முருகன் App
க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ்
காஞ்சிபுரம் சிதம்பரமுனிவர்
சிற்றிற்பருவம்9 / 11
க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் · காஞ்சிபுரம் சிதம்பரமுனிவர்

சிற்றிற்பருவம்

72வயலூர்✓
முற்று நிறைந்த பரமசிவன்
முன்னே கலியா ணஞ்செய்த
முழுது முடையா ளேவல்செய்ய
முளரிப் பொகுட்டில் வீற்றிருந்தே
உற்ற வன்னக் கொடிநாட்டி
யொண்பா லன்னம்தமக்கேற
உகந்து சமைக்கும்பிரமன்முத
லுயிரா மனந்தந் தாதிகள்தாம்
பற்று மிகுந்து விளையாடப்
பாரா வார மேழுடுத்த
பாரேழ் முதலா நாதாந்தம்
பல்லா யிரமாங் கோடியண்டச்
சிற்றி லிழைத்த உமைமகனே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செந்நெல் மிகுந்த வயலூரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
73கங்கைகொண்ட சோழபுரம்✓
மங்கை பாகர் பெருவுடையார்
மகிழக் கருவூர்ச் சித்தரவர்
வார ணாசி நிறைகங்கை
வானாற தற்குட் குடங்கள்வைப்ப
இங்கு ளாழ்ந்த விடத்துளந்த
இலக்க கங்கைக் குடங்கள்வர
எடுத்தே யாட்டி நிவேதனத்தை
இன்போ டருத்திச் சராசரங்கள்
எங்கு நிறைந்த படிகாட்ட
இலங்கு மகத்தாம் விமானஞ்செய்
எழிலார் சோழர் சித்தார்சென்னி
ஈசர் செங்கை வைத்தருளும்
கங்கை கொண்ட சோழபுரக்
கந்தா சிற்றில் சிதையேலே
கருணா நிதியே சிறியேஞ்செய்
கவினார் சிற்றில் சிதையேலே.
74திருநாரையூர்✓
முகில்போற் பொழியு மூவர்திரு
முறைகண் டெடுக்கச் சோழேசன்
முக்கா லத்தி னியல்புணர்ந்த
முத்தர் நம்பி யாண்டார்தாள்
புகழ வங்கே நிவேதித்த
பொற்பார் மோத காதியெல்லாம்
பொருந்தத் துதிக்கை யாலெடுத்துப்
பொசிக்க வவர்தாம் பின்கேட்க
மகிழெங் கரத்தோன் கனகசபை
வாயு திக்கி லிருக்குதென்றே
வந்தே யருளத் திருமுறையால்
வைய மெல்லாம் வாழவைத்துத்
திகழு நாரை யூர்க்குமரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
தெய்வக் குறப்பெண் மணவாளா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
75குன்றத்தூர்✓
காக்க நம்பி யாரூரர்
கவினார் திருத்தொண் டத்தொகைக்குக்
காரார் சோலை நாரையூர்க்
கரிமா முகத்தோன் பொருளுரைக்க
ஆக்க மெழுபத் தின்மூவ
ரணிசேர் கதையெல் லாமடக்கி
அறைந்த நம்பி யந்தாதி
அரிய சிற்றம் பலத்துள்ளே
தூக்கும் பதத்தோன் திருவாக்குத்
தோன்ற வுலகெல் லாமென்று
சொல்ல வெல்லா மறிந்துதிருத்
தொண்டர் புராணம் விரித்துரைத்த
சேக்கி ழார்வாழ் குன்றத்தூர்ச்
சேயே சிற்றில் சிதையேலே
தெய்வ யானை மணவாள
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
76எருக்கத்தம்புலியூர்✓
வைய முய்ய மதுரேசன்
வந்து பலகை யிடப்பெற்றோர்
மறைநூற் சம்பந் தப்பெருமான்
வடிவா நீபா ரும்பதிகம்
கையில் யாழ்கொண் டிசைபாடும்
கருணைக் கடலாம் திருநீல
கண்ட ராகும் பெரும்பாணர்
களிகூர்ந் திருந்த பதிக்குமரா
தையல் பாக னருள்பெறவே
தடமொன் றமைத்துத் தடமேல்பால்
தண்பூங் கோயில் சமைத்தருட்கை
தன்னால் மகிழ்ந்து சிவபூசை
செய்யு மெருக்கத் தம்புலியூர்ச்
சேயே சிற்றில் சிதையேலே
செந்தா மரைப்பூஞ் சிற்றடியால்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
77விருத்தாசலம்✓
அத்தா வமரர் தமக்கிடர்செய்
அறிவி லாக்கிர வுஞ்சகிரி
அசுரர் மடவார் சிறுவீட்டை
அழித்த தெனவே பரசமயர்
பித்தா பாச மொழிந்தீசன்
பெருமை புகழு மடவார்கள்
பெருகி வாழ நின்னடியார்
பெம்மா னின்னா லயங்களெல்லாம்
முத்தா நதியின் மணலாலே
முயன்றே யமைத்துத் திருக்கோயில்
முருகா உன்னை ஐங்கரனை
முக்கட் பெருமான் திருவடியைச்
சித்தா முமைகங் கையைப்பூசை
செய்வோஞ் சிற்றில் சிதையேலே
செல்வ விருத்த கிரிக்குமரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
78திருநாவலூர்✓
தேவ தேவன் சிவனையன்றித்
திருமா லயன்வா சவனமரர்
திருப்பாற் கடலைக் கடைந்திடவே
சினந்து வெங்கா ளந்துரத்த
ஆவி விடுமென் றரிபிரமர்
அமரர் கோமா னமரரெல்லாம்
அஞ்சி யோடி வந்திடுநாள்
அகில நாதன் திருக்கயிலை
மேவுங் கண்ணா டியிற்றோன்றி
வெங்கா ளத்தை யெடுத்தளித்த
விமல வருட்சுந் தரனுலகம்
விளங்கத் திருவவ தாரஞ்செய்
நாவ லூர்வாழ் குமரகுரு
நாதா சிற்றில் சிதையேலே
நாங்க ளுனக்கு வழியடியோம்
நாட்டுஞ் சிற்றில் சிதையேலே.
79திருவெண்ணெய்நல்லூர்✓
பொய்கண் டகன்ற அம்மையப்பர்
புகழ்சேர் மைந்தன் தனைவேண்டிப்
புகலிக் குழந்தை திருமுறையிற்
போற்றிக் கயிறு தனைச்சாத்திக்
கைகொண் டவர்கள் தொழுதேவெண்
காட்டின் திருப்பாட் டெடுத்துள்ளம்
களித்தே வந்து முக்குளநீர்
கண்டே படிந்தோர் பாலுதித்து
மைகொண் டிலங்கு மணிகண்டன்
வளருங் கயிலைத் திருநந்தி
மறையா கமத்தைக் குழந்தையெனும்
வடிவாய்த் தமிழ்செய் சுவேதவன
மெய்கண் டவன்வாழ் வெண்ணெய்நல்லூர்
வேலா சிற்றில் சிதையேலே
விளையாட் டோரைந் துடையாய்நீ
விளங்குஞ் சிற்றில் சிதையேலே.
80திருவாமாத்தூர்✓
எம்பால் வந்தீ ரிரட்டையர்நீர்
எம்மைப் பாடு வீரென்றே
எம்மா னருளத் திருமுன்னே
இருந்தே கலம்ப கம்பாடச்
செம்பா கஞ்சேர் கலம்பகத்திற்
சிறந்த கங்கை மேற்கரையில்
திகழா லயங்கொண் டாரென்று
செப்பப் புலவ ரதேதென்ன
நம்பா நாங்க ளுரைத்தபடி
நதியைக் கீழ்பால் திருப்பென்ன
நாத னருளால் வடக்குவிட்டு
நண்ணுங் கீழ்பாற் பெருகிவரும்
பம்பா நதிசூழ் ஆமாத்தூர்ப்
பாலா சிற்றில் சிதையேலே
பச்சை மயில்வா கனனுன்னைப்
பணிவோஞ் சிற்றில் சிதையேலே.
81திருவதிகை✓
மெய்யன் பாகி யொருதாதி
விழவார் பழனத் துமாபதியே
விளங்கென் னுயிர்நா யகனென்று
விழிநீர் பொழியத் தினம்பாடிக்
கையில் வீணை யுடனுலகம்
காணக் கயிலை மேவியுமை
கணமா கச்சொன் மாலையென்றே
கல்லுங் கரையப் பதிகஞ்சொல்
ஐயன் திருநா வுக்கரசின்
அருட்கை யுழவா ரப்பணியும்
அம்மை யெமையாள் திலகவதி
யார்தம் பணியும் சிவன்திருமுன்
செய்யும் அதிகை மாநகர்வாழ்
சேயே சிற்றில் சிதையேலே
சேவற் கொடியாய் திருப்பத்தத்தால்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.