திருச்செந்தூர் நொண்டி நாடகம்
முத்தாலங்குறிச்சி கந்தசாமிப் புலவர்
மருச்சிந்து துணர்க்கடம்பன்5 / 7
திருச்செந்தூர் நொண்டி நாடகம் · முத்தாலங்குறிச்சி கந்தசாமிப் புலவர்
மருச்சிந்து துணர்க்கடம்பன்
110விருத்தம்✓
இடைச்சிதன் மனையிற் கிட்ண
னெனவவள் வளர்க்கு நாளில்
கொடைத்தரு சாகோசி யூருங்
குடிகளு மலைந்த வாறும்
படைச்செயத் தளவாய் வந்து
பாளையஞ் செய்த வாறுந்
தொடைச்செழுந் தமிழாற் பாடிச்
சொல்லுவேன் சொல்லு வேனே.
111சிந்து✓
மருச்சிந்து துணர்க்கடம்பன்-வானவர்சத்
துருச்சிந்த வேற்படை தொடுத்தபிரான்
தருச்சிந்து மலர்ப்பொழில்சூழ்-சந்தவரைத்
திருச்செந்தி லூர்புரந்த தேவதேவன்
112✓
வள்ளிப்பெண் மணவாளன்-மரகதப்
புள்ளிக்க லாபமயிற் புரவியினான்
தெள்ளித்தெ ளிந்ததமிழோர்-செய்யும்வினை
தள்ளிக்க ருணைதருஞ் சண்முகத்தான்.
113✓
சேவலங் கொடிவீரன்-செந்திலெந்தை
ஆவலுடன் புரக்கு மண்டலத்தில்
பூவுல கினிற்சிறந்த -புகழ்பெற்ற
நாவலோ கம்பெருந் தீவுதன்னில்
114✓
பூமகள் திருமனைபோற்-பொன்செய்த
மாமதில் சூழ்சோழ மண்டலத்திலே
ஆமெனக் கொலுவிருக்கும்-அவட்கொரு
தாமரை போற்சிறந்த தஞ்சையிலே.
115✓
தீட்டிய பெரும்புகழான்-செழித்தம
ராட்டியத் துரைகளிற் றாட்டியவான்
கூட்டிய நிதிகோடி-தேடிக்கொடி
நாட்டிய கோசிக நரபாலன்.
116✓
பாலக னெனவுதித்தோன்-பாவையர்க்கு
வாலசொ ரூபமன் மதராயன்
பூலோகத் தரசர்மெச்சும்-புத்திவாய்ச்
சாலகன் சாகோசி மகராசன்
117✓
மாமுகில்சா கோசிமன்னன் மதுமலர்த்
தாமப்பு யனிலைய தம்பியுடனி
ராமனி லக்குவனென்ன-இருந்திந்தப்
பூமண்ட லமனைத்தும் புரந்திடுநாள்
118✓
இசைபெற்ற மதுரையிலே-மலையத்து
வசனற்கு மாரிசெய்த துரைத்தனத்தில்
நிசமுட னரசுசெய்து-நீதிபுரிந்
தசையா மணிகட்டு மாதீனத்தில்
119✓
உற்றசொக்க நாதேந்திரன்-உதவிய
வெற்றிரங்க கிட்ணமுத்து வீரேந்திரன்
பெற்றெடுத்த வரபாலன்-பிரவுடிக
கொற்றமனு ராசர்தொழக் கொலுச்செய்கு வோன்.
120✓
அஞ்சலர் குறும்படக்கி-மைதுருஞ்
செஞ்சியுந் தஞ்சையுந் திரையிடவே
மிஞ்சிய மனுவேந்தன்-எளியவர்
தஞ்சம தானசமத் தானபதி.
121✓
வெங்கட கடகளிற்றான்-விசைய
ரங்கதிரு மலைச்சொக்க நாதேந்திரன்
சங்கைச் சமத்தானந்-தன்னிலொரு
சிங்கே றெனவந்த செயவீரன்.
122✓
அரசர்க்கு மகுடரத்தினந்-தளவாய்
நரசப்ப னுதவிய நரபாலன்
திரையுற்ற கடற்படையாற்-செயங்கொண்டு
தரைமுற்றுந் திறைகொண்ட தளராயன்
123✓
வீரத்தில் விக்ரமார்க்கன்-புத்திவிவ
காரத்தில் பட்டிதனை நேரோத்தக்கார்
பார்மெச்சுஞ் சதுர்வேதன்-பணிந்தோர்க்குப
காரத்து ரையெனுங்கு மாரத்தளவாய்
124✓
மறுமன்யர் குறும்படக்க-வேணுமென்று
மாத்தார்ம லுக்குடன் மேத்தாருகான்
தறுகண்ணன் சத்தரேகான்-தாரேகான்
சவ்வாசு கான்கோரி நல்வாகுகான்.
125✓
வரகலை கான்சருவாணி-பீருகான்
வாவாகா னூகான்பத் தேகானேகான்
கிரிதேச மெச்சுந்துலுபு-கான்பரித்
திரள்செறி மீருகா னாதிறுவெக்கு
126✓
மதப்புலி கன்னிசாய்பு-இமாமுகான்
மதப்புலி கான்சாய்பு மம்மதுமதார்
சதுர்ப்பண்ணும் அவுதல்அலி-பக்கீரு
சாய்புஅ வுதல்பட்சி தல்லீதுகான்.
127✓
திறற்றுறை யூரிஸெட்டி-வல்லவன்
தேசமெல்லாந் திறைகொண்ட ராயர்தொண்டைமான்
மறப்படைத் தளவீரர்-கம்பளத்தில்
மாய்மாலச் செகவீர ராமவெட்டமன்.
128✓
ராசர்பு கழ்வசீகரன்-இரகுவீர
ராமகட் டபொம்மு நரபாலன்
வாசற்பிர தானியான்-தளசிங்க
மதியன்கு மாரசாமி அதிகாரி.
129✓
நால்வகைப் படையுடனே-விசைய
ரங்கதிரு மலைச்சொக்க நாதனருளாற்
சீலன்கு மாரத்தளவாய்-சந்திமலைத்
திருக்காட்டுப் பள்ளியெனுஞ்
சதுர்க்கோட்டைமுன்
130✓
விருதுமன் னியர்நடுங்கப்-பஞ்சுபட்சி
வேளைய றிந்துவந்து பாளையஞ்செய்தார்
பருதியு தயகிரியுஞ்-செங்கனகப்
பாரமலை யும்போற் கூடாரமடித்தார்.
131✓
போர்வெல்லுஞ் செயத்தம்பம்போற்-கூடாரப்
புறத்தினி சான்களு நிறுத்தினரே
கார்செல்லுங் கருமலைபோற்-கட்டினார்
கடகரித் திரள்முற்று மிடையிடையே.
132✓
பார்க்கடல் வளைந்ததுபோற்-சுற்றெல்லாம்
பரித்திரள் முற்றுங்கட்டி நிறைத்தனரே
ஏர்ப்படைப் பொந்திலியரும்-வடுகரும்
இடங்கொள்ப டங்குதொறு முடங்கினரே
133✓
வன்னியரு மறவர்களும்-நிழல்தேடி
மரந்தோறு மிருந்தனர் நிரந்தரமாய்த்
தன்னிகரி லாததளவாய்-விருதுநி
சான்கண் டாசாரந் தான்கண்டபின்
134✓
பரந்திடு மருவலர்மேற்-புலிபோலப்
பாயுங்கு மாரத்தள வாயுடனே
வருந்திறல் வீரரெல்லாந்-திசைசக்ர
வாளந டுங்கிடச்ச ராளம்வந்தார்
135✓
சாடிய பாளையத்தார்-குதிரைப்படை
தஞ்சைக்கோட்டை வாசன்மட்டும் மிஞ்சிவரவே
கூடிய சனங்களெல்லா-மவரவர்
கூசாமற் றம்மிலே யோசனைசெய்தார்
136✓
செஞ்சித் தளமல்லவே-மைதுராமிச்
சேரிவே லூருத் தளமல்லவே
ஒஞ்சிப் பொருவர்களோ-இவர்நம
துளவெல்லா மறிந்த தளமாச்சே.
137✓
அரமனைத் தளங்கள்வந்தால்-ஊரைக்கொள்ளை
யாடிச்சு றையிட்டுப் போடுவாரே
வரமன தில்லாதபேர்-இருமென்று
வலசையும் வாங்கினார் நிலவரமாய்
138✓
மாடமும் பாராமல்-கட்டுமச்சு
மாளிகையுஞ் சூளிகையும் பாராமற்
கூடமும் பாராமல் -நீராவிக்
கொல்லையும் பூங்காவும பாராமல்
139✓
மெத்தையுங் குத்துவிளக்குஞ்-சோறுண்ட
வெள்ளிப்பள் ளையாமும் பாராமல்
பத்தரைமாற் றுத்தங்கம்போல்-சுட்டிநின்ற
பந்திக்கு திரைதனைப் பாராமல்
140✓
தேவியைத் தேடாமல்-தான்பெற்ற
சிசுக்களைப் பசுக்களைத் தேடாமல்
ஆவியைத் திரவியம்போல்-ஒதுக்கிக்கொண்
டாவென்ற லறிக்கொண்டு போவாரும்
141✓
வனத்திடைப் புகுவாரும்-இண்டஞ்செடி
மறைப்பிற்கி டந்துகைகால் விறைப்பாரும்
இனத்தொடுங் கூடிச்சென்று-மடங்களில்
இடக்கை தலைக்குள்வைத்துச் கிடப்பாரும்
142✓
ஆடலப் புரவியேறித்-திரிந்ததுபோய்
அடப்பத்தைத் தோளிலிட்டு நடப்பாரும்
பாடகக் கான்மடவார்-பாக்குத்தின்ற
பவளச்செவ் வாய்நுரைக்கச் செல்வாரும்
143✓
ஒவ்வாத கருமஞ்செய்தார்-மதுரையர்
உளவறிந் தாரென்று தளர்வாரும்
இவ்வாறு சனங்களெல்லாங்-கல்லதர்பற்றி
ஏனாதி யூர்விடியப் போனார்களே.
144✓
வலசையும் வாங்கிப்போனார் -வீடுதொறும்
வாசல்தொறு மாயர்பாடிப் பூனையைப்போலே
கலசமா டித்திரிந்தேன்-சலித்திரு
கால்சடைந்து வந்திருந்து யோசனைசெய்தேன்.