முருகன் App
திருமுறைகளில் முருகப்பெருமான்
திருநாவுக்கரசர் (4,5,6ஆம் திருமுறைகள்)2 / 8
திருமுறைகளில் முருகப்பெருமான்

திருநாவுக்கரசர் (4,5,6ஆம் திருமுறைகள்)

9✓
ஆறுகொ லாமவ ரங்கம் படைத்தன
ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம்
ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால்
ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே.
10✓
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்கடன் பணிசெய்து கிடப்பதே.
11✓
சமர சூரபன் மாவைத் தடிந்தவேல்
குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய
அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள்
அமர லோகம தாளுடை யார்களே.
12✓
குறவிதோள் மணந்த செல்வக்
குமரவேள் தாதை யென்றும்
நறவிள நறுமென் கூந்தல்
நங்கையோர் பாகத் தானைப்
பிறவியை மாற்று வானைப்
பெருவேளூர் பேணி னானை
உறவினால் வல்ல னாகி
உணருமா றுணர்த்து வேனே.
13✓
நார ணன்னொடு நான்முகன் இந்திரன்
வார ணன்கும ரன்வணங் குங்கழற்
பூர ணன்திருப் பூவனூர் மேவிய
கார ணன்னை ஆளுடைக் காளையே.
14✓
முன்னை யார்மயில் ஊர்தி முருகவேள்
தன்னை யாரெனில் தான்ஓர் தலைமகன்
என்னை யாளும் இறையவன் எம்பிரான்
பின்னை யாரவர் பேரெயி லாளரே.
15✓
செல்வியைப் பாகங் கொண்டார்.
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு
மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத
காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார்
இலங்குமேற் றளிய னாரே.
16✓
உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக
மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயா லெரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.
17✓
ஆரட்ட தேனும் இரந்துண் டகமக வன்றிரிந்து
வேரட்ட நிற்பித் திடுகின்ற தால்விரி நீர்ப்பரவைச்
சூரட்ட வேலவன் தாதையைச் சூழ்வய லாரதிகை
வீரட்டத் தானை விரும்பா வரும்பாவ வேதனையே.
18✓
படைமலிந்த மழுவாளும் மானுந் தோன்றும்
பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்
நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்
நான்மறையி னொலிதோன்றும் நயனந் தோன்றும்
உடைமலிந்த கோவணமுங் கீளுந் தோன்றும்
மூரல்வெண் சிரமாலை யுலாவித் தோன்றும்
புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
19✓
கோழிக் கொடியோன் தன்தாதை போலும்
கொம்பனாள் பாகம் குளிர்ந்தார் போலும்
ஊழி முதல்வரும் தாமே போலும்
உள்ளுவார் உள்ளத்தின் உள்ளார் போலும்
ஆழித் தேர்வித் தகரும்தாமே போலும்
அடைந்தவர் கட்கன்ப ராய்நின்றார் போலும்
ஏழு பிறவிக்கும் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.
20✓
கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக்
குமரனும் விக்கின விநாய கன்னும்
பூவாய பீடத்து மேல யன்னும்
பூமி யளந்தானும் போற்றி சைப்பப்
பாவாய இன்னிசைகள் பாடி ஆடிப்
பாரிடமுந் தாமும் பரந்து பற்றிப்
பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப்
புறம்பயம்நம் ஊரென்று போயி னாரே.
21✓
கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய்
காலனையுங் காலாற் கடிந்தான் கண்டாய்
புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய்
புலியூரிசேர் ஆடைப் புனிதன் கண்டாய்
வெள்ளிமிளிர் பிறைமுடிமேற் சூடி கண்டாய்
வெண்ணீற்றான் கண்டாய் நஞ்செந்தின் மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.
22✓
முக்கணா போற்றி முதல்வா போற்றி
முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி
தத்துவனே போற்றிஎன் தாதாய் போற்றி
தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்
துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி
எறிகெடில வீரட்டத் தீசா போற்றி.
23✓
அரவணையான் சிந்தித் தரற்றும் அடி
அருமறையான் சென்னிக் கணியாம் அடி
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி
சார்ந்தார்கட் கெல்லாம் சரணாம் அடி
பரவுவார் பாவம் பறைக்கும் அடி
பதினெண் கணங்களும் பாடும் அடி
திரைவிரவு தென்கெடில நாடன் அடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன் அடி.
24✓
தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத்
தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச்
சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.