திருச்செந்தூர் நொண்டி நாடகம்
முத்தாலங்குறிச்சி கந்தசாமிப் புலவர்
நொண்டி களரியிற் றோன்றல்3 / 7
திருச்செந்தூர் நொண்டி நாடகம் · முத்தாலங்குறிச்சி கந்தசாமிப் புலவர்
நொண்டி களரியிற் றோன்றல்
12விருத்தம்✓
ஏடவிழ் கடப்பந் தார னிசையினைப் பரவும் நொண்டி
நாடக மதனைப் பார்மே னடித்திடக் கெச்சம் பூண்டு
ஆடகப் பணிகள் மேனி யழகுற நொண்டி நொண்டி
நாடகக் களரி தோன்றி நவிலுவான் நவிலு வானே.
13ஆனந்தக்களிப்பு (சிந்து)✓
தெண்டிரை முத்தங்கொ ழிக்குந்-திருச்
செந்தில்வ டிவேலன் செம்புகழ் பாடத்
தொந்திவ யிறனைப் போற்றி-நானுந்
தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டினேனே.
14✓
செந்திரு மாதுசி றக்குந்-திருச்
செந்தின்மு ருகனைத் தேசிக னைப்ப
சுந்தோகை மேல்வரு வானைப்-போற்றித்
தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டி னேனே.
15✓
விப்ரர்வ ணங்குசெந் தூரில்-வந்த
வேதாந்த சற்குருவை நாதாந்தப் பொருளைச்
சுப்ரம ணியனைக்கொண் டாடி-நொண்டி
தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டி னேனே.
16✓
பருதிச்செவ் வேற்படைப் பெம்மான்-பசும்
பச்சைமயில் வாகனன் செச்சைத ரித்தோன்
சுருதிப்ப ழம்பொருளை வாழ்த்தி-நானுந்
தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டி னேனே.
17✓
ஒப்பாய்க்குப் பாயமுங் கட்டிக்-கொண்டைக்
குல்லாசாப் பொற்சரிகைச் சல்லாவுங் கட்டித்
துப்பாரு முத்துத்தொங்கல் பூட்டி-நானுந்
தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டி னேனே.
18✓
கண்ணாடி போற்சரிகை பதித்து -நானுங்
கால்வீசி வட்டமிட்டு மேன்மீசை திருத்திச்
சுண்ணாம்புக் கல்லுப்பல்லுக் காட்டி-நொண்டி
தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டி னேனே.
19✓
தேன்மொய்த்த பூச்செண்டு கட்டிச்-சமணர்
சிரத்தையுங் காலிற்பனை மரத்தையுங் கட்டிச்
சோமன்த லைவிருது கட்டி -நானுந்
தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டி னேனே.
20✓
மாயாவி தத்துக்கொரு வித்து-மலையாள
மந்திரமெல் லாம்படித்த விந்திர சித்து
தூயசன் மார்க்கசபை முத்து-நாலுந்
தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டி னேனே.
21✓
இகப்பற்றில் லாதுயிர் புரக்குஞ்-செந்தில்
ஏகன்ப ணித்தவிந்தத் தேகந்த னக்குஞ்
சுகத்துக்க மென்றவிரண் டுக்கும்-நானுந்
தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டி னேனே.
23✓
முருகன்பேர் நாவிலுச் சரிப்பேன்-செந்தில்
முத்தையனை வணங்காரைக் கேலிபண்ணிச் சிரிப்பேன்
குருபரனன் பறையுப சரிப்பேன்-சற்றுங்
கூசாம லெட்டாத தேசமுஞ்சஞ் சரிப்பேன்.
23✓
ஆறெழுத்தை மாத்திரஞ் செபிப்பேன்-அந்த
அச்சரத்தை யுச்சரியாத் துச்சனரை வெறுப்பேன்.
……………………………………………
……………………………………………
24✓
தீயர்தமைத் துரும்பென ..... .....
...... .....
...... ..... மதியேன்-மின்போற்
செத்துப்பி றக்கின்ற தெய்வங்களைத் துதியேன்.
25✓
நன்மார்க்க மறியாத மூடம்-இந்த
நாட்டுக்கு ளெத்துமெத்தச் சூட்டுங்கி ரீடம்
துன்மார்க்க வித்தைக்குரு பீடம்-நானும்
தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டி னேனே.
26✓
ஆகட்டு மார்க்கும்வந்து நட்டம்-கைகால்
அல்லாமற் போனதென் பொல்லாவ திட்டம்
தோகைக்க டவுளிட்ட சட்டம்-நொண்டி
தொந்தோமென் றாடிக்கொளத் துயங்கட்டி னேனே.