திருச்செந்தூர் நொண்டி நாடகம்
முத்தாலங்குறிச்சி கந்தசாமிப் புலவர்
நூல்4 / 7
திருச்செந்தூர் நொண்டி நாடகம் · முத்தாலங்குறிச்சி கந்தசாமிப் புலவர்
நூல்
27விருத்தம்✓
தென்மலை முனிவன் போற்றுந்
தேவனைச் சகத்திற் கோடி
மன்மத வுருவங் கொண்ட
வடிவனை முடிவி லானைத்
தன்மவா ரிதியைச் செந்தூர்
தழைத்தசண் முகனை நீலப்
பொன்மயூ ரனைக்கொண் டாடிப்
புகன்றிடு நொண்டி நானே.
28சிந்து✓
சேண்தொடு மாமலையும்-நதிகளுஞ்
செறிந்துபல் வளங்களும் நிறைந்துமிகு
மாண்புறு நன்னாடாம்-வண்டுறை
வாவிதழ் நாவலந் தீவுதனில்
29✓
நாவலர் பாவலரும்-தேவரும்
நத்தியே வந்துறை வித்தகஞ்சேர்
மாவளம் வயல்வளமும்-பொருந்தியே
மழைவளந் தவறாத மண்டலமதில்
30✓
மழைக்கார் நிறத்தழகர்-செங்கண்
மாயவர் வேங்கட நாயகனார்
தழைக்குந் திருப்பதிக்குள்-கள்ளர்
சாதிக்கு ளேபிரக் யாதிக்குள்நான்
31✓
ஆதிக்க மேன்மைபெற்றேன்-நாட்டில்
அம்பல காரர்தொ ழும்பெருமான்
கீதத் தமிழாளன்-துரைக்
கெப்புலி பெற்றம தப்புலிநான்
32✓
புலிபாய்ச்சல் பாய்வதுபோல்-சூதும்
பொய்யுங் களவும் புரட்டுருட்டுங்
கலிகாலக் கற்பனையால்-எல்லாங்
கற்றறிந் தேன்பேரும் பெற்றிருந்தேன்
33✓
அறிந்தேனென் வல்லமைக்கு-வானில்
அம்புலி மானும பூர்வமல்ல
செறிந்ததி ருடருக்குளே-என்போல்
தீர்க்கமு மார்க்கமு மார்க்குமுண்டோ
34✓
உண்டான ஆத்தியெல்லாம்-வீட்டில்
உடைமை கடமைகளு முடனெடுத்துக்
கொண்டாடிக் கொண்டெழுந்தேன்-பாதை
கூடித்தென் பூமியை நாடிச்சென்றேன்
35✓
சென்றேன் தலங்களெல்லாம்-பின்னர்ச்
சிதம்பரத் தையர் பதம்பெறநான்
நின்றேன் புலியூரில்-தொண்டர்
நேசிக்குஞ் சந்நிதி வாசல்வந்தேன்
36✓
தேன்போலு மொழிபாகர்-ஆடகச்
செம்பொன்னி னாற்செய்த வம்பலத்தில்
தான்போய்ப் பொற்கணைநீ-ராடியிரு
சைவக்கு ழாத்துடன் கைகுவித்தேன்.
37✓
குவித்தேன் மனங்களித்தேன்-தில்லைக்
கோவிந்த ராயன்ப தாம்புயத்தைச்
செவித்தேன் வெளியில்வந்தேன்-தெற்குத்
தேரடி மண்டபத் தோர்புறத்தே
38✓
புறத்தே யிருக்கையிலே-அந்தப்
பொன்னம்ப லத்தையர் சந்நிதிக்கே
சிறப்பான தேவடியாள்-முத்து
செண்பக ரத்தினஞ் சிவகாமி
39✓
சிவஞானம் வள்ளிமுத்தாள்-குப்பி
தில்லைசி தம்பரம் நல்லமுத்தாள்
அவிராமி வேதரத்னம்-தெய்வ
யானைச வுந்தரி யாதிரத்னம்.
40✓
ஆதிக னகரத்தினம்-அபி
சேகரத் தினம்புட்ப ராகரத்தினங்
காதிற்செந் தேனொழுகுங்-கீதங்
கற்றசி தம்பர ரத்னத்துடன்.
41✓
உடந்தைப்பொன் மான்கிளைபோற்-கூடி
ஒக்கச்சென் றார்நானும் பக்கத்திலே
தொடர்ந்தேனென் னாசையினாற்-சுற்றிச்
சுற்றிச்சி தம்பர ரத்னத்தையே.
42✓
பரமென்று சென்றடுத்தேன்-என்னைப்
பார்த்துக்கை கோர்த்துப்பி டித்துக்கொண்டாள்
திரமென்று நம்பிக்கொண்டேன்-வீட்டிற்
செல்லுமுன் பூர்வீகஞ் சொல்லுமென்றாள்
43✓
சொன்னேனென் செய்தியெல்லாம்-உள்ள
தொந்தம்வி டாதினிச் சந்தேகமென்
முன்னே நடவுமென்றாள்-ஆசை
மூட்டித்தன் வீட்டினிற் கூட்டிச்சென்றாள்.
44✓
சென்றேன் மனைபுகுந்தேன்-செய்தி
சீக்கிர மாய்ச்சென்று தாய்க்குச்சொன்னாள்
இன்றாக்கம் வந்துதென்றாள்-நமக்
கேந்திழை யேகப்பல் சேர்ந்ததென்றாள்.
45✓
சேர்ந்தார்க்குத் தங்கமடி-இந்தத்
தேட்டாள னம்முடைய வீட்டாள்போல்
வாய்த்தா னெனப்பகர்ந்து-நல்ல
வாய்ப்பாய்ச்சு தென்றந்தத் தாய்ப்பாவி.
46✓
விருந்திட் டுபசரித்தாள்-என்னை
வெல்லச்சி தம்பர வல்லிகையால்
மருந்திட்ட வாடையுடன்-என்றன்
மனங்குளி ரச்சந் தனம்பூசினாள்.
47✓
பூச்சசவ் வாதுதந்தாள்-நெற்றிப்
பொட்டுமிட் டாள்மிக்க கட்டுமெட்டாய்
வாசக் குழன்முடித்தாள்- என்முன்
வந்துநின் றாள்நல்ல விந்த்ராணிபோல்
48✓
இந்த்ரநீல மேல்வீட்டில்-எனைவாரும்
என்றாள் நானங்கு சென்றதின்பின்
சந்த்ரகாந்திப் பொற்கழிகை-மெத்தை
தட்டிவி ரித்தாள்பொற் கட்டிலின்மேல்.
49✓
மேலாக வென்னைவைத்தாள்-தானும்
வெக்கிநின் றாளொரு பக்கலிலே
சேலைமுன் தானைதொட்டேன்-வந்து
செவ்வேயி ருந்தாளென் கைவழியே.
50✓
கையிற் சுருள்கொடுத்தாள்-பச்சைக
கற்பூரம் பாக்கிற் கலந்துதந்தாள்
உய்யுஞ்சஞ் சீவியைப்போல்-இதழ்
ஊறல்தந் தாளதை மாறியுண்டேன்.
51✓
மாறிச் சுருண்மடித்தாள்-மார்பின்
மத்தக யங்கொடு குத்தவிட்டாள்
மீறிச் சரசஞ்செய்தாள்-கொஞ்சியே
மேற்கொண்டாள் மின்கொடி சேற்கெண்டைபோல்
52✓
கொண்டைச் சொருக்கவிழக்-குக்கு
குக்குவென் றெட்டுக்கு ரன்முழங்கத்
தண்டைப் பதம்வருந்த-மெல்லச்
சாய்ந்தாள் கொடுங்கையி லேந்திக்கொண்டேன்.
53✓
ஏந்தியே முலைநெருடிச்-செவி
யேறுகண் ணாளைவளைத் திதழ்பருகிச்
சேர்ந்தேன் பரவசமாய்-இரு
தேகமொன் றாகிச்சம போகம்வரப்
54✓
போகித்து லீலைதந்தாள்-ஆசை
பூட்டியெ னைக்குரங் காட்டவென்றே
பாகத்திற் கைதேர்ந்த-மருத்துவப்
பண்டிதர் முறைப்படி குண்டிகைதனில்
55✓
குட்டிக்கு நிலப்பனைவேர்-முத்துராயி
கூந்தலுஞ் சித்தர்முடி சிந்தியிலையும்
நெட்டியிலை யெட்டியிரையும்-பேய்ப்பீர்க்கு
நெல்லியிலை வில்லையிலை அல்லியரிசி.
56✓
சித்தா மணக்குநெறிஞ்சி-ஊமத்தை
சிறுகுறிஞ் சியுநல்ல பணமுறிஞ்சி
கத்தாளை நிலம்பரண்டி -ஆலின்கீழ்க்
கன்றுதலை சுருளியு நின்றுசிணுங்கி
57✓
சில்லானிடை கரும்புனை -கருநாய்
செந்நாயின் தலைமண்டை சன்னாசிமூரல்
பல்லிமுட்டை அரணையின்வால்-முயற்சூடல்
பக்குமுள்ளு பச்சோந்தி கொக்குமயிரும்
58✓
மடையான் தவளைப்பித்தும்-ஆந்தையின்
வலக்கண்ணுந் தேரையும் புலிப்பாலும்
விடையான் கோழியெச்சமுங்-கன்னியர்கள்
மீதிலெழு மிந்திரியநல் மாதவிடையும்.
59✓
நரிக்கொம்பு கரடிமயிர்-ஊர்க்குருவி
நாக்குக்க ரிக்குருவி-மூக்குடனே
கரிச்சான் முதுகெலும்புஞ்-செம்போத்துக்
கழுத்துமு சித்தமுட்டை கெழுத்திமுள்ளும்
60✓
முள்ளிவேர் மொசுமொசுக்கை -புற்றின்மேல்
முளைத்தகி ழுகிலுப்பை கழற்சியிலை
கள்ளிப்பால் வெள்ள ருகுவேர்-போத்தாணி
கத்தரிவ முதலையுஞ் சித்ரமூலம்
61✓
மூஞ்சூர் முகட்டெலித்தோல்-தேவாங்கு
மொழிக்கால் நகுமுட னடிக்காலும்
பூஞ்சோலைக் குயிலிறகு-மரவட்டை
புடையான டிவயிறு நெடுமரையும்
62✓
நெறிவிசம் பாசாணம்-கோட்டை
நேர்வாளம் பச்சைநாவி கோரோசனை
முறுக்கிய வலம்புரிக்காய்-திரைகடல்
முறையுடன் சித்தரத்தை யரிதாரம்
63✓
தாவிய துருசுக்கட்டி-வெண்காரஞ்
சடைக்கஞ்சா திப்பிலியுஞ் சாதிபத்திரி
காவிக்கட்டி புழுகுச்சட்டம்-மரைப்பொடி
கத்தூரி கல்லுமதங் கொத்தமல்லியும்.
64✓
…………………………………………
…………………………………………
நீர்முள்ளி சிறுதேக்குக்-காட்டெருமை
நெய்யாகும் பெருந்தேன் துய்யசொரங்கம்.
65✓
சொல்லிய மனோசிலையுங்-கடுக்காய்
சுக்கும திமதுர மொக்கவபினும்
…………………………………………
…………………………………………
66✓
காட்டினில் மூலிகையுஞ்-சமன்வாங்கிச்
கடைச்சரக் கும்விராக னிடைப்படியே
கூட்டியம் மியினடத்தி-இளங்கன்றுக்கு
கோமயந் தெளித்தஞ்சு சாமஞ்செவித்து
67✓
அஞ்சுநா ளூறவைத்து-முலைப்பால்விட்
டரைத்துருண் டைபண்ணிக் கருக்கலிலே
வெஞ்சனங் கறிசோற்றில்-வெத்திலையில்
வெதுப்பிய தீம்பாலி லித்ததுடனே.
68✓
தீட்டியே மருந்தையிட்டாள்-தின்றேன்
சேப்பணத் துட்பட்ட ஈப்போலே
பாட்டவ ணையுமிட்டேன்-வீட்டுப்
பையலைப் போற்செய்தேன் கைக்கருமம்.
69✓
கருமந் தனைக்குறித்தாள்-என்றன்
கையிற்பொற் சாளிகைப் பையுங்கண்டாள்.
ஒருமாத முபசரித்தாள்-என்றன்
உடைமையைச் சூறை யிடநினைந்தாள்
70✓
சூரத்துக் கப்பலிலே -வந்த
சோனகன் கொண்டுவந் தானீதென்று
வீரான பொற்சரிகைப்-பட்டும்
வெள்ளிக்கும் பாவும்பொற் பள்ளயமும்.
71✓
அயல்வீட் டுடைமையெல்லாங்-கொண்டுவந்
தந்நேரந் தன்னிலென் முன்னேவைத்தாள்
இயல்பான காரியமென்றே-விலையும்
இட்டெழு நூறுபொன் கட்டிவிட்டேன்
72✓
கட்டிச் சமைந்துகொண்டென்-பையின்
கனங்குறை யக்கங் கணங்கட்டினாள்
பட்டாடை துன்னிடையாள்-அல்குற்
பைக்காகக் கொட்டினேன் கைக்காசெல்லாம்.
73✓
எல்லா வுளவுங்கண்டாள்-கையில்
இல்லாத தைமுகஞ் சொல்லாதோ
சல்லாப லீலையிலே-அவள்வஞ்
சகம்படித் தாள்பின்க லகந்தொடுத்தாள்.
74✓
தொடுத்தாள் பழங்கிழவி-என்முன்
தொந்தோமென் றாடத் துணிந்துகொண்டாள்
கடுத்தாள் மனங்கறுத்தாள்-நெஞ்சினிற்
கையைக்கொ டுத்துப்பையத் தள்ளிவிட்டாள்.
75✓
விட்டுக் கதவடைத்தாள்-அந்த
வேசைதன் னாசார வாசல்முன்னே
ஒட்டுத்திண் ணைமறைவில்-அந்த
ஊதாரி வெள்ளாட்டி காதலினால்.
76✓
…………………………………………
…………………………………………
…………………………………………
…………………………………………
77✓
நாலும றைபடித்த-தில்லை
நம்பியார் வீட்டைவி ரும்பிக்கொண்டு
காலூன்றி நெட்டிரவிற்-சென்று
கட்டித்தி ரவியப் பெட்டகத்தை
78✓
அகத்திற் புகுந்தெடுத்தேன்-அதைச்சுமந்
தந்தப்பு றம்விட்டு வந்துவிட்டேன்
மகத்திற் சனியனையாள்-வீட்டில்
வந்தவு டன்பெட்ட கந்திறந்தேன்.
79✓
கந்தம லர்க்குழலாள்-பெட்ட
கத்தைக்கண் டாளென்மு கத்தைக்கண்டாள்
முந்திந டந்ததிலும்-ஆசை
மும்மடங் கெண்மடங் காய்நடந்தாள்.
80✓
நடராசர் சந்நிதிக்கென்-போலொரு
நாட்டியச் சிலைவேணும் வீட்டுக்கென்றாள்
உடனே நன் றாச்செனவே-நான்மன
தொப்பிப்ப யணம னுப்பிக்கொண்டேன்.
81✓
அனுப்புஞ் சமயத்திலே-என்மேல்
ஆசைபோ லேமுகமன் பேசினாளே
தனித்தால் மனந்தரியேன்-எங்கே
சஞ்சரிப் பீரென்று பஞ்சரித்தாள்.
82✓
…………………………………………
…………………………………………
…………………………………………
…………………………………………
83✓
…………………………………………
…………………………………………
திருப்பூட்டுங் காந்தனிடஞ் செய்யுஞ்
சீராட்டெல் லாமங்கே பாராட்டினாள்.
84✓
நாட்போக்கில் நான்சகியேன்-என்று
நாரிசொ லக்கிழட் டோரிவந்து
தேட்போலும் வாய்திறந்து-தம்பி
சீக்கிரம் போய்வாரும் பாக்கியமென்றாள்
85✓
பாக்கிய மென்றெழுந்தேன்-தில்லைப்
பண்ணவன் சந்நிதி முன்னேவந்தேன்
யோக்கியத் துடன்தொழுதேன்-தொழு
தோர்மன தாய்வந்தேன் தீபரமாய்ப்
86✓
பரங்குன்றத் தோர்சருகும்-மீனும்
பச்சியு மாகிய முத்துபோல
அரங்கேற்றங் கண்டகள்ளி-ஆசை
அங்கேதள் ளக்கர்ம மிங்கேதள்ளத்
87✓
தள்ளித்தள் ளிநடந்தேன்-ஒரு
சத்தமிட் டாந்தையி டத்துவந்து
கல்லுக்கு ளேறிநின்று-சாயங்
காய்ச்சவண்ணான்சொல்லும்வாய்ச்சொல்லையும்
88✓
வாய்மையென் றேநடந்தேன்-தொண்டை
மண்டலத் தின்சோழ மண்டலத்தின்
சீமையெல் லாங்கடந்தேன்-அதி
சீக்கிரஞ் சீகாழி யூர்க்குள்வந்தேன்.
89✓
சீகாழி யூர்தனிலே-சென்று
செக்கடி வேம்பிலி ருக்கையிலே
ஆகம்பிரி யாத்தோழ-னானபொன்
னப்பனைக் கண்டேனென் னப்பனைப்போல்
90✓
என்னாணை வாருமென்றான்-அவன்
இருக்கையிற் புகுந்தேன் சருக்கரைபோற்
சொன்னா னுபசாரம்-பாலுஞ்
சோறுந்தந் தான்பசி யாறுமென்றான்.
91✓
பசிதீர்ந்து நித்திரைகொண்டேன்-அந்தப்
பாக்கியத் தானித்திரை போக்கியபின்
நிசிதீர்ந் தெழுந்திருந்தேன்-தம்பி
நில்லென் றவனுடன் சொல்லிக்கொண்டேன்
92✓
சொல்லிவாய் மூடுமுன்னே-வெகு
தூரம்வந் தேன்திரு வாளூரில்
அல்லார் குழலிபங்கன்-திரு
வாலய முங்கம லாலயமும்
93✓
கமலத்த டாகங்களுங்-கண்ணிற்
கண்டுடல் பூரித்துத் தெண்டனிட்டேன்
விமலகுக மாரருக்குக்-கருணை
மிக்கவி ரதம்வெள் ளிக்கிழமை
94✓
விமலர்கு மாரசட்டி-எல்லாம்
வித்தக மாயனுட் டித்தபின்பு
குமரன் திருவருளால்-முசு
குந்தனுக் கிந்திர னிடமிருந்தே
95✓
ஏதமி லாதிழிந்து-வந்த
ஏழ்விடங் கர்முதற் சூழ்விடங்காம்
வீதிவி டங்கர்தமைப்-போற்றி
விட்டக லாந்தநப் பட்டினத்தே
96✓
பகட்டான பேருடனே-கூடிப்
பத்துநா ளங்கேத ரித்திருந்தேன்
…………………………………………
…………………………………………
97✓
…………………………………………
…………………………………………
செட்டித் தெருதன்னிலே-ஒரு
சீராட்டுக் கலியாணம் பாராட்டினான்.
98✓
கலியாணச் சந்தடியில்-அசங்
காமற்சென் றேறினேன் மேன்மச்சின்மேல்
நலியா திருந்துகொண்டேன்-பின்னே
நடந்தது தொடர்ந்து சடங்கனைத்தும்.
99✓
சடங்கு நிறைவேறிச்-சோறு
சாப்பிட்டுப் பின்பெண்ணும் மாப்பிள்ளையும்
படங்கும றைவுக்குள்ளே-வச்சிரப்
பத்திசேர் மஞ்சத்தில் நித்திரைகொண்டார்
100✓
திரைநீக்கி யுட்புகுந்தேன்-மாயஞ்
சேவித்தேன் கைப்பொடி தூவிவைத்தேன்
அரைநாழி கைப்பொழுது-பதை
யாமற்கி டந்தார்ம தோன்மத்தமாய்.
101✓
மாயப் பொடிப்பலத்தால்-அந்த
மாப்பிள்ளை மார்பிலோர் ஆட்சுமைபோல்
தோயுஞ் சரப்பளியு-முத்துத்
தொங்கற்ப தக்கமுஞ் சங்கிலியுஞ்
102✓
சங்கைப் பணிகளெல்லாம்-ஒருநிமி
சத்திற்க முற்றியெ டுத்துக்கொண்டேன்
மங்கை கழுத்துடைமை-காதின்
மாணிக்கத் தாலிட்ட பூணுடனே.
103✓
உடைதார முத்தரீயம்-எல்லாம்
உச்சிக்கொண் டேனெனை மெச்சிக்கொண்டேன்
புடவைமுந் தானையிலே-கட்டிப்
பேசாம லேவந்தேன் வாசலிலே.
104✓
வாசற் கடைதிறந்தேன்-வெளி
வந்தேன டந்தேன்வி டிந்திடுமுன்
ராசகோ பாலமன்னார்-கோவில்
நாடியச் சாலையிற் கூடிக்கொண்டேன்
105✓
சாலைக்குட் கன்மடங்கள்-அன்ன
சத்திரந் தோறுந்த ரித்திருந்தேன்
காலாறி மெள்ளவந்தேன்-அள
காபுரி நேர்தஞ்சைக் கோபுரமும்
106✓
புரிசைச் சிகரங்களும்-சூழப்
பூவனம் பூத்தநந் தாவனமும்
வரிசைத் தெருவுங்கண்டேன்-மாட்டு
மந்தைக்கு மேற்கான சந்தைகண்டேன்
107✓
சந்தைக்கு மாமாகப்-பல
சாதியுஞ் சூழ்கடை வீதிகண்டேன்
அந்தத் தலந்தனிலே-சென்றங்
கமர்ந்துமெ லிந்தச டந்தேற்றச்
108✓
சடக்கெனத் தலத்திடைச்சி-ஒரு
தாய்க்கிழ விக்குச்செவ் வாய்க்கிழமை
மடத்தில் விடுதியென்றாள்-அந்த
மாதாவைக் கண்டேனென் தாதாவைப்போல்.
109✓
வைப்புச்செப் புள்ளதெல்லாம்-அங்கே
வைத்துவை யென்றுகொ டுத்துவைத்தேன்
முப்போதுஞ் சோறுமிட்டே-அவள்
முத்துப்போ லென்னைவ ளர்த்துக்கொண்டாள்.