திருச்செந்தூர் நொண்டி நாடகம்
முத்தாலங்குறிச்சி கந்தசாமிப் புலவர்
காப்புப் பருவம்2 / 7
திருச்செந்தூர் நொண்டி நாடகம் · முத்தாலங்குறிச்சி கந்தசாமிப் புலவர்
காப்புப் பருவம்
2விநாயகர்✓
செந்தா மரை மலருறு வனிதையு
வந்தே யுறை திருநக ரலையெறி
செந்தூர் வளர் அறுமுக னதுபுகழே-கொண்டாடவே;
செந்தே றன்ம தலையறு குதலைபு
னைந் தோர் வடை யவல்பொரி யமுதுகொள்
சிந்தூ ரம திருசர ணுறுதுணையே. தந்தானனா.
3முருகன்✓
வாரத் தெழுதிரை யொலியுரு மெனவொலி
ஆரத் திரள்மணல் செறிகரை யிடைபொலி
மானத் திருநகர் வருமுரு கனதிசையே-கொண்டாடவே;
சூரற் கிளையரு மவர்துணை யெனவரு
தலைவரு மழியவ யிலைவிடு
தோகைக் கடவுள ரிணையடி பரவுதுமே. தந்தானனா.
4இறைவன்✓
அடலி னிசிசர ருடல மதுபொடி
படவு மயின்மிசை நடன மிடுபவர்
ஆல முண்ட நீல கண்டர்
பால னண்டர் பீழை துண்ட
அயில்வி டுத்தம யூரன்க தலிகை
குருகு வைத்தகு ழகன ரும்புகழே-கொண்டாடவே;
புடவி யிடைபல சடல மதுபல
தடவை பிறவியி லிடைத லுறுமுயிர்
போத லெங்ஙன் மீள லெங்ஙன்
வாழ்த லென்ற கேள்வி யுந்து
புதைய மைத்துவங் கூழனல் நீர்தரை
வெளிய மைத்தவொ ருவனை விள்ளுவாம். தந்தானனா.
5சந்தி விநாயகர்✓
செங்கமல வாவி கொங்குசெறி சோலை
பைங்கழனி யேநெ ருங்குவள மேய
செந்தினகர் வாழ்வு கந்தன்மிசை நொண்டியே. கொண்டாடவே,
சங்கரிம ணாளன் நந்துவர பாலன்
வெங்கயமு காதர்பங்கமுற வேசெய்
சந்தியின்வி நாயகன் றுணையு முண்டுமே. தந்தானனா.
6மும்மூர்த்திகள், அவர் மனைவியர், ஐயனார்✓
மாவி ளாவொடு தென்னைப லாபனை
பூவை சேகிலி புன்னைய சோகரி
வான நீவிடு சீரலை வாய்புகழே -கொண்டாடவே;
பூவில் வாழ்பிர மன்திரு மாலரன்
வேத நாயகி பின்னைம னோன்மணி
பூர ணனதவன் பொன்னடி கூறுதுமே.தந்தானனா.
7✓
@todo: add 3 missing lines
செந்த மிழ்மறை தந்த ஞானிசம்
பந்தர் சுந்தரர் செஞ்சொல் வாகீசர்
செங்க ழல்தலை கொண்டு பாடுதுமே. தந்தானனா.
8✓
செல்லு திகழுஞ் செழுஞ்சோலைச்
சேணார் நறவப் பிரசம்விண்டு
பல்கிப் பழனத் திடைபாய்ந்து
பசுங்கழ் விளைந்தோங் கலைவாயே-கொண்டாடவே;
கல்லு கனியக் கவிபாடிக்
கானார் நரிகள் பரியர்கச்
செல்ல வருளுஞ் செம்மலடிச்
சேவை தினைத்தோ னடிதுணையே.தந்தானனா.
9வேல், சூரியன், சந்திரன், மயில், சேவல், நவவீரர், வீரபத்திரன்✓
முகிலூரு கிரியூடு புளிரூழுமல் பனைவாகை
முதுகீச கங்கே தகை
அகில்தாழை கணிசாதி புனைவாழை பிழிதூவும்
அலைவாய்வி ரிந்தே றுசீர்-கொண்டாடவே;
இகல்மேவி வருசூர னொடுதார கனுமாள
எறிவேல்ப தங்கன் மதி
சிகிகோழி நவவீர ருமைபால னிவர்தாள்கள்
சிரமேல ணிந்தேத் துவாம். தந்தானனா.
10சத்த கன்னியர்✓
புவிமீதி லடிதாழ வானவரும் வந்தே
குமராகு காவெனப் பேறுபெறு செந்திற்
புகழ்மேவு நொண்டிதரை மீதுகூத் தாகவே- கொண்டாடவே;
அவிராமி யயிராணி காளிவ ராகி
கவுமாரி நாராய ணிமகே கரியென்
னவதார சத்திமன தவதான மரணே. தந்தானனா.
11✓
குழறிக் குழறிக் குமரனைப் பாடெனப்
பழமைத் திருமொழி பயிலயான் பகர்ந்தேன்
ஆசு கூறா தவனி நந்தமிழ்த்
தேசி கன்புகழ் செப்புமிந் நூலே.