தணிகை வெண்பா
கந்தப்ப ஐயர்
சிலேடை வெண்பா3 / 7
தணிகை வெண்பா · கந்தப்ப ஐயர்
சிலேடை வெண்பா
38குமரகோட்டம்✓
சிவன் திருவுரு சிலேடை (முற்பாதி சிலேடை)
பொங்குஅரவம் கந்தரம்கார் புல்லுமைபஞ் சானனத்தால்
சங்கரனை ஒப்பாம் தணிகையே — தங்கும்
அமரகோட் டத்தானத் துஅம்பொன் முடிசேர்
குமரகோட் டத்தான் குடி.
39கச்சிமாவடி திருமால் திருமேனி (முற்பாதி சிலேடை)✓
பூங்கமல உந்திமணி பொன்திகிரி கோடுவனம்
தாங்குதலால் மால்ஆம் தணிகையே — ஓங்குதண்டைச்
சேவடியான் நான்இமலம் சேரா துஅருள்கச்சி
மாவடிஆ னான்நிமலன் வைப்பு.
40வள்ளிமலை பிரமனுக்குச் சிலேடை✓
நால்வாய்கா யத்திரிமான் நண்ணமரை மேவுபெருஞ்
சால்பால் விதிஆம் தணிகையே — நூல்வாய்ந்த
வெள்ளிமலை வேங்கைஆன் வீடுஉடைஊர் திச்சிவன்சேய்
வள்ளிமலை வேங்கையான் வாழ்வு.
41கதிர்காமம்-அரசனுக்குச் சிலேடை✓
மந்திரிகூ டத்தலைமை மன்னி மலைஅரசாய்
தந்திரிகூ டம்சேர் தணிகையே — சிந்துமுரசு
எண்திக்கு அதிர்காமன் எண்ணுமுறை மைத்துனன்ஆம்
கண்டிக் கதிர்காமன் காப்பு.
42திருச்செங்கோடை✓
கொங்குஆர் மலர்ச்சுனையும் கோவேடர் கைச்சிலையும்
சங்காரம் செய்யும் தணிகையே — தெங்குஆரும்
செங்கோடைக் கண்யான் சேவிப்ப வீற்றிருக்கும்
செங்கோடைக் கண்ணியான் சேர்வு.
43பரங்குன்றும் அலைவாயும் கூடிய திருகு✓
கோங்குதலை வாய்மலரும் கோதையர்கள் வாய்மலரும்
தாங்குதலை மாறாத் தணிகையே — ஓங்கும்
பரங்குன் றுஅலைவாயான் பாலன்அல்லார் தேக
பரம்குன் றலைவாயான் பற்று.
44ஆவினன்குடி✓
காமமயல் உற்றவரும் காசுஅகலும் பூசுரரும்
சாமமறை கூறும் தணிகையே — தேமருவும்
செய்ஆவி நன்குடிஆன் செல்வம்மணி மாடமும்சேர்
மெய்ஆவி னன்குடியான் வெற்பு.
45ஏரகம் இடைக்கழி கூடிய திருகு✓
கார்அங்க வேடர் கரத்தினும்மீ வானத்தும்
சாரங்கம் தாவும் தணிகையே — சீர்தங்கும்
ஏரகம்இ டைக்கழியான் என்றும்இரு தாள்வணங்கு
வார்அகமி டைக்கழியான் வைப்பு.
46குன்றுதோறாடல்✓
சூழும்முழை யும்சவரர் துன்னும்உழை யும்புத்தேள்
தாழும் தவர்சேர் தணிகையே — நீள்கழலை
ஒன்றுதோ றுஆடலினான் உற்றுஅகலான் தொண்டர்உளம்
குன்றுதோ றுஆடலினான் குன்று.
47பழமுதிர்சோலை✓
வித்தியஏ னல்குரலும் வேடமட வார்குரலும்
தத்தைகவர்ந் துஏகும் தணிகையே — பத்தர்தொழும்
சோலைமலை வாய்நிலையார் தொண்டர்உளத் துஅன்புஅகலுங்
காலைமாலை வாய்நிலையார் காப்பு.
48நீலோற்பலத்துக்குத் திரிபு✓
பங்கயக்கண் மால்விண்டும் பைஞ்சாரல் சூழ்விண்டும்
சங்கமுடன் தாழும் தணிகையே — கொங்குஉலவு
கல்லாரம் பூண்உரத்தான் காழ்வயிரம் மாணிக்கக்
கல்ஆரம் பூண்உரத்தான் காப்பு.
சந்தனமும் ஏனல் தனைக்காக்கும் தையலார்
தம்தனமும் வம்புஆர் தணிகையே — முந்தும்
அறுமீன் அருட்குஅளியான் அம்கமலத் தாட்குஅன்பு
அறும்ஈனர் உள்களியான் ஆர்வு.
50கிரவுஞ்சகிரி✓
ஊனத்தை நீக்குநரும் ஊசல்மட வாரும்அன
தானத்தை ஏயும் தணிகையே — வானத்து
இரும்கற் பகமாய்த்தான் ஈவான்கை வேலால்
பெரும்கல் பகமாய்த்தான் பெட்பு.
பஞ்சவனத் தையலரும் பஞ்சவனத் துஜஅலரும்
தஞ்சவனம் சாரும் தணிகையே — அஞ்சலிசெய்
தாரதுஇன் னாஇரித்தான் சாற்றஅரும்வே தாந்தம்எலாம்
தாசரதி நாவிரித்தான் சார்பு.
52விசாக நட்சத்திரம்✓
ஏமம் சரிகளினும் எல்ஆர்பைங் காவினும்போ
தாமஞ் சரியார் தணிகையே — வாம்உழையின்
போய்ஆவி சாகத்தான் பொற்கணைதொட் டான்மருகன்
மாயா விசாகத்தான் வாழ்வு.
53விசாக நட்சத்திரம்✓
செந்தினைகள் வித்துநரும் தேவியரோ டுஊடுநரும்
சந்தினைமுன் போக்கும் தணிகையே — தந்துநலம்
வண்டோ தரிக்குஉவந்தான் மைந்தன்முனம் தானவர்செய்
வண்டுஓ துஅரிக்குவந்தான் வாழ்வு.
54காட்டிய கோலம் சிவந்தார்✓
கார்அணிசெய் கொன்றைகளும் கண்டு தொழு வோர்களும்பூத்
தாரணியை ஆளும் தணிகையே — சூரனும்முன்
பூட்டியகோல் அஞ்சிவந்தார் பொன்றாமல் காத்துஅவர்க்குக்
காட்டியகோ லம்சிவந்தார் காப்பு.
55மீதான யோகம்✓
பாமறையோர் அம்மனையும் பாவையர்கை அம்மனையும்
தாமகமே நண்ணும் தணிகையே — தூமதியின்
மீதான யோகத்தார் மெய்யறிவில் காணும்மயில்
மீதான யோகத்தார் வெற்பு.