க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ்
காஞ்சிபுரம் சிதம்பரமுனிவர்
சிறுதேர்ப்பருவம்11 / 11
க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் · காஞ்சிபுரம் சிதம்பரமுனிவர்
சிறுதேர்ப்பருவம்
92சிவசுப்பிரமணியம்✓
அவனிக்கு ளேகுருடு மலடுசெவி டுமைமுடம்
அருவருத் திடவேமிக
அழுகிவரு குட்டங்கள் வாதபித் தஞ்சயம்
சீரணமி ளைப்பொடிருமல்
நவமுற்ற கண்படல முன்மத்தம் வயிறுவலி
நாலாமு றைச்சுரமுதல்
நாலா யிரத்துமே னானூ றுடன்கூடும்
நாற்பதுட னெட்டுநோயும்
பவசத்த சாகரமு முற்றபே ரெவருமுன்
பத்தசன முண்டெறிந்த
பரிகலச் சேடத்தீ னாலொழித் தானந்த
பரமசுக மாகவைக்கும்
சிவசுப்பிர மணியத்தில் வருசுப்பிர மணியனே
சிறுதே ருருட்டியருளே
தேர்ப்பிரம் பாற்பிணி யொழித்தருள் வைத்தியா
சிறுதே ருருட்டியருளே.
93அரிப்பாடி✓
உன்னருட் சந்நிதியில் வாய்தற் கபாடமேல்
ஒண்திருக் காப்பின்றியே
உயர்பூசை செய்யத்தி றந்திருந் திடும்வேலை
யுஞ்சரித் திடும்வேளையும்
தன்னெல்லை வட்டத்தி லிரவிலும் பகலிலும்
சஞ்சரித் திடுமுயிர்களைத்
தரும்செம் மணிக்கண் சிவந்திடச் சீறிமுன்
தன்பலமெ லாங்காட்டியே
பன்னகம் பகுவாய் திறந்தோடி வந்துமேற்
பல்லழுந் தத்தீண்டினும்
பலவருத் தஞ்சோக மரணமொன் றின்றியே
பாரின்மேல் வாழவைக்கும்
தென்னரிப் பாடிவா ழொருகுமர நாயகா
சிறுதே ருருட்டியருளே
சேரர்மெய்ச் செங்கோல் செலுத்துமலை நாடனே
சிறுதே ருருட்டியருளே.
94திருவஞ்சைக்களம்✓
புகழ்கொண்ட மலைநா டதற்குளஞ் ஞாரினில்
பூதநா யகனருளினால்
பூவுலகு தொழுமால காலசுந் தரரண்டர்
பொன்னுலகி லுவாவின்மேலும்
பகர்சேர மான்குதிரை மேலும்வட கயிலைமேற்
பரமசிவ னுங்கவுரியும்
பரமகுரு நின்னோடு வீற்றிருப் பதுதொழப்
பயணம்பு றப்படும்போ
தகிலத்து மாயைழு விருளையு மறத்துறந்
தவர்பின் தொடர்ந்துபோனால்
அவர்க்கடிமை யாகலா மவர்பின்பு போகாமல்
அவமே யிரந்தலைந்தேன்
திகழுமஞ் சைக்களத் தப்பனரு ளாறுமுக
சிறுதே ருருட்டியருளே
சிறியனேன் விழிகாண இப்போது முருகநீ
சிறுதே ருருட்டியருளே.
95திருக்கோகரணம்✓
ஏகநா யகன்கயிலை இமையவர்கள் தம்பிரான்
இராவண னுள்ளமகிழ
ஈந்துசிவ லிங்கமொன் றீதுதரை வையா
திலங்கையிற் கொடுபோவெனச்
சாகரத் தின்கரையில் வரும்வேளை யொருபிரம
சாரியாய் வாங்கியதனைத்
தரைவைக்க அதுசத்த பாதாளம் வேருறச்
சமர்செயுமி ராவணன்றன்
ஆகமொரு பந்தென வெடுத்தண்ட கூடமுற
அம்மானை யாடிவிளையா
டதிபலப ராக்கிரம விநாயகன் மகிழ்தம்பி
அம்பரவை ரத்தினாகரச்
சீகரம் வந்துலவு கோகரணம் வாழ்முருக
சிறுதே ருருட்டியருளே
சிவன்மகா லிங்கபெல லிங்கமூர்த் தியருள்குக
சிறுதே ருருட்டியருளே.
96திருச்சயிலம்✓
உருச்சிகர தரிசனஞ் செய்தோர் பிறப்பொழித்
துயர்முத்தி யுதவுசயிலம்
உனக்குமயில் தந்திடக் காசிபன் தனைமுன்னம்
உயிரினை விடுத்தசயிலம்
கருச்சுமையி தென்றுடலை யருவருத் திடுபெரியர்
காயங்கள் நீக்குசயிலம்
கந்தநீ தந்தையைப் பூசித்த சயிலமுன்
கங்கைசூழ் காசிமகிமை
அருச்சனை செயுந்தலைவி மகிழவே கும்பமுனி
அன்போ டுரைத்தசயிலம்
அனந்தமடி யார்சிறிய சிலையெலாம் சிவலிங்க
மாமென் றணிந்தசயிலம்
திருச்சயில மலைவா ழருட்டரும நாயகா
சிறுதே ருருட்டியருளே
தென்மருதி லிடைமருதில் வடமருதில் வாழ்முருக
சிறுதே ருருட்டியருளே.
97கார்த்திகைமலை✓
தவசநீ செய்தரனை யார்ச்சித் திருந்தகிரி
தவசநீ செய்திடுதலால்
தரைமாதர் விண்மாத ரொருவரணு காதகிரி
சகமறிய வும்புசித்துப்
பவமொழித் தருள்பெறவு மையநீ யுண்டசெம்
பவளவாய் நின்றுவழியும்
பைம்பொனிமை யாசலத் துமையம்மை திருமுலைப்
பால்திரண் டேவளர்கிரி
அவனிபுகழ் காசிகண் டக்கதையை நீமுன்
பகத்தியர்க் கோதியகிரி
அம்பொதிய முனிபன்னி யுடனுன்ப தாம்புயம்
அர்ச்சித்து வாழ்த்தியகிரி
சிவசாமி கார்த்திகை யெனுங்கிரியில் வாழ்முருக
சிறுதே ருருட்டியருளே
சிவகாமி நாதர்பர தத்துவ மெனுங்குமர
சிறுதே ருருட்டியருளே.
98உச்சினி-அவந்திகை✓
கற்பக மெனுங்காசி புரிகாஞ்சி புரிதுவா
ரகாபுரி அயோத்தியாபுரி
கருதுமது ராபுரி கவின்கொள்மா யாபுரி
கலந்தவோ ராறுபுரியோ
டற்புதமி குந்திடும் தன்னோடு சத்தபுரி
யாகியே நின்றருள்புரி
அரனருளி னாற்பஞ்ச பாண்டவர்கள் விக்கிரம
வாதித்த ரேயாதியாப்
பொற்புடைய மன்னவர்க ளாண்டபுரி வாகீசர்
போற்றுபுரி காளிதாசன்
போற்றுமா காளிபூ சித்தபுரி எண்ணிலாப்
புண்ணியர்கள் வாழ்ந்திடுபுரி
சிற்பரா நதிபெருக வந்திகா புரிமுருக
சிறுதே ருருட்டியருளே
செகமெலா முச்சினி யென்னவரு புரிமுருக
சிறுதே ருருட்டியருளே.
99பிரயாகை✓
சறுவசக மும்பெற்ற சங்கரி வலம்புரிச்
சங்கமாய் வந்ததீர்த்தம்
சகலமறை யாகமபு ராணசாத் திரமிருதி
தானுவந் தோதுதீர்த்தம்
குறுமுனிவன் முதலான முனிவரர்கள் கோடிபேர்
கொண்டாடி யாடுதீர்த்தம்
குளிர்மகர மாதத்தில் மனிதரும் தேவரும்
கூடியே மூழ்குதீர்த்தம்
நிறையுலகர் வலியவே காயங் கொடுத்தவர்
நினைந்தபொருள் வாங்குதீர்த்தம்
நினைவரிய பாதகர்கள் மூழ்கினா லவர்களையும்
நின்மலர்க ளாக்குதீர்த்தம்
திரிவேணி நிறையும்பிர யாகைநகர் முருகனே
சிறுதே ருருட்டியருளே
சீவனுடன் வாழ்பவர்கள் கேட்டவர மருள்முருக
சிறுதே ருருட்டியருளே.
100கயை✓
அறந்தவிரொர் பெரியகெய வசுரனது முடியின்மேல்
அம்பிகா நாதனுமையாள்
ஐங்கரன் அண்ணல்நீ யரியாதி பதினெண்மர்
அருளுடன் பாதம்வைத்து
நிறைந்ததல மீதென்ன நின்றதன் னெல்லையைமெய்
நீங்கினோர் கோத்திரத்தில்
நின்றவர்கள் மூவேழு தலைமுறையுள் ளோர்பிறர்
நினைத்துவந் தடிமிதித்தால்
இறந்தவர்கள் நாலேழு கோடியெனும் நரகத்
திருந்தாலும் மண்ணில்விண்ணில்
இறப்பொடு பிறப்புற் றிருந்தாலும் முத்திமலை
யேறவே யேணிவைக்கும்
சிறந்தபற் குனிநதி நிறைந்தகெயை வாழ்முருக
சிறுதே ருருட்டியருளே
செத்தவர்கள் பிறவாத முத்திதரு குமரனே
சிறுதே ருருட்டியருளே.
101கேதாரம்✓
அறம்பொருள்க ளின்பம்வீ டருணந்தி யாரூர
ராதியோர் மேவுகயிலை
யங்கிரிக் குத்தெற்கி லக்கமே யிருபதுடன்
ஐயாயி ரம்படியெனும்
நிறைந்தமலை யுண்டவையுள் முதன்மலையி தாதலால்
நின்னைக்க வானில்வைத்து
நீண்மந்திர சிங்கா தனத்தம்மை யுடன்மேவு
நிருமலன் வெள்ளிவெற்பில்
பிறந்திறந் துழலாம லானந்த அமுதுண்டு
பெருவாழ்வு பெற்றிருக்கப்
பேராசை யுற்றோர்ச ரீர்த்து டன்வரப்
பெரியவருள் முத்திவாய்தல்
திறந்திருக் குஞ்சிவன் கேதாரம் வாழ்முருக
சிறுதே ருருட்டியருளே
தேகம்விட் டுன்சந்நி திக்கடிய னேன்வரச்
சிறுதே ருருட்டியருளே.