முருகன் App
தணிகை வெண்பா
கந்தப்ப ஐயர்
நாற்பொருள் - சிலேடை6 / 7
தணிகை வெண்பா · கந்தப்ப ஐயர்

நாற்பொருள் - சிலேடை

99✓
பங்கயமும் ஏரிகளும் பாவையர்கை யும்பணியும்
தங்கவளை சூழும் தணிகையே — திங்கள்நுதல்
செந்திலகத் தன்புனிதன் செல்வன் கடற்கரைசேர்
செந்தில்அகத் தன்புனிதன் சேர்வு.
100✓
ஆலயமும் கல்சுனையும் அம்புயமும் தாழ்வரையும்
சாலவன மல்கும் தணிகையே — காலின்அலர்
கொய்துஇடஅங் குதருவான் கும்பிடவே தன்படைப்பும்
செய்திடஅங் குத்தருவான் சேர்வு.
101✓
சோலைகளும் பூந்தடமும் தோகையரும் தூயஅறச்
சாலையும்பொன் நீங்காத் தணிகையே — வேலைஎழு
நச்சுஇதாம் நம்தம் நலிபவம்தீர்த் துஆள்முருகன்
சச்சிதா னந்தன் தலம்.