முருகன் App
க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ்
காஞ்சிபுரம் சிதம்பரமுனிவர்
காப்பு1 / 11
க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் · காஞ்சிபுரம் சிதம்பரமுனிவர்

காப்பு

1விநாயகர்✓
ஓங்கார வடிவுகொண் டொருகுடிலை தனினாதம்
ஓங்குபிளி றாமுழக்கால்
ஓரைந்து கலைகளும் மந்த்ரபத வன்னமும்
உபாதான மூன்றிலைந்தேழ்
ஆங்கார முதலான தத்துவமோ டண்டமுண்
டாக்கமுத லைந்துவிளையாட்
டாடுமா னந்தவனம் வளர்குஞ் சரக்கன்றின்
அடிமலரை யஞ்சலிப்பாம்
ஊங்கார மொன்றிலே சூர்மாவை வென்றருளும்
ஒளிர்வேல னாறுமுகவன்
ஒருபரம் பொருளெம்மை யாளருண கிரிநாதர்
ஓதுந்தி ருப்புகழெனும்
தாங்கார மணிமார்ப னம்புவியி லொருநூறு
தலமேவு குமரகுருவின்
தண்டைகிண் கிணியணி சரணங்கள் புகழுநந்
தமிழ்மாலை தழைகவென்றே.