முருகன் App
திருமுறைகளில் முருகப்பெருமான்
சுந்தரர் (ஏழாந் திருமுறை)3 / 8
திருமுறைகளில் முருகப்பெருமான்

சுந்தரர் (ஏழாந் திருமுறை)

25✓
குறவனார் தம்மகள் தம்மகனார்
மணவாட்டி கொல்லை
மறவனாராய் அங்கோர் பன்றிப்பின்
போவது மாயங்கண்டீர்
இறைவனார் ஆதியார் சோதிய
ராயங்கோர் சோர்வுபடா
அறவனார் ஆவதறிந் தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.
26✓
பொன்னானை மயிலூர்நி முருகவேள் தாதை
பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல்
தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற்
சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி
அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமான்
உரியானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.
27✓
ஓட்டியாட் கொண்டுபோய் ஒளித்திட்ட
உச்சிப் போதனை நச்சரவார்த்த
பட்டியைப் பகலை யிருள்தன்னைப்
பாவிப்பார் மனத்துறு மத்தேனைக்
கட்டியைக் கரும்பின் தெளிதன்னைக்
காதலாற் கடற்சூர் தடிந்திட்ட
செட்டியப்பனைப் பட்டணச் செல்வ
ஆரூரானை மறக்கலு மாமே.
28✓
திங்கள்தங்கு சடைக்கண் மேலோர்
திரைகள் வந்து புரளவீசும்
கங்கை யாளேல் வாய்திறவாள்
கணபதியேல் வயிறு தாரி
அங்கைவேலோன் குமரன் பிள்ளை
தேவியார் கொற்றட்டி யாளார்
உங்களுக்காட் செய்ய மாட்டோம்
ஒணகாந்தன் தளியுளீரே.
29✓
திங்கள் நம்பி முடிமேல் அடியார்பாற்
சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கெல்லாம்
அங்கண் நம்பி யருள்மால் விசும்பாளும்
அமரர் நம்பி குமரன் முதல்தேவர்
தங்கள் நம்பி தவத்துக் கொருநம்பி
தாதை என்றுன சரண் பணிந்தேத்தும்
எங்கள் நம்பி யென்னை ஆளுடைநம்பி
எழுபிறப்பும் எங்கள் நம்பிகண்டாயே.