய் யாளிதிரி தண்மலைவாய் எங்கும்நின்றான்
சீர்அலைவாய் ஆளி சிலம்பு.